புதிய உதயம் – 6 வது பகுதி.
சொல்லு நண்பனே சொல்லு !
ஏன் நமது இதயம் இப்படி சிறுத்துக்
கிடக்கிறது ?
ஏன் அது இத்தனை சிக்கல்களுக்கு
இடையில் சிதைபடுகிறது ?
ஏன் மூளையின் நரம்புமண்டலம்
இதயத்தில் படரவில்லை ?
ஏன் இந்த நிற்காத நினைவரட்டையில்
உன்னை சிக்கவைக்க
மனதிற்கு இத்தனை வலிமை ?
ஏன் அமரத்துவ வாழ்விற்குப் பறக்க
சிறகு செய்யும் இதயத்திற்கு
இந்த ஓர வஞ்சனை ?
இணைபிரியா வழிநடக்கும் நண்பனே
சொல்லு !
ஏன் நாம் இப்படி
மடையர்களாயிருக்கிறோம் ?
ஏன் நாம் இப்படி எதற்கும் பயந்த
எலிகளாய் பொந்தில் வாழ்கிறோம் ?
ஏன் நாம் சிறகடித்து
விடுபடக்கூடாது ?
ஏன் இதயத்திற்கு வலிமை
கூட்டக்கூடாது ?
ஏன் நாம் அன்பே ஒழுக்கமாய்க்
கொண்ட புதிய மனிதனாக்க்கூடாது ?
இது எளிது, மிக எளிது !
ஆழமாக மூச்சை உள்ளிழுங்கள்,
நேசக்கரம் நீட்டுங்கள் –
உங்களுக்கும் உங்கள் எதிரில்
இருப்பதற்க்கும்!
“ அல்லி நிரம்பிய குளம் ,
மென்மையும் கம்பீரமுமாய் ! “
அவைகளுக்குத் தெரிகிறது அன்பின்
சுவை !
அதனால்தான் அவை வளர்ந்து
நறுமணமாய் உருமாறி
பறக்க
ஆரம்பித்து விடுகின்றன.!
ஓ! எனது மன்னர்களே ! ராணிகளே !
நீங்கள் அழியாத உலகத்தின் தன்னிகரில்லா
உயிர்கள் !
சிறகுகளுடன் மண்ணில் தவழாதீர்கள் ,
இந்த முழு அண்டமும் உங்களுக்குச்
சொந்தம் !
….தொடர்ச்சி அடுத்த இதழில்