வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

ஒரு சிறுவன் தன் வீட்டிற்க்குள் ஓடி வந்தான் – அவனுக்கு மூன்று வயதிருக்கும் – தன் தாயிடம், “ அம்மா, ஒரு பெரிய சிங்கம் பயங்கரமாக கர்ஜித்தபடி என் பின்னால் ஓடி வந்தது. பல மைல் தூரம் என்னை துரத்தி வந்தது. ஆனால் நான் எப்படியோ தப்பித்து வந்துவிட்டேன். பல முறை அது என் அருகில் வந்தது. அது என்னை தாக்க முயலும் போதெல்லாம் நான் வேகமாக ஓடி வந்துவிட்டேன் அம்மா “ என்றான்.

அம்மா தனது பையனை பார்த்து, “டாமி, நான் உனக்கு பல கோடி முறை சொல்லிவிட்டேன். எதையும் மிகைப் படுத்தாதே என்று. எப்படி நீ இந்த நகரத்தில் சிங்கத்தை கண்டாய் ? நீ பல மைல்கள் ஓடி வந்தாயா ? எங்கே அந்த சிங்கம் ?” என்று கேட்டாள்

சிறுவன் கதவுக்கு வெளியே பார்த்தான். பின் கூறினான். “அது வெளியே நின்று கொண்டிருக்கிறது. ஆனால் உண்மையை சொல்லப் போனால் அது ஒரு சிறிய நாய் – மிகவும் சிறியது. ஆனால் அது என் பின்னால் ஓடி வரும் போது பார்க்கும்போது எனக்கு அது சிங்கம் போல தோன்றியது. நீ என்னை எதையும் மிகைப்படுத்தாதே என்று கூறுகிறாய். ஆனால் இப்போது நீ என்னிடம் அதை பல கோடிமுறை கூறிவிட்டதாக மிகைப்படுத்துகிறாயே ” என்று கேட்டான். 

நாம் ஒருபோதும் நம்மை உணர்வதில்லை. அடுத்தவரை திருத்துவதில் மிக கவனமாய் இருக்கிறோம்.