வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

கனவில் வந்த அழைப்பு

ஷென் பூனாவிற்க்கு வந்த விதம் இதுதான்………….

என்னுடைய வாழ்க்கையில் 2011 ஆகஸ்ட் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நான் என்னுடைய விடுமுறையை கழிக்க இத்தாலிக்கு செல்ல திட்டமிட்டுக்கொண்டிருந்தேன், அப்போது எனக்கு ஒரு வினோதமான கனவு ஒன்று வந்தது.
 நம்மை தாண்டியுள்ள சக்தியிடமிருந்து வந்ததாக நான் உணரும் கனவுகளை எழுந்தவுடன் எழுதி வைப்பது என் வழக்கம்.

ஆனால் இது முற்றிலும் வித்தியாசமானது. இந்த கனவில் நான் எனது படுக்கைக்கு மேல் வட்டமிட்டபடி எனது தூங்கும் உடலை பார்க்கிறேன். அப்படி பார்த்தவுடன் எனக்கு வந்த முதல் எண்ணம் “நான் இறந்து விட்டேன், சினிமாவில் காட்டுவது போலவே இது நடக்கிறது” என்பதுதான். நான் என்னருகில் வேறொருவர் இருப்பதை உணர்ந்தேன். அவர் நீண்ட தாடியுடன் வயதானவராக இருந்தார். நான் நடுக்கத்துடன் அவரிடம் என்னுடைய தூங்கும் உடலை காட்டி, “நாம் அவரை எழுப்ப வேண்டும்” என்று கூறினேன்

அவர் மெதுவாக என்னை நோக்கி திரும்பினார், அவரது ஆழமான கண்கள் என்னுள் இன்னும் பயத்தை நிரப்பின. அவர், ‘ பொறு முட்டாளே, அவன் தன்னுடைய அடையாளத்தை காணட்டும்’ என்றார். நான் என்னுடைய தூங்கும் உடலை பார்த்தேன், அதன் தோளில் ஹீப்ரூவின் குறியீடான ஒரு அடையாளம் எழுவதை பார்த்தேன். நான் எழுந்துவிட்டேன், என்னுடைய இருதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது

அடுத்த மூன்று நாட்களும் நான் எங்கே சென்றாலும் முட்டாள் என்பதையே தேடிக்கொண்டிருந்தேன். அன்று ஒரு சீரியல் நாடகம் பார்த்த நினைவு வந்தது – அது அரசர் ஹென்றியுடன் அரசவையின் கோமாளி சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறான், அப்போது அவர்கள் பேசிக் கொள்வது மிகவும் மர்மமாக இருக்கிறது. – நான் டாரட் கார்டு எனும் குறிசொல்லும் அட்டைதள் தொகுப்பில், முட்டாள் எனக் கூறப்படுவதற்கு பொருள் என்ன என்று பார்த்தேன். ஒரு மறைமுகமான குறியீடு அந்த முட்டாளின் ஆடையில் இருக்கும் என்று அந்த அட்டையில் இருந்தது. அந்த மறைந்திருக்கும் எழுத்து ஷென். மேலும் கனவில் நான் பார்த்த அதே குறியீடு, மற்றும் அது அராபிய மொழியில் என்னுடைய பெயரின் முதல் எழுத்து

அந்த மூன்று நாட்கள் தூக்கமேயில்லை. என்னைச் சுற்றிலும் பல்வேறு விஷயங்கள் நடந்து என்னை குழப்பின. இதுவரை ஒரு வியாபாரியாகவும் எல்லாவற்றையும் தர்க்கரீதியாக பார்ப்பவனாகவும் இருந்த எனக்கு இப்போது நடப்பவற்றை ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக் கொண்டு தளர்வாக இருக்க முடியவில்லை.

நான்காவது நாள் இன்டர்நெட்டில் டாரட் கார்டுக்காவும் அதன் உள்ளார்ந்த பொருளுக்காவும் தேடிக் கொண்டிருக்கும் போது என்னுடைய கனவில் கண்ட மனிதரின் படத்தை பார்த்தவுடன் என் இதயம் கிட்டத்தட்ட நின்றே விட்டது. அதே கண்கள், அங்கி, தாடி. அவர் ஒரு இந்திய ஞானி என்றும் அவர் இருப்பது பூனாவில் என்றும் அறிந்தேன். இதை தீர்க்க என்னால் முடியாது. அந்த வீடியோவில் இருந்த பூனா ஆஸ்ரமம் ஒரு ஜாலியான இடமாக தோன்றியதால் நான் என்னுடைய இத்தாலி பயணத்தை ரத்து செய்துவிட்டு இந்தியாவுக்கு முதன் முறையாக வந்தேன். அந்த மனிதரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் என் மண்டைக்குள் ஓடிக் கொண்டேயிருந்தன.

ஆஸ்ரமத்தின் ஹெச்ஐவி டெஸ்ட், மெரூன் அங்கி, நான் அஙகே வரக் காரணம் எது என்று என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் பதில் சொன்ன போது அந்த நபர் என்னை பார்த்த பார்வை என யாவும் வினோதமாக எனக்கு தோன்றியது. அவை இன்னும் எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. ஆனால் ஒஷோ என்ற அவர் இறைமையோடு கலந்துவிட்டார், அவரது உடலில் அவர் இல்லை என்று கேள்விப்பட்ட போது எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.

ஆனால் அவரது கரங்கள் தழுவுதலையும் அவரது மறைமுகமான குரலையும் அவரது இதயத்துடிப்பின் நடனத்தையும் உணர்ந்தபோது அவர் என்னுடைய பொம்மைகளை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து எறிந்து விட்டதை அறிந்தேன். அந்த வருடம் சன்னியாஸ் மற்றும் குண்டலினி தியானம் இவற்றுடன் அவருடைய அன்பின் மீதான நன்றியையும் சுமந்துகொண்டு இந்தியா விட்டு வந்தேன்.

எனக்கு என்ன நடந்தது என்று புரிந்து கொள்ள பலமுறை முயற்சி செய்தேன். அவர் ஏன் என்னை தூக்கத்திலிருந்து எழுப்பி இந்த உலகத்திலிருந்து அப்பால் வீசினார்,? நான் ஏன் அவரது இனிய புல்லாங்குழலி இசையை தொடர வேண்டும்? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தேடுவதை சமீபத்தில் விட்டுவிட்டு நான் இந்த பயணத்தை ரசிக்க ஆரம்பித்து விட்டேன்.

நான் டெல்லி, கோவா, ரிஷிகேஷ், பூனா மற்றும் தர்மசாலா ஆகிய அனைத்து இடங்களில் உள்ள ஓஷோ ஆஸ்ரமங்களுக்கும் போய் வந்தேன். எல்லா இடங்களிலும் அவரது இருப்பையும் அவரது சக்தியையும் என்னால் உணர முடிந்தது. ஓஷோவுடன் இருப்பது என்பது ஒருவர் தன் இருப்புடன் இருப்பதாகும்.

ஓஷோ The Disciline of Transcendence, Vol 1, ch 6, Q 5 ல்
நீ என்னுடன் இணைந்து இருப்பாயேயானால் இந்த என் உடல் மறைந்து விடுவது அதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. நான் உனக்கு எப்போதும் கிடைப்பவனாகவே இருப்பேன்.
என்று கூறுகிறார்.

ஷேன் சிரியாவில் பிறந்து துபாயில் வளர்ந்து படித்தவர். அவர் ஹெல்த், பாதுகாப்பு மற்றும் சுற்றுசூழல் என்ஜீனீயர். அவர் 2011ல் பூனாவிற்கு வந்து அங்கே சன்னியாஸ் பெற்றார். அவர் இப்போது துபாயில் வசிக்கிறார். HSE மேனேஜராக ஒரு கம்பெனியில் வேலை செய்கிறார்.