வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

ஏற்றுக் கொள்ளும் தன்மையோடு இருத்தல்

 

ஏற்றுக் கொள்ளும் தன்மையோடு இருத்தல் என்பது மனமின்றி இருப்பது. எந்த
எண்ணங்களும் இல்லாமல் வெற்றிடமாக இருக்கும்போது உன்னுடைய தன்னுணர்வு எதையும்
பிடித்துக் கொள்ளாமல் இருக்கும்போது உனது கண்ணாடி பிரதிபலிக்க எதுவுமின்றி
இருக்கும்போது இருப்பதுதான் ஏற்றுக் கொள்ளும் தன்மை. ஏற்றுக் கொள்ளும் தன்மை
தெய்வீகத்திற்கான வாசல். மனதை விட்டு விட்டு இருத்தலாக இரு.

 

ஏற்றுக் கொள்ளும் தன்மை என்பது நீ சுமந்து கொண்டிருக்கும் குப்பைகளை
வீசியெறிவது.

 

நான் ஏற்றுக் கொள்ளும் தன்மையோடு இரு என்று கூறும்போது திரும்பவும் ஒரு
குழந்தை போல மாறி விடு என்றுதான் கூறுகிறேன்.

 

எங்கே மௌனமும் விழிப்புணர்வும் சந்திக்கிறதோ அங்கே ஏற்றுக் கொள்ளும் தன்மை
இருக்கிறது.

 

ஏற்றுக் கொள்ளும் தன்மை என்பது மிக முக்கியமான ஆன்மீக குணமாகும்.

 

சத்யத்தை வாங்க முடியாது, அதை ஒருவர் ஏற்றுக் கொள்ள மட்டுமே முடியும்.

 

அமைதியின் இருப்பு நிலையே ஏற்றுக் கொள்ளும் தன்மையாகும்.

 

தனித்தன்மை

 

உன்னைப் போன்ற ஒருவர் இந்த உலகத்திலேயே எங்கேயும் இல்லை. – இதற்கு முன்பும்
இருந்த்தில்லை, இதற்கு பின்பும் இருக்கப்போவதில்லை. நீ ஒருவர்தான். ஒவ்வொரு தனி
மனிதனும் தனித்துவமானவன். தனித்துவம் இயற்கையினால் கொடுக்கப்பட்ட பரிசு.

 

இயற்கை தொடர் வரிசையில் எதையும் செய்வதில்லை, அது தனித்துமானவைகளையே
உருவாக்குகிறது.

 

என்னைப் பொறுத்தவரை, தனி மனிதர்களின் தனித்துவமே சத்தியமான உண்மை.

 

நீ எதைச் செய்தாலும் அதில் உனது தனித்துவத்தை வெளிப்படுத்து.

 

உன்னுடைய தனித்துவத்துக்கு மதிப்பளி. ஒப்பிடுதலை விட்டு விடு. உன்னுடைய
இருத்தலில் தளர்வாக இரு.

 

உன்னுடைய தனித்துவம் என்னவென்று கண்டுபிடிப்பது மிகவும் சாகசமானதும்
மெய்கூச்சரிய வைக்கும் அனுபவமும் ஆகும்.

 

மற்றவர்களிடம் அன்போடு இருப்பது என்பது அவர்களின் தனித்துவத்தை மதிப்பதே ஆகும்.