வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

அன்பு உன் இயல்பு

என் இனிய நண்பா!

ஒருமுகப் பட்ட மனம் இலக்குநோக்கியது,
பேராசை கொண்டது,
அழுத்தத்தில் உள்ளது,
சுட்டுப்பொசுக்குவது,
இது குறுகிய மனத்தன்மை.

இதுதான் அன்பின் எதிரி,
நேசத்தின் கொலையாளி,
கருணையை அழிப்பது.

ஓ! என் களைத்துப் போன நண்பனே!

இந்த குறுகிய மனத்தன்மையை விடு,
எடைப் போடும் மனத்தைவிட்டு வெளியில் வா நீ
அன்பைப் பார்ப்பாய்!
நீ நேசத்தை நுகரவும், தொடவும், சுவைக்கவும் முடியும்!
அது எல்லா இடத்திலும் இருக்கிறது – எப்போதும்!

என் அன்பே!

அன்பு இந்த பூமியின் அடி நீரோட்டம்,
அது மாசுபடாமல் எப்போதும் புதிதாய்,
வாழ்வையும் வளத்தையும்,
வாரி வழங்குவதாய் இருக்கிறது!

நீ உணர்ச்சிகர வாழ்வு என்ற வேரை வளர்த்துக் கொள்,
அதை நீட்டி அடிநீரைத் தொட்டுவிட்டால் போதும்!

அன்பு ஒளி வீசும் சூரியன்,
அடுத்தவர் போற்றும் அலங்கார வாழ்வு எனும்…….
சிறைக்கூட இருட்டில் நீ இருக்கிறாய்,
மற்றப்படி வெளியே………………..
அன்பு அங்கிங்கெணாதபடி எங்குமிருக்கிறது.

என் இதயமே!

அன்பின் காற்றை கடுகடுப்பால் மாசுபடுத்தாதே!
அன்பு உன் வெகுவெகு இயல்பு,
தயவுசெய்து அதைத் தேடாதே!
வாழு, சிரி, விளையாடு –
எவ்வளவு ஆழமாக முடியுமோ அந்தஅளவு –
அது அங்கு இருக்கும்!

மலைக்குப் போ,
சோலைக்குப் போ,
கடலுக்குப் போ,
குழந்தையிடம் போ,

நீ அந்தப் புதிய காற்றை,
அந்த வளம் கொடுக்கும் காற்றை,
அந்த குளிர்ந்த காற்றை,
அந்த மகிழ்ச்சிக் காற்றை,
உணரவில்லையா?

இதுதான் அது,
அந்த அன்புக்காற்று.