வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

இன்றைய மனிதனுக்குள்ள பகல் கனவின் பாதிப்பு.

ஒரு அமெரிக்க ஹார்வேர்டு பல்கலைகழகம் 2200 க்கும் மேற்ப்பட்டவர்களிடம் அவர்களது எண்ணங்கள் மற்றும் மனோநிலை பற்றி ஒரு சர்வே எடுத்தது.

“மக்கள் தாங்கள் விழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பாதியளவு நேரம் பகல்கனவு காண்பதிலேயே கழிக்கிறார்கள்” என்ற செய்தி BBC யில் விளக்கப்பட்டது. நம்மைச் சுற்றி எல்லோரும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதிசயம் என்னவென்றால் இந்த உண்மையை ஒத்துக் கொண்டிருப்பதுதான். ஒரு US  ஹார்வேர்டு பல்கலைகழகம் ஐ போன் மூலமாக நடத்திய ஒரு ஆய்வு 2200 க்கும் மேற்ப்பட்டவர்களை சென்றடைந்தது. அவர்கள் அவர்களது பகலிலும் இரவிலும் தங்களது மனேநிலையை மற்றும் எண்ணங்கள் ஆகியவற்றை கணக்கெடுக்கும் ஒரு சர்வேக்கு தங்களை ஒப்புக் கொடுக்கும் ஒரு அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து கொண்டனர். தொடர்பு ஏற்படுத்திக் கொண்டபின், இந்த பங்கெடுப்பாளர்கள் பட்டியலிலிருந்து தாங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று தேர்ந்தெடுத்து, அதைப் பற்றி அவர்கள் உண்மையிலேயே நினைத்துக் கொண்டிருப்பது என்ன? அவர்கள் உணர்வது என்ன? மகிழ்ச்சியா, சோகமா? என்று குறிப்பிட வேண்டும். சில பங்கெடுப்பாளர்கள் தாங்கள் களவி புரியும் போதுகூட அதைப் பற்றிய கருத்து தெரிவிக்க தயாராக இருந்தது மிகவும் அசுரத்தனமாகத்தான் தெரிகிறது.

2,50,000 ஆய்வு முடிவுகளை திரட்டிய பின் இந்த ஹார்வேர்டு குழு இந்த கணக்கெடுப்பில் கலந்து கொண்ட மக்கள் அவர்கள் விழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் 46.9 % நேரம் மனம் பகல்கனவு காண்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர். ஆய்வுக்குழுவில் ஒருவரான டாக்டர் மாத்ஸூ கிங்ஸ்வெர்த், “பகல்கனவு என்பது எல்லா செயல்களையும் கடந்தது. அனைத்து செயல்களுக்கும் பொதுவானது. நமது மனோரீதியான வாழ்வு, நிகழ்காலத்தில் இல்லாமல் கனவில் வாழும் அளவு நம்மை ஆக்ரமித்துக் கொண்டுள்ளது என்பதை இந்த சர்வே காட்டுகிறது.” என்று கூறுகிறார்.

ஓஷோ தனது    The Discipline of Transcendence, Vol. 2,  che 2  question  1  ல் கூறுகிறார்,

“மனித மனம் பகல்கனவு காண்பதற்க்கு மிகவும் உதவக் கூடியது. நீ மனதை கடந்து போகாத வரை நீ பகல்கனவு காண்பதை தொடர்வாய். ஏனெனில் மனதால் நிகழ்காலத்தில் இருக்க முடியாது. அதனால் அது ஒன்று கடந்தகாலத்தில் இருக்கும், அல்லது எதிர்காலத்தில் இருக்கும். மனம் நிகழ்காலத்தில் இருக்க வாய்ப்பேயில்லை. நிகழ்காலத்தில் இருப்பது என்பது மனமற்று இருப்பது.

நீ தியானத்தை சுவைக்க ஆரம்பிக்கும்வரை பகல்கனவு தொடரும். நீ தியானத்தில் வளப்படாத வரை நீ எதிர்காலத்தில் உள்ள ஏதோ ஒரு உணவுக்காக ஏங்கி தவிப்பாய். மேலும் எதிர்காலம் ஒருநாளும் அதை கொண்டு வரப் போவதில்லை என்பது உனக்கு நன்றாகத் தெரியும். ஏனெனில் இன்றைய நாள் ஒருநாள் முன்புவரை எதிர்காலமாக இருந்தது. நேற்று இது எதிர்காலமாக இருந்தது, நீ அதைப் பற்றி கனவு கணடு கொண்டிருந்தாய். இப்போது அது இங்கிருக்கிறது.  நிகழ்ந்தது  என்ன?, நீ சந்தோஷமாக இருக்கிறாயா? நேற்று என்பது முதலில் எதிர்காலமாகத்தான் இருந்தது. எல்லா கடந்த காலங்களும் ஒருநாள் எதிர்காலமாகத்தான் இருந்தன. அவை கடந்து சென்று விட்டன. எதிர்காலமும் ஒருநாள் கடந்து செல்லும். பகல்கனவில் நீ உன்னையே முட்டாளாக்கிக் கொள்கிறாய்.”