வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

தியான யுக்தி – 1

பிறப்பிடத்திற்குத் திரும்புதல்

நமக்கு யார் மீதாவது அல்லது எதன் மீதாவது கோபமோ,
வெறுப்போ, அல்லது வேறு உணர்வோ அல்லது வேறுபட்ட மனநிலையோ ஏற்படும்போது நாம் அதை
மனிதர்கள் மீதோ அல்லது பொருட்கள் மீதோ பிரதிபலிக்கிறோம்.

ஆனால் தியானத்தின் போது மனநிலையை மற்றவர்கள் மீது பிரதிபலிப்பதற்கு பதிலாக நீதான் அதன் பிறப்பிடம் என்பதை நினைவு கூறுகிறாய். உதாரணமாக, அன்பு எழும் போது, இந்த உணர்வு பிரதிபலிக்கும் ஒரு திரைதான் மற்றவர்.

அவர்தான் இந்த அன்பின் காரணம் என்ற நினைப்பு எழுகிறது, ஆனால்
உண்மை அதுவல்ல. அன்பு சக்தி உள்ளிருந்து எழுகிறது, அது வெளியே பிரதிபலிக்கிறது. அதனால்தான்
யார்மீது அன்பாக உணர்கிறாயோ அவர் மிகவும் அன்பானவராக தோன்றுகிறார். ஆனால் வேறு
யாராவது இவர்மீது கோபமாக உணரும்போது இவர் அவருக்கு மிகவும் அசிங்கமானவராக
தோன்றுவார். இதை நினைவில் கொள்.

எப்போது – ஒரு உணர்வை பற்றியோ அல்லது ஒரு மனநிலை குறித்து விழிப்படையும்போது

 

செய்முறை – மையத்தில் இரு, பிறப்பிடத்திற்குச் செல். உன்னுடைய கோபம், வெறுப்பு, அல்லது வேறு எதுவாக இருந்தாலும் உன்னுடைய உள் மையத்திற்குச் செல்லும் பயணத்திற்கு அதை பயன்படுத்து.

நீ அன்பாகவோ வெறுப்பாகவோ கோபமாகவோ இருக்கும் சமயத்தில்
பிறப்பிடத்திற்குச் செல்வது எளிதாக இருக்கும் ஏனெனில் அப்போது நீ சூடாக இருப்பாய்.
அப்போது நகர்வது எளிது. இணைப்பு சூடாக இருக்கும் ஆகவே இந்த சூட்டுடன் உள்ளே நகர
முடியும். உள்ளே உள்ள குளிர்ந்த பகுதியை நீ சென்றடைந்தவுடன், திடீரென ஒரு மாறுபட்ட
பரிமாணத்தை உணர்வாய். ஒரு மாறுபட்ட உலகம் உன்முன் திறக்கும்.

மூலம்: Vigyan Bhairav Tantra

தியான யுக்தி – 2

மனோநிலைகளின் பதிவு

முதல் படி – உனது மனோநிலைகளை கண்டு வரிசை படுத்து.

உனது நிலைகளை புரிந்துகொள், அதனால் உனது நல்ல
மற்றும் மோசமான மனோநிலைகளை குறிப்பெடுக்க ஆரம்பி. ஒவ்வொரு நாளும் காலை, மதியம்,
மாலை, இரவு ஆகிய 4 தடவை உனது மனேநிலை எப்படி இருக்கிறதென்று குறித்து வை. 3 – 4
மாதங்களுக்குள் நீ ஒருவித லயத்தை காணலாம். உதாரணமாக, நிலவைப் பொறுத்து உன் மனநிலை
மாறும்.

இரண்டாவது படி – உனது மனநிலையை சந்திக்க தயாராகு

ஒருமுறை உனது வரைபதிவு எப்படி என்று உனக்கு
தெரிந்துவிட்டால் நீ அதற்கேற்ப தயாராகலாம். சோகமாக இருப்பாயானால் சோகத்தை
கொண்டாடு. போராட தேவையில்லை.

பிரச்னை எழுவது எங்கென்றால் நாம் மனநிலையை
எதிர்க்கிறோம், நாம் அதனுள்ளேயே அமிழ்ந்து விடுகிறோம், இதுதான் போராட்டத்தை
உருவாக்குகிறது – ஆனால் எல்லா மனநிலைகளும் அநுபவிக்க கூடியவையே.

மூன்றாவது படி – கவனி, நீ கடந்து போவாய்

உனக்கு நல்ல மனநிலை வரும் என உனக்கு
தெரியும்போது நீ மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளலாம், மக்களை சந்திக்கலாம்,
உருவாக்குபவனாக இருக்கலாம்.

இதேபோல கவனித்து வந்தால் 6 – 8 மாதங்களுக்குள்
நீ ஒரு சாட்சியாளனாக மாறி விடுவாய், பின் அப்போது எதுவும் உன்னை பாதிக்க முடியாது.
அது இயற்கையின் ஒரு பாகம்தான், உன்னை பொறுத்ததல்ல என்பது உனக்குத் தெரியும். அதை
கவனித்தல் மூலமாக நீ கடந்து செல்ல ஆரம்பிப்பாய்.

மூலம்:Just Don’t Do Something, Sit There