உயிரூட்டும் அன்பு.
கஷ்டப்பட்டு
படைத்தாலும்,
கணக்கிட்டுப்
படைத்தாலும்,
உயிரிருப்பதில்லை…..ஆம்,
அழகிருந்தாலும்
உயிரிருப்பதில்லை,
சுவையிருந்தாலும்
சக்தி தருவதில்லை,
சிறப்பிருந்தாலும்
வாழ்விருப்பதில்லை.
அன்பில்
படைப்பவன்,
எதை
படைத்தாலும்,
அழகைப்
படைக்கிறான்
அமிர்த்தைப்
படைக்கிறான்,
ஆன்மாவைப்
படைக்கிறான்!
ஆகவே………
எது
செய்தாலும் அன்பாயிருந்து செய்,
அதுவே
தெய்வப் பண்பு !
2.
உச்சம்
அன்பு
உன் ஆற்றலின் உச்சம்,
அதற்கு
மேல் வாழ்வதற்கு இல்லை மிச்சம்!