வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

ஓஷோவின் கடைசி பல்வைத்திய குறிப்பு

 

தேவகீத் எழுதி புதிதாக வெளியிடப்பட்டுள்ள

Osho:  The First Buddha in the Dental Chair  –

ஓஷோ –பல்வைத்திய நாற்காலியில் அமர்ந்த முதல் புத்தா – புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

 

இயற்கை கடத்தும் விதம் பற்றி ஓஷோ –

உன்னுடைய பற்கள் பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப காலக்கட்டத்திலிருந்து
இப்போது வரை உள்ள எல்லா நினைவுகளையும் கொண்டுள்ளது….

நான் உடனடியாக எல்லா விளக்குகளையும் போட்டுவிட்டு அவரை பல்நாற்காலியில்
உட்கார வைத்துவிட்டு, அவருக்கு அருகில் வலது பக்கமாக கீழே உட்கார்ந்து கொண்டு  ஆச்சரியமும் சுவாரசியமுமாய் கேட்டேன் – நான் எழுத ஒரு நோட்டு எடுத்துக் கொள்ளட்டுமா.

வேண்டாம், கவனமாக கேள். எதையும் எழுதி கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இது
ஆழமாக செல்லட்டும். உனக்கு தேவையானவை தானாகவே நினைவுக்கு வரும். சில நாட்களாக எனது
பற்களில் வலி மிகவும் பயங்கரமாக இருக்கிறது. என்னால் தூங்க முடியவில்லை. வாழ்வின்
முதன் முறையாக எனது படுக்கையில் படுத்துக் கொண்டு பல மணி நேரங்கள் எனது பற்களைப்
பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்.  பல் டாக்டர் அல்லது என்னைப் போன்ற பைத்தியகாரன் தவிர வேறு யார் சாதாரணமாக பல்லைப் பற்றி யோசிப்பார்கள்.

நான் சொல்லப்போவது உனக்கும் மற்றும் ஒவ்வொரு உண்மையான சாதகனுக்கும்
மிக முக்கியத்துவம் வாய்ந்தது என உறுதிபடக் கூறலாம். இது இதுவரை ஒருபோதும்
கூறப்பட்டதாக எனக்கு தெரியவில்லை, ஏன் இதைப்பற்றி தெரியக்கூட தெரியாது. ஏதாவது
தொன்மையான ஞானப்பள்ளிகளில் ஒருகாலத்தில் இது அறியப்பட்டிருக்கலாம். இந்த தகவல்
மறைத்து வைக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்பிருக்கிறது, மேலும் அநேகமாக இது தொலைந்து
போய் விட்டிருக்கலாம். ஆன்மீகம் சம்பந்தமான அனைத்து புத்தகங்களையும் நான்
படித்திருக்கிறேன், ஆனால் இதை நான் ஒருபோதும் இதற்குமுன் எங்கும் கண்டதில்லை.

கவனமாக கேள், நான் முடித்தவுடன் இதை உலக பத்திரிக்கைகளுக்கு தெரிய
படுத்தி விடு. நான் என் பற்களில் உள்ள வலியைத் தொடர்ந்து உள்ளே சென்றபோது அது
தாடையில் உள்ள எலும்புகளின் வழியே ஊடுருவிச்சென்று நெஞ்சுப்பகுதியின் மையத்தை
அடைந்தது. பற்களில் இருந்து புறப்பட்ட வலி நெருப்பு கோடுகள் போல, ஒளிக் கோடுகள்
போல தோன்றியது, அவை நெஞ்சுப்பகுதியின் மையத்திற்கு சென்று சேர்ந்தது. எனது
நெஞ்சுப்பகுதியில் உள்ள அந்த இடம் ஒரு ஒளிப்பந்து போல தோன்றியது. இந்த ஒளிப்பந்து
உடலுக்கு வெளியே உள்ள ஒரு மிகப்பெரிய சூரியனை போன்ற மிகப்பரந்த ஒளியுடன், நதியாக
ஓடும் ஒளிவெள்ளத்தால் இணைக்கப்பட்டிருந்தது. அந்த சூரியன்தான் முழு மனித இனத்தின் ஒருங்கிணைந்த
சேகரிப்பாகவுள்ள தன்னுணர்வற்ற மனம். இது, நமது ஒவ்வொரு தனி மனிதனும், அவனது பற்கள்
மூலமாக மனித இனத்தின் ஒருங்கிணைந்த சேகரிப்பாகவுள்ள தன்னுணர்வற்றமனதுடன் இணைக்கப்பட்டுள்ள
விதமாகத் தோன்றுகிறது.

நான் பேசுவது மனிதனின் உண்மையான ஒருங்கிணைந்த சேகரிப்பாகவுள்ள தன்னுணர்வற்ற
மனதைப்பற்றி. இது -கார்ல் குஸ்தவ் ஜங்- குறிப்படும் ஒருங்கிணைந்த சேகரத்தைப்
பற்றியது அல்ல. ஒருங்கிணைந்த சேகரிப்பாகவுள்ள தன்னுணர்வற்ற மனம் என –ஜங்-
குறிப்பிடுவது, மனிதவரலாற்றின் சேகரமாகவுள்ள மனிதகுல நம்பிக்கைகள் மற்றும் இதிகாச
நிகழ்வுகள் பற்றியது. அது மனிதகுலத்தின் மிக நீண்ட பயணத்தில் மனம் உருவாக்கிய
புராண இதிகாச சரித்திரம் போன்றது.

அது அல்ல நான் கூறுவது. நான் கூறும் இந்த மனிதனின் உண்மையான ஒருங்கிணைந்த
சேகரிப்பாகவுள்ள தன்னுணர்வற்ற மனம் மிகவும் பெரியது, மிகவும் பழமையானது. இது மனித
இனத்தின் பரிணாம வளர்ச்சியின் உடல்ரீதியான சரித்திரத்தின் பதிவு. மனிதனின்
உண்மையான ஒருங்கிணைந்த சேகரிப்பாகவுள்ள தன்னுணர்வற்ற மனம் என்பது கோடிக்கணக்கான
வருடங்களாக மனிதன் வாழ்ந்து பார்த்த நினைவுகள் ஆகும். இது மனித உடலின் ஒவ்வொரு
செல்லின் டி.என்.ஏ – விலும் குறியீடு மூலம் பதிவு செய்யப்பட்டு, பாதுகாக்கப்
படுகிறது. இது நமது மனித உடலின் சேகரமாகி வழிவழியாக தொடர்ந்து வருவது.

மனித இனம் அடைந்துள்ள இந்த பரிணாம வளர்ச்சியின் மிக நீண்ட பயணத்தின்
பாதை பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளதுதான் மனிதனின் உண்மையான ஒருங்கிணைந்த
சேகரிப்பாகவுள்ள தன்னுணர்வற்ற மனம் ஆகும்.

நமது உடலுக்கு நினைவு இருக்கிறது. ஒவ்வொரு செல்லிலும் உள்ள டிஎன்ஏ நினைவுகளை
சேகரித்து வைத்திருக்கிறது. ஒவ்வொரு மனித உடலிலும் நினைவுகள் இருக்கின்றன. வெகு
காலத்திற்க்கு முன்பு மனித இனமாக மாறுவதற்கு முந்தைய ஆரம்ப கால
கட்டத்திலிருந்து  இதுவரை உள்ள பரிணாம வளர்ச்சியின் சரித்திரத்தை அது நினைவில் வைத்திருக்கிறது. தேவகீத், ஒவ்வொரு மனிதனும் தனிப்பட்ட விதத்தில் அவனது பல்லின் மூலமாக பிரபஞ்சத்தின் பரிணாம
சங்கிலியின் தொடர்புடன் இணைந்திருப்பது போல தோன்றுகிறது. ஒவ்வொரு மனிதனின்
பற்களும் பிரபஞ்சத்தின் ஒருங்கிணைந்த சேகரிப்பாகவுள்ள தன்னுணர்வற்ற மனத்துடன் அந்த
மனிதனுக்குள்ள தொடர்பை நினைவில் வைத்திருக்கிறது. மனிதன் குரங்காக இருந்த கால
கட்டத்திலிருந்து ஏன் அதற்கு முன்பிருந்து கூட, எல்லா நினைவுகளின் முழுப் பதிவும்
பற்களில் இருக்கிறது. ஒருவனுடைய நீண்ட பரிணாம வளர்ச்சியின் போது நடந்த அனைத்து
நிகழ்வுகளின் தனிப்பட்ட இயற்கைப் பதிவுப்பெட்டகமாக பற்கள் இருக்கின்றன.

மேலும் இது தொடர்கிறது, இப்போது கூட பற்களில் பதிவு செய்யப் படுகிறது,
அது நிற்பதில்லை. அது இப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நினைவுகள் பற்களில்
சேகரம் செய்யப்படுகின்றன.

இது சிறிது வித்தியாசமாக தோன்றலாம், ஆனால் அது அப்படியல்ல. கிறிஸ்டல்கள்
கோடிக்கணக்கான நிகழ்வுகளை சேகரித்து வைத்துக் கொள்ளக் கூடியவை. உன்னுடைய
கம்ப்யூட்டர் –சிப்- என சொல்லப்படுவது கோடிக்கணக்கான தகவல்களை சேகரித்து வைத்துக்
கொள்ளக் கூடியவை. ஒரு சிறிய கம்யூட்டர் சிப் ஏகப்பட்ட விஷயங்களை சேகரித்து
வைத்துக் கொள்ள முடிகிறது. ஆமாம், பல்லின் எனாமல் கோடிக்கணக்கான சிறிய
கிறிஸ்டல்களால் ஆனது, ஒவ்வொரு கிறிஸ்டலும் ஒரு கம்ப்யூட்டர் சிப் போன்றது, அது போல
பல்லாயிரம் கோடிகள் சேர்ந்துள்ளன. ஒரு கம்ப்யூட்டர் சிப் மிகவும் சிறியதாக
இருக்கலாம், ஆனால் அதனால் கோடிக்கணக்கான விஷயங்களை வைத்திருக்க முடியும். அது போல
உன்னுடைய பல்லில் கோடிக்கணக்கான கிறிஸ்டல்கள் உள்ளன. மூளை மனித கம்ப்யூட்டர், அதன்
சிப்-பாக பல்லில் எல்லா நினைவுகளும் இருக்கின்றன, இன்றிலிருந்து பல கோடி வருடங்கள்
பழமையான பரிணாம வளர்ச்சி வரை போகலாம்.

பற்களை சரியாக உபயோகப்படுத்தினால், தேவகீத், அவைகள் சேகரம் செய்து
வைத்துள்ள நினைவுகளை விடுவிக்கும் ஒரு புதிய வழியில் அவைகளை பயன்படுத்தினால்,
அப்போது இப்போதுள்ள பல வியாதிகளின் வேர்களை கண்டு பிடிப்பது சாத்தியமாகும். மக்களை
பாதிக்கும் பல்வேறு மன அழுத்தங்களை பல்லின் மூலம் குணப்படுத்த முடியும். பற்களை
சரியான முறையில் பயன்படுத்துவது எப்படி என்பது நமக்கு தெரிந்துவிட்டால் பைத்தியகார
விடுதிகள் காலியாகி விடக்கூடும். சரியான பல்லை எடுப்பதன் மூலம், சரியான நரம்பை
தொடுவதன் மூலம், இந்த பல்லினுள், அந்த ஈறினுள் உள்ள பாதிப்பை சீர் செய்வதன் மூலம்,
அதை சுத்தப்படுத்துவதன் மூலம், இந்த உடல் முழுவதும், மனம் முழுவதும் சுத்தமாகலாம்.
பல்லை சுத்தம் செய்வதன் மூலமாக மனிதனை முழுமையாக குணப்படுத்தலாம்.

குறிப்பட்ட ஒரு பல்லில் என்னுடைய அம்மா, என்னுடைய அப்பா, என்னுடைய
குடும்பம், மற்ற உறவுகாரர்கள், நண்பர்கள் என அனைவரது நினைவுகளும் இருப்பதை
கண்டுபிடித்தேன். சில நேரங்களில் அதே பல்லில் வேறு விதமான மக்களின் வேறு விதமான
நிகழ்வுகள் கொண்ட வேறுஒரு நரம்பு வேரும் தொடர்பு கொண்டிருப்பதைப் பார்த்தேன். இந்த
ஒன்று – ஓஷோ தனது வலது கீழ்தாடையின் முதல் பல்லை சுட்டிக்காட்டுகிறார் – என்னுடைய
தாயின் நினைவுகளை கொண்டுள்ளது. தியானம் செய்பவர்களுக்கு இது மிக முக்கியத்துவம்
வாய்ந்தது ஏனெனில் எல்லா மனித கட்டுதிட்டங்களின் வேர்களும் – மனரீதியான,
உடல்ரீதியான, உணர்வுரீதியான, மற்றும் பல ஆழமான கட்டுத்திட்டங்களின் வேர்களும் – அங்கேயுள்ளன.
ஆண் மற்றும் பெண் என்னும் மிக பழமையான உடல்ரீதியான கட்டுதிட்டங்களையும் நீ பல்லில்
காணலாம். மிகப் பழமையான உறவுகளின் கட்டுதிட்டங்களையும் அங்கே கண்டு பிடிக்க
முடியும்.

பெண்ணின் மிக பழமையான, மிக ஆழமான கட்டுதிட்டம் என்னவென்றால் அவள்
யாருக்காவது தேவைப்பட வேண்டும் என்பதுதான் அவளது தேவை. அவள் தேவைப்பட வேண்டும்
என்பதுதான் அவளது தேவை என்பது ஒவ்வொரு பெண் சாதகியின் ஆழமான தியானத்தின் போதும் இடையூறாக
இருக்கிறது, அல்லது இடையூறாக அது உள்ளே வருகிறது. நான் இதை இன்னும் சிறிது அதிகமாக
விளக்க வேண்டும்.

கடந்த காலத்தில் உள்ள குருக்களில் பலரும் ஆண்களே, அல்லது அவர்கள் ஆண்
உடல் கொண்டவர்கள், ஒரு உண்மையான குரு என்பவர் ஆணுமல்ல, பெண்ணுமல்ல. அவர்
இரண்டையும் கடந்தவர். அவர் உடல்ரீதியை கடந்தவர். ஒரு குரு எல்லா உறவுகளையும்
கடந்தவர். பெண் என்பதை மட்டுமல்ல, உறவுகள், நட்பு, அம்மா. அப்பா என எல்லாவற்றையும்
கடந்தவர். நீ நேசம் அன்பு என்று அழைக்கும் எதிலும் அவருக்கு என்ன தொடர்பு இருக்க
முடியும்.

குரு முற்றிலும் ஒருமையானவர். அங்கே எந்தவித உறவுக்கும்
சாத்தியமில்லை, அம்மா, அப்பா, நண்பர் போன்ற உறவுகளுக்குகூட சாத்தியம் இல்லை. இதை
புரிந்து கொள்வது உனக்கு சிறிது சிரமம்தான், ஆனால் நீ முயற்சி செய்யலாம். நீ இதை
இன்று புரிந்து கொள்ளாமல் போகலாம், ஆனால் நாளை, அல்லது மறுநாள், அல்லது ஏதாவது
ஒருநாள் –  ஆனால் வாரத்தில் ஏழுநாட்கள்தான் உள்ளன.

குரு, அல்லது எந்த ஞானமடைந்தவரும் மனதை கடந்து சென்று விடுகிறார்,
மனம்தான் ஆணவம். உறவுகளையும் சார்ந்தவர்களையும் பற்றிய பல்வேறு கருத்துக்கள்
கொண்ட, எல்லா கட்டுதிட்டங்களுடன் உள்ள மனம்தான் ஆணவம். இவை யாவும் பழங்காலத்திய உடல்ரீதியான நினைவுகளை வேராக கொண்டவை.  ஞானமடைந்த பின் ஒருவர் தன்னுடைய சுயத்துடன் கொண்டிருந்த தொடர்பும் கூட மறைந்துவிடும். அதுவும் ஒருவகையான உறவுதான்.

ஞானமடைந்தவருக்கு இந்த விதத்தில் மனம் என்பது கிடையாது. எல்லா
கட்டுதிட்டங்களும் அவருக்கு போய்விட்டது, திரும்ப உருவாகமுடியாதபடி அழிந்துவிட்டன.
ஆணவம், ஈகோ, கடைசியாக மறையும்போது, அங்கு யாருமில்லை, எந்த சுயமுமில்லை. ஒரு ஞானி
உடல்ரீதியான பிடிப்புகளை அடிவேரோடு வெட்டிவிடுகிறார். அவருக்கு எல்லா
உணர்வற்றதன்மைகளும் போய்விட்டன. மீதம் இருப்பது எல்லாம் புத்தாவால் –அனத்தா-
என்றழைக்கப்பட்ட அந்த வெறுமை தான்.

ஞானமடாவது என்றால் ஞானமடைந்தவருக்கும் பிரபஞ்ச இருப்புக்கும் நடுவில்
எதுவும் இல்லை ஓன்று பொருள். சில விதங்களில் அவர் இல்லாமல் போய்விட்டார். அவர்
இல்லாமைக்குள், பிரபஞ்ச இருப்புக்குள் கரைந்து விட்டார். அவரது இணைப்புணர்வு
அபாரமானது. அவரது ஆணவம் அவரது இணைப்புணர்வில் கரைந்துவிட்டது. எது ஆணவமாக
இருந்ததோ, அது இப்போது இணைப்புணர்வாக இருக்கிறது. அவர் இணைப்புணர்வாக
மாறிவிட்டார், அவர் அன்பாக மாறிவிட்டார். அங்கு இடையில் ஆணவம் இல்லை. அவர்
கடந்தநிலையில், பிரபஞ்ச இருப்புற்குள் கரைந்துவிட்டார். அவரு பிரபஞ்ச இருப்பின்
தொடர்ச்சி. மனதோடும், கடந்துபோனவைகளோடும் முற்றிலுமாக தொடர்பை இழந்தவர்தான் ஞானி.
கடந்தகாலம் முற்றிலுமாக நீங்கிவிட்டது. உறவு என்பது சிறிதும் சாத்தியமில்லை.

நான் தேவைப்பட வேண்டும் என்ற தேவை உள்ள பெண் சாதகி, அடி ஆழத்தில் குரு
தனக்கு மட்டுமே உரியவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள். அதை அவள் அன்பு
என்றழைக்கிறாள். அது ஆழமான அன்பு போன்ற உணர்வைத் தருகிறது, ஆனால் மிகமிக ஆழமான
தளத்தில் அது ஒரு உடல்ரீதியான கட்டுதிட்டமே. நீ இதை எனக்கு நெருக்கமாக இருக்கும்
பெண் பக்தைகளிடம் பார்க்கலாம், ஆனால் அவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு
இல்லை. அவள் குரு அவளுடைய காதலனாக இருக்க விரும்புகிறாள். ஆனால் அது சிறிதுகூட
சாத்தியமற்றது.

குருவின் அன்பு உடலிலிருந்து வரும் அன்பு அல்ல. அது உடலின்,
சுரப்பிகளின் ரசாயனமோ, நரம்பு மண்டலத்தில் உள்ள ரசாயனமோ கிடையாது. அப்படியல்ல. ஒரு
குருவின் அன்பு உறுதியாக அது அல்ல, அது அப்படி இருக்க முடியாது. அவர் இப்போது
உடலில் உள்ளவரல்ல. அன்பு பிரபஞ்ச இருப்பின் விதி. குரு பிரபஞ்ச இருப்பில்
கலந்துவிட்டார். பிரபஞ்ச இருப்பே அன்பினால்தான் செய்யப்பட்டுள்ளது, ஆனால் அது மனிதன்
அன்பு என்று அழைப்பதிலிருந்து வெகுதூரம் கடந்துள்ளது.

ஒரு பெண்ணுக்கு குருவுடன் இருப்பது மிகவும் கடினம், ஏனெனில்
தேவைப்படுபவளாக இருக்கும் அன்பை எதிர்நோக்கும் ஒரு முழு கட்டுதிட்டத்திற்கு
உட்பட்டவளாக அவள் இருக்கிறாள். வேறு எதையும்விட தான் தேவைப்பட வேண்டும் என்ற தேவை
உள்ளவள் பெண். மேலும் பெரும்பான்மையான குருக்கள் ஆண் உடல் பெற்றவர்கள். இதற்குக்
காரணம், ஆண் சக்தி பெரிதும் வெளியேறுவதாகவே இருக்கிறது. ஆகவே அவர்களது உடலால்
ஞானமடையும்போது ஏற்படும் மிகப்பெரிய தாக்கத்தை எதிர்கொள்ள முடிகிறது என்பதுதான்.

நமக்குத் தெரிந்தவரை கடந்தகாலத்தில் பெரும்பான்மையான குருக்கள்
ஆண்களாகவே இருந்துள்ளனர். ஆனால் பிரபஞ்ச இருப்பு இம்மி பிசகாத சமநிலை கொண்டது,
நடுநிலையானது. ஆண்களின் அளவிற்கு பெண்களும் ஞானமடைந்துள்ளனர். அதில் எந்த
கேள்விக்கும் இடமில்லை, ஆனால் அவர்களது உடல்கள் இறந்துவிட்டன. குருவாவது என்பது
ஞானமடைவது என்பதோடு நிற்பதல்ல.

ஒரு விதத்தில் ஞானமடைவது என்பது எளிதானது, ஆனால் ஞானமடைந்தவனாக வாழ்வது
என்பது முற்றிலும் வேறானது. உடலில் இருப்பதற்கு மிகுந்த முயற்சி தேவைப்படுகிறது.
அதோடு குரு என்ற பரிமாணமும் சேரந்து கொள்கையில் அது இன்னும் சிக்கலாகிறது. உடலில்
இருப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருப்பதல்லாமல், உன்னை மக்கள் கூட்டம் கொல்ல
விரும்புகிறது. அவர்களது வாழ்க்கை அர்த்தமற்றது, பொருளற்றது, நிறைவற்றது,
துன்பமும் வேதனையும் வலியும் நிறைந்தது என்று யாரும் ஞாபகப்படுத்துவதை மக்கள்
விரும்புவதில்லை. ஆவர்கள் ஞானமடைதலைப் பற்றிக் கேட்க விரும்புவதில்லை. பதிலாக
ஞானமடைந்தவனை கொன்று விடுவது அவர்களுக்கு எளிதாக இருக்கிறது.

ஒரு விதத்தில் குருவாக இருப்பது ஒரு பிரபஞ்ச இருப்பின் வேடிக்கைதான்.

பழைய விதமான குருக்களின் கம்யூனில் ஏன் பெண் சாதகிகள் இல்லை என்பதை நேற்று
இரவுதான் கண்டுபிடித்தேன். அது மிகவும் கடினம். பெண் சாதகிகளின் உடல்ரீதியான்
கட்டுதிட்டம் அதை மிகவும் சிக்கலாக்கி விடுகிறது. என் வாழ்நாள் முழுவதும் நான்,
புத்தரையும் மகாவீரரையும் ஏதோவொரு விதத்தில் கோழை என்றே நினைத்திருந்தேன். சமூக
நிரபந்தத்தாலும், அரசியல்வாதிகள், மதவாதிகள் பிரச்சனையாலுமே அவர்கள் தங்களது
சங்கத்தில் பெண்களை சேர்க்கவில்லை என்று நினைத்திருந்தேன்.

நேற்று இரவு, இந்த உடல்ரீதியான கட்டுதிட்டத்தை பற்களில்
கண்டுபிடித்தவுடன், நான் புத்தரிடமும், மகாவீரரிடமும் பேசுவதற்குப்
போனேன்………………