வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

அன்பின் அனுபவம்

என் இதயத்திற்கு
இனிய நண்பா!

கோபம் என்பது என்ன? 

நீ வன்முறையில்
ஈடுபடுகிறாய்,

நீ யாரையாவது
எதையாவது

அடிமை
செய்ய முயல்கிறாய்,

நீ நெருப்பாய்
எரிகிறாய்,

நீ அழிக்கிறாய்,

நீ
அசிங்கமாகிறாய்,

முடிவில் நீ
சோகத்தில் குற்ற உணர்வில்
சக்தியின்மையில் அமிழ்கிறாய். 

அன்பு என்பது என்ன?

நீ பகிர்ந்து
கொள்கிறாய்,

நீ உன்னை, உன்
உடலை ஆட்சி செய்பவனாகிறாய்,

நீ குளிர்ந்த
நெருப்பாய் ஒளி விடுகிறாய்,

நீ
படைப்பாளியாகிறாய்,

நீ அழகாகிறாய்,

முடிவில் நீ
மகிழ்ச்சியில் பரவசத்தில்
சக்திப் பிரவாகத்தில் பொங்குகிறாய். 

எனது அன்பே!

நீ ஏன் அன்பைத்
தேர்ந்தெடுக்கக் கூடாது?

உனக்கு அதன் சுவை
ஏற்கனவே தெரியும்!

தாய்மையின்
அரவணைப்பில், காதலின் சுகத்தில்,

நம் எல்லோருக்கும்
தெரியும்!!

‘யாரோ ஒருவர் எந்த
இலக்குமில்லாமல்

மகிழ்ச்சியோடு
பகிர்ந்துகொள்ளும்போது’

இதுதான் அன்பின்
ரகசியம்.

மழை, மலைகள்,
கடல், ஆகாயம், மலர்கள்,

இப்படி………
இயற்கை இயங்கும் ரகசியம் இதுதானே!!

இதுதான் ஆடம்பர
வாழ்வு!

ஆர்ப்பரிக்கும்
வாழ்வு!

ஆனந்த
வாழ்வு!

அருமை நண்பா!

நாம்
அனைவரும்…..

‘இலக்கு கொண்ட
வாழ்வில்,

குறி கொண்ட மனதில்’

மாட்டித்
தவிப்பவர்கள்.

இதுதான் விலங்கு,

இந்த உலகின் ஒரே
விலங்கு.

நேசத்தில் கரைந்து
போ,

எந்த விலங்காலும்,
உருகுவதை ஓடுவதை
கட்டிப் போட முடியாது.

இந்தப் பிரபஞ்ச
அன்பு நம்முடையதாகட்டும்!

இந்தக் கடல் போன்ற
அன்பில் ஆழம் செல்!

நீ அழிவில்லா
அமைதியைக் காண்பாய்!!

இந்த அன்பையும்
அமைதியையும்
அறியப் பெற்றவுடன்……..

பாறைகள் உன்னுடன்
அரட்டை அடிக்கும்,

மலர்கள் காதலுக்கு
கொக்கி போடும்,

மரங்கள் நண்பனாய்
கேலி பேசும்.

நீ காலத்தில்
வெடிப்பாய்!

சக்தியில் பொங்கி
வழிவாய்!

இதிலிருந்துதான்
வாழ்வின் ஆரம்பமே……
இதற்கு முன்பு இல்லை.

காலத்தில்
வாழ்வதென்பது………

மரணத்திற்குக்
காத்திருத்தல்தானே?

எனது சிநேகமே!

நான் உன் கண்களில்
ஒரு கவிதையைப்
படிக்க வேண்டும்!

நான் உன்
இதயத்தில் ஒரு நடனத்தைக்
காண வேண்டும்!

நான் உன் உயிரில்
அமரத்துவ அன்பை
உணர வேண்டும்