வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!


கயூம்ஸ் என்ற அகச்சிகிச்சையாளர் அவரது சொந்த அனுபவத்திலிருந்தும் அவரது தொழில்முறை அனுபவத்திலிருந்தும் தரும் தூக்கத்தைப் பற்றிய சில பயனுள்ள குறிப்புகள்.

 

ஒரு தியானிப்பவனுக்கு சரியாகவும் போதுமான அளவும் தூங்குவது என்பது மிகவும் முக்கியமாகும். மேலும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் – சரியான அளவு தூக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அது எல்லோருக்கும் ஒரே அளவாக இருக்காது, ஏனெனில் ஒவ்வொருவரது உடலுக்கும் வயதைப் பொறுத்தும் மற்ற அடிப்படையைப் பொறுத்தும் தூக்கத்தின் அளவு, தேவை மாறுபடும்.

ஓஷோ – உள் பயணம் தலைப்பு-3

 

ஒரு உளவியல் நிபுணராக நான் கூறுகையில் தூக்கம் என்பது கையாள மிக சிக்கலான விஷயங்களில் ஒன்று எனக் கூறுவேன். ஏன் தூக்கம் கெடுகிறது, ஏன் தூங்க முடிவதில்லை, ஏன் இரவுகளில் நிம்மதியாக உறங்க முடிவதில்லை என்பதற்கு பல காரணங்கள் உண்டு.

 

இங்கே உள்ள சில விஷயங்கள் உங்களுக்கு தூக்கம் வர உதவக் கூடும். உங்களால் சரியாக தூங்க முடியாத போது உங்களின் பழைய முறைகளை மாற்றி இந்த புதிய முறையை முயற்சித்துப் பார்ப்பதில் தவறென்ன ?

 

1. மாலையில் எளிதாக உள்ள உணவை உட்கொள்ளுங்கள். இரவு உணவை 6 மணிக்குள் முடித்துக் கொள்ளுங்கள். அதிக பட்சம் 7 க்குள். அதற்குமேல் வேண்டாம். கார்போஹைட்ரேட் மற்றும் காய்கறிகள் மாறுதலை தரும். 5 மணிக்குப் பிறகு காப்பி, டீ எதுவும் வேண்டாம். கிரீன் டீயில் கூட காஃபின் இருப்பதால் அதையும் கவனத்தில் வையுங்கள்.

 

2. தூங்கப் போவதற்கு 3 மணி நேரம் முன்பே கம்யூட்டரை உபயோகிப்பதையும் டிவி பார்ப்பதையும் நிறுத்தி விடுங்கள். ஆர்வத்தை தூண்டக்கூடிய புத்தகங்கள் கட்டுரைகள் படிப்பதையும் நிறுத்தி விடுங்கள். மாலையில் செய்தி சேனல் கேட்பதை நிறுத்துங்கள்.

 

3. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் உலா செல்லுங்கள். அதை எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள். அது ஒரு போட்டியாக இல்லாமல் விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள். மதியஉணவுக்கு பிறகு சிறிது ஓய்வு கொள், இரவு உணவுக்குப் பிறகு சிறிது நடை பழகு என்ற ஒரு புதுமொழியை நினைவில் கொள்ளுங்கள்.

 

4. உங்களுக்கு கவலைகளும் பிரச்னைகளும் இருந்தாலும் அவற்றை இரவிலாவது ஒதுக்கி வைப்பது மிகவும் முக்கியமாகும். தியானம் உதவக் கூடும், ஆனால் படுக்கையில் புரண்டு புரண்டு படுப்பது எந்த வகையிலும் உதவாது. உங்களுடைய கவலைகளை, பிரச்னைகளை சந்திப்பது எப்படி என்று உளவியல் கலந்துரையாடல் செய்து கொள்வது நலம் பயக்கும்.

 

5. தியான முறையில் தளர்வு கொள்ளுதல் தூக்கம் வரக் கூடிய மிக முக்கியமான செயலாகும். படுக்கையில் நிமிர்ந்து வசதியாக படுத்துக் கொள்ளவும். முடிந்த வரை சுவாசத்தை ஆழமாகவும் முழுமையாகவும் வெளியேற்றவும். அடுத்த மூச்சை இழுக்குமுன் சில விநாடிகள் ஓய்வை அனுபவியுங்கள். பின் மூச்சு முழுமையாக உள் வர காத்திருங்கள். இதை 2-3 முறை செய்யவும். அடுத்து, முதலில் பாதத்தின் முன் பகுதியை முடிந்தவரை இறுக்கவும். பின் சுவாசத்தை வெளியே விட்டபடி அதை தளர்வு படுத்தவும். இதை பாதத்தின் முன் பகுதியிலிருந்து ஆரம்பித்து உடல் முழுவதும் செய்யவும். சிலர் இந்த முறையை – உடல் கூர்நோக்கு முறை – என்பர். கெண்டைக்கால், தொடை, பின்புறம், அடிவயிறு, வயிறு என உடல் முழுவதும் செய்யவும். இந்த முறை நிச்சயமாக பலருக்கும் தளர்வு கொள்ளவும், மனதின் ஓட்டத்திலிருந்து வெளிவரவும், உடலுணர்வு பெற்று தூக்கம் வரவும் உதவியிருக்கிறது.

 

6. உங்களது உறங்கும் இடம் இருட்டாக இருக்கும்படி செய்து கொள்ளவும். தேவைப்பட்டால் திரைகள் போட்டுக் கொள்ளவும். வெளிப்புற இடைஞ்சல் இருக்கும் பட்சத்தில் காது அடைப்பான்களையும் கண் பட்டைகளையும் போட்டுக் கொள்ளவும்.

 

தூக்கம் என்பது இருட்டைப் போன்றது. வெளிச்சம் இருந்தால் தூங்க      முடியவில்லை என்பது தற்செயலான விஷயம் அல்ல. தூக்கத்துடன்   தொடர்புடையது இருள். அதனால்தான் இரவில் தூங்குவது மிகவும்     எளிது. சுற்றிலும் உள்ள இருட்டு எளிதாக நீ தூக்கத்தினுள் நழுவ       உதவி புரியும்.

      ஓஷோ – தந்த்ரா ஓர் உயர்ந்த புரிதல் தலைப்பு-3

 

7.  தூக்கம் வராமல் படுத்திருந்தால் எழுந்திரு. ஒரு கப் மூலிகை தேநீர் அருந்து, அல்லது வேறு வித்தியாசமான வேலை எதையாவது செய், அல்லது பொழுதுபோக்கு ஏதாவது ஒன்று செய். கம்யூட்டரில் வேலை செய்யாதே. அதை அணைத்தே வைத்திருங்கள். தூக்கம் வருவது போல தோன்றும் போது படுக்கைக்கு செல்.

 

8. மது உன்னை அமைதிப்படுத்தி உனக்கு தூக்கத்தை கொடுக்கும் என்பது உண்மைதான், ஆனால் அதில் சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அது சிறிதளவாக இருக்கும்வரைதான் அது பழக்கமாக மாறுவதில்லை. அதிக அளவு மது தூக்கத்தை கொடுப்பதற்கு பதிலாக கெடுத்துவிடுகிறது.

 

9. சுடு தண்ணீர் குளியல் உனது ரத்த அழுத்தத்தை குறைத்து தளர்வு கொடுத்து தூக்கத்தை கொண்டுவரும், குளியல் தொட்டிலில் படுத்துக் கொண்டு படிப்பது அதிகப்படியான தூக்கமயக்கத்தை கொண்டு வரலாம்.

 

10. வசதியற்ற நிலையும் வலியும் தூக்கத்திற்கு இடைஞ்சல்களே. கன்னாபெல்ஸ் போன்ற சில வகையான மூலிகை மருந்துகள் உங்களது தூக்கத்திற்கு உதவக்கூடும்.

 

11. யாராவது கால் பிடித்துவிட்டால் மிகவும் சீக்கிரமாக தூக்கம் வந்துவிடும். ஆனால் அதில் கால் பிடிப்பதை நிறுத்திவிட்டால் நீங்கள் எழுந்து கொள்வீர்கள் என்றால் அதை யாரும் ஒன்றும் செய்யமுடியாது.

 

12. ஏதாவது ஒரு நல்ல அக்குபஞ்சர் வைத்தியரிடம் சென்று உங்கள் தூக்க பிரச்னையை விவாதிக்க முடியுமானால் மிகவும் சிறந்தது. ஏனெனில் தூக்க முறையை மாற்றுவதை விட அதற்கான காரணம் என்ன எனக் கண்டறிந்து அதை அக்குபஞ்சர் மூலம் களைவதில் அது நீண்ட கால பயனளிக்கிறது.

 

13. உன்னுடைய உடல்முறை எதுவென்று நீயே ஆழமாக கண்டறிந்து அதன்படி செயல்பட்டு கொள்வதுதான் சாலச்சிறந்தது. அது இது எல்லாவற்றிலும் மிகவும் மேன்மையானது. எப்போதும் பலனளிக்கக்கூடியது.