வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

அமைதி

 1

தியானம் செய்யும்போது சில நேரங்களில் அமைதிநிலை நீரோடை போல வந்து சேரும்.
கவனித்துக் கொண்டிரு. அமைதி நிலை நிகழ்கிறது, நான் சாட்சி மட்டுமே என்பது போல
தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிரு. சில நேரங்களில் ஆனந்தம் நீருற்று போல பொங்கி
வரும், ஒவ்வொரு நாடி நரம்பிலும் பரவும், அதையும் தொலைவில் நின்று பார்த்துக்
கொண்டிரு. எதையும் பிடித்து தொங்காதே.

2

உனது வெறுமை ஆனந்த தன்மை, அமைதி நிலை, பிரகாசம் ஆகியவற்றின் அலைகளை
அனுமதிக்கும்.

3

உன்னுடன் நீ அமைதியாக இருத்தலே அமைதி நிலை.

4

உனக்குத் தேவை உயிர்த்துடிப்புள்ள அமைதிநிலை மற்றும் சுறுசுறுப்புடன் கூடிய
மௌனம்.

5

உள்ளார்ந்த மௌனமும் உள்ளார்ந்த அமைதியும்தான் முழுமையான தளர்வு நிலையின்
கனிந்த நிலை.

6

உள்ளார்ந்த அமைதி தியானத்தின் பக்க விளைவே.

7

உள்ளார்ந்த அமைதியின் நிழல் போல அன்பு தொடர்ந்து வரும்.

 

 

வானம்

 1

உனது உள்இருப்பு என்பது உனது உள்வானமே. சூரியன், சந்திரன், நட்சத்திரம், பூமி,
கோளங்கள், இந்த முழு பிரபஞ்சம் என யாவற்றையும் உள்ளடக்கிய வானம் அது.
எல்லாவற்றிற்க்கும் இடம் தரும் வானம் அது. இருக்கும் அனைத்திற்க்கும் பின்புலமாக
விளங்கும் நீலவானம் அது. எல்லாமும் வரும் போகும். ஆனால் வானம் அதேபோலவே இருக்கும்.

2

மனமற்ற தன்மை என்பது வெறும் விழிப்புணர்வு மட்டுமே. அது வெறும் வானம் போன்றது.

3

வானமாக மட்டுமே இருக்க உனக்கு தைரியம் வேண்டும்.

4

உன்னுள் நீ தளர்வு பெற்றால் உனது உள் வானத்தை நீ காண்பாய்.

5

வானத்தை மட்டும் பார், மேகத்தை மறந்து விடு. இது நிலைமாறுதலை கொண்டு வரும்.

6

உன்னுடைய அனுபவங்கள், உன்னுடைய இருப்பாகிய வானத்தில் வரும் மேகங்கள் போன்றதே.

7

நீல வானத்தில் செல்லும் மேகங்கள் எந்த தடயத்தையும் விட்டுச் செல்வதில்லை.

 

சப்தமும் நிசப்தமும்

 1

வாழ்வை விளையாட்டாக எடுத்துக் கொள், அப்போதுதான் இரண்டு உலகங்களும் ஒருசேர
உனக்கு கிடைக்கும், இந்த வெளி மற்றும் உள் உலகம், சப்தமும் நிசப்தமும், அன்பும்
தியானமும், தொடர்பும் ஒருமையும் என இந்த விஷயங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில்
சேர்ந்தாற்போல வாழப்பட வேண்டும், அப்போதுதான் உனது இருப்பின் அடி ஆழமும், உயர்ந்த
உச்சியும் உனக்குத் தெரியவரும்.

2

இசை என்பது சப்தம் மட்டுமல்ல, அது மௌனத்தையும் உள்ளடக்கியது.

3

மிக ஆழ்ந்த மௌனத்தில் உண்டாக்கும் சில சிறிய சப்தங்களே நாம்.

4

சப்தமும் நிசப்தமும் ஒன்றிணைந்தே செல்லும், எதிர்மறை இல்லாவிடில் இதுவும்
இருக்க முடியாது.

5

சப்தம் நமது மனம், மௌனம் நமது இருப்பு.

6

சப்தம் இந்த பூமியை சேர்ந்தது, மௌனம் கடந்ததை சேர்ந்தது.

7

வாழ்க்கை சப்தமும் நிசப்தமும் இணைந்த லயமாக இருக்க வேண்டும்.