வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

தோல்வியும் கைவிடுதலும் அடங்கிய அற்புதமான வாழ்க்கைக் குறிப்பு

வந்தனா பூனா 1 லிருந்து தொடங்கிய தனது 32 வருட வாழ்க்கை அனுபவத்தை நினைவு கூறுகிறார். வந்தனா எனும்
லியோனார்டு காஹென் சமீபத்தில் வெளியிட்டுள்ள தனது வாழ்க்கை சரிதத்தில் தனது இசை பற்றியும் அதை தான் தொழிலாக எடுத்துக் கொண்டதைப் பற்றியும் கூறுகிறார்.

இசையில் இந்த கணம் மட்டுமே உள்ளது. அதில் எந்த விதமான எதிர்காலம் என்பதற்க்கும் இடமே இல்லை. எந்த துறையிலும் அது ஈடுபாடு கொண்டதல்ல. தொழில் என்ற வார்த்தையே என் இதயத்தில் பாரமாக ஏறிக் கொள்கிறது, அந்த வார்த்தையே என்னை ஈர்ப்பதில்லை. தொழில் என்றழைக்கப்படும் விஷயத்தில் நான் உள்ளே நுழையாமல் தவிர்த்து விடுவேன். அதை தவிர்க்கவும் முடிந்திருக்கிறது என்னால்.

சன்னியாசின் ஆவதற்க்கு முன் நான் தொடர்ந்து சீராக எதை செய்துவந்தேன் என்று என்னால் நினைவு கூற முடியவில்லை. எனது 7 வயதிலேயே பள்ளியில் மிக புத்திசாலி என்று பட்டம் பெற்று அடுத்த வகுப்பிற்கு முன்னதாகவே சென்றேன். இது நான் தனி என்ற தவறான எண்ணத்தை மட்டுமே ஊட்டியது. பள்ளியில் நடந்த பல்வேறு விதமான விளையாட்டுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் எனக்கு அழைப்பு வந்த போதும் நான் ஏதாவது ஒரு புத்தகத்துடன் எனது அறையில் கிடந்தேன். எனது சிறு வயது முழுவதும் படிப்பதிலேயே கழிந்தது.

எட்டாவது வயதில் நான் மேடையில் பியானோ வாசிப்பவராகப் போகிறேன் என்ற போது அது பிற்காலத்தில் என்னவாகப் போகிறாய் என்ற கேள்விக்கு நல்ல பதிலாக தோன்றியது. துரதிஷ்டவசமாக நான் 13 வயதில் ஜாஸ் இசையை எடுத்துவிட்டேன். கிளாஸிக் பியானோ பரீட்சையில் ராயல் ஸ்கூல் இசை பரீட்சையாளரை கவர முடியாமல் தோற்றுப் போனேன்.

நாம் புத்திசாலி என்ற நினைப்பின் முன்னே போட்டி போடுவதோ, லட்சியங்களோ, நிகழ்ச்சிகளோ எடுபடுவதில்லை. எதுவும் என்னுடைய கவனத்தை பிடித்து வைக்கவோ அடைவதற்கு போட்டி போடவோ விடவில்லை.

19 வயதில் மிகவும் அலுத்தும் சலித்தும் போய் படிப்பிலிருந்து விலகி டிராவலிங் கம்பெனி ஒன்றில் சேர்ந்தேன். அதையும் விரைவில் பணம் இன்றி இழுத்து மூடி விட்டார்கள். பின் ஒரு 22 வயது டிவி டைரக்டரை மணந்தேன். இதுவாவது நிலைக்கும் என்று எண்ணினேன். ஆனால்
அதுவும் நிலைக்கவில்லை. ஆகவே தொழிலும் கல்யாணமும் கைவிட்ட நிலையில் அடுத்ததாக அகநல சிகிச்சைக்கு மாறினேன். இது அர்த்தமும் சந்தோஷமும் உள்ள வாழ்க்கையை கொடுக்கும் என நினைத்தேன். ஆனால் இதுவும் தோற்றது. 26 வது வயதில் ஆரஞ்சு வண்ண ஆடையுடன் இந்திய பெயர் பெற்று குருவின் படம் கொண்ட மாலையை என் கழுத்தில் அணிந்து துறவறம் பெற்ற போது நான் எல்லாமும் முடிவு பெற்றதாக எண்ணினேன்.
பின் 7 வருடங்கள் மிகவும் தீவிரமாக பூனாவில் உள்ள ஆசிரமத்தில் பணி புரிந்தேன். எனக்கு கொடுக்கப்பட்ட வேலை எதுவாக இருந்தாலும் அதை செய்தேன். 7 நாட்களும் வேலை என்ற திட்டத்தில் லீவு நாட்களில் என்ன செய்வது என்ற யோசனை மறந்தே போனது எங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

ஒரு குறிப்பிட்ட வேலையுடன், குறிப்பிட்ட நிகழ்வுடன், குறிப்பிட்ட பொறுப்புகளுடன் ஒன்றி விடாமல் அதனுடன் பற்று கொள்ளாமல் இருக்க வேலையை அடிக்கடி மாற்றுவது ஒரு வாடிக்கையான செயலாக இருந்தது. அதனால் தனது மனம் குலுங்கி பிடிப்பிலிருந்து வெளியேறுவதை பார்ப்பது அனுபவமாக இருந்தது.

நான் முதலில் பூனா 1 ஆசிரமத்தில் வேலைக்கு சேர்ந்த போது திவ்யா, அரூப் ஆகியோரின் அகநலசிகிச்சை குழு, பிரைமால் அகநலகுழு, மற்றும் தீவிரமான ஞானத் தேடல் அகநலகுழுவின் உதவியாளராக சேர்ந்தேன். நான் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சமீபத்தில்தான் அந்த சிகிச்சைக்கான முன்னேற்பாடுகளை கற்று தேர்ந்திருந்தேன். இருப்பினும் லஷ்மி மூலமாக நான் அந்த பொறுப்புக்கு பொறுத்தமானவள் அல்ல என்றும் ஆதலால் பேராசிரியர் வேலை செய்யச் சொல்லியும் ஓஷோவிடமிருந்து தகவல் வந்தது. ஆகவே பதிப்பகத்தில் வேலை செய்தேன். ஓஷோவின் புத்தகங்களை வெளியிடவும் முன்னுரை எழுதவும் மொழிமாற்றம் செய்வதை மேற்பார்வையிடவும் எனக்கு கிடைத்த மிகப் பெரிய அரிதான ஒரு சந்தர்ப்பம் இது. ஒருமுறை வந்தனா ஓஷோவின் புத்தகங்களுக்கு அவர் எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புவாரோ அது போலவே முன்னுரை கொடுத்திருப்பதாக செய்தி வந்தது.

5 வருடங்களுக்குப் பிறகு திடீரென நான் பதிப்பகத்திலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட அகநலகுழு ஒன்றிற்க்கு அனுப்ப்ப்பட்டேன். முதலில் அது வெறும் சத்தம் போடுவதாக மட்டும் இருந்தது. பின் அது மிகவும் ஆழமான ஒரு தியானமாக உருவெடுத்தது. அது மிகவும் நன்றாக சென்று கொண்டிருக்கும்போது ஷீலா அதை கலைத்து அதன் நபர்களை வெவ்வேறு வேலைக்கு பிரித்து அனுப்பிவிட்டார். என்னை ஆசிரமத்து துணிக்கடையில் ரோப் விற்க அனுப்பிவிட்டாள்.

என்னுடைய சிறுவயது இசைஞானத்தால் நான் காலை சத்சங்கத்திற்க்கும் மாலை தியானத்தின் போதும் இசை கலைஞர்களுடன் சேர்ந்து இசைத்துக் கொண்டிருந்தேன். அதனால் என்னுடைய கிருஷ்ணா ஹவுஸில் இரவில் கூட்டம் கூடியது. நான் ஓஷோவிடம் மேலும் தொடர்ந்து அதிகமாக இசையில் ஈடுபடட்டுமா என்று எழுதி கேட்ட போது அவர் இசை உனது தனிமைக்காக மட்டும் இருக்கட்டும் என்று எழுதிவிட்டார்.

ஒருமுறை ஆசிரமத்திற்கு வந்த ஆஸ்த்ரேலிய சினிமா டைரக்டர் சிட்னிக்கு நடிக்க வருமாறும் எல்லா செலவுகளையும் தருவதாகவும் கூறினார். நான் ஓஷோவிடம் கேட்டபோது அவர் இந்த அழைப்பை ஏற்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி விட்டார்.

இந்த நினைவுகள் நான் எப்போதும் தொழில் வேண்டும் என்று இருந்ததில்லை என்பதை எனக்கு நினைவு படுத்துவதோடு அதை எப்போதும் சுத்தியல் கொண்டு தகர்க்கும் ஒரு குருவை நான் என்னுடைய 30களில் பெற்றதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.

சன்னியாஸ் எடுப்பதற்க்கு சில நாட்களுக்கு முன் லண்டனில் ஒரு ஜோசியகாரர் என்னிடம் கலை, கருணை, மாயை போன்றவற்றை வாழ்ந்து பார்த்து தெரிந்துகொள்ளத்தான் இந்த வாழ்க்கை கிடைத்திருப்பதாக தெரிவித்தார். அரிதான வாழ்க்கைமுறை எனக்கு கிடைத்திருக்கும்போது இதுதான் அது எனத் தோன்றியது.

1981 ல் திரும்ப என் நாட்டிற்க்கு வரும்போது என்ன செய்வது என்பதுதான் மிகப் பெரும் பிரச்னையாக இருந்தது. எல்லா லட்சியங்கள், குறிக்கோள்கள், முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற கனவுகள் ஆகிய யாவும் இல்லாமல் யாராகவும் மாறும் எண்ணம் இன்றி உயிர் வாழ சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமே இருந்தது. என்னுடைய முதலீடு கையிருப்பு சுத்தமாக இல்லை.

ஆகவே அடுத்த முப்பதுக்கும் மேற்ப்பட்ட வருடங்கள் பல வேலைகள் – தியேட்டர், டிவி மற்றும் சினிமா தயாரித்தல், எழுதுவது, தொகுப்பது, டிவி தொகுப்பாளர், நெட்ஒர்க் மார்க்கெட்டிங், மாடல், வெயிட்டர், விழா ஏற்பாட்டாளர், சில்லறை கடை மேனேஜர், தனிப்பட்டு கவனித்துக் கொள்பவர், கலை அறிவிப்பாளர், இசை எழுதுவது, விளம்பரம் பிடித்துக் கொடுப்பது, பத்திரிக்கை விற்பனையாளர், ஒரு அழகு சாதன கம்பெனியில் சிகிச்சையாளர்.
கடைத் தெருவில் நின்று கொண்டு கூட்டத்தின் நடுவே கத்தி கூப்பாடு போட்டு அவர்கள் வாங்க வேண்டுமென்று நினைக்காத ஒரு விஷயத்தை அவர்கள் மனதில் போட்டு வாங்க வைக்கும் ஒரு வித்தையை நான் செய்வதை நினைத்து நானே பின்னாட்களில் நினைத்து நினைத்து சிரித்திருக்கிறேன். நீ முச்சந்தியில் நின்று பல மணிநேரம் கத்தி கூப்பாடு போடும்போது உன்னை நீயே சீரியஸாக எடுத்துக் கொள்ள முடியாது. பல கடை முதலாளிகள் என்னிடம் அன்பு கொண்டிருந்தனர்.

இதற்கு நடுவில் நான் காலேஜில் தத்துவமும் மருத்துவ ஆங்கிலமும் படித்தேன்.

இன்று மகளிரின் முகத்திலிருக்கும் கரும்புள்ளிகளையும் சுருக்கங்களையும் அகற்றும் வேலை செய்கிறேன்.

அப்போது என் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை எனது வாடிக்கையாளர்களுக்கு சொல்லும்போது அவர்கள் வியந்து கேட்டுக் கொண்டிருப்பர்.
தோல்வியும் விட்டுவிடுதலும் பொருந்திபோதலும் இல்லாத என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை. இந்த பூமியில் 66 வது வருடமாக இன்னும் நன்றாக நாள் முழுவதும் வேலை செய்து கொண்டிருக்கும் வலிமையான வாழ்க்கையாக வாழ்வு போய்க் கொண்டிருக்கிறது.