வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

நிழல்

 

தியானம் என்பது மகிழ்வோடு இருப்பதன் வெளிப்பாடு. ஒரு மகிழ்வாக இருக்கும் மனிதனை
தியானம் நிழல் போல தொடரும். அவன் எங்கு இருந்தாலும், என்ன செய்தாலும் அவன்
தியானத்தில் இருக்கிறான். அவன் ஆழ்ந்து நிலைகொள்கிறான்.

 

நீ உனது அகங்காரம் என்பதை நிழல் என்பதை ஏற்றுக் கொண்டால் பின் அங்கே எந்த
பிரச்னையுமில்லை.

 

நிழல் நீயல்ல என்பதை வெறுமனே நினைவில் கொண்டாலே போதும்.

 

மக்கள் தங்களது கடந்தகாலத்தின் நிழலிலேயே தொடர்ந்து வாழ்கிறார்கள்.

 

நிழலுக்கு எந்த சக்தியும் கிடையாது, அதற்கு உயிரில்லை.

 

உனது சொந்த நிழலுடன் சண்டையிடாதே.

 

புதிது

 

பழமை எனும் போது ஒருவர் திறமையாக இருக்கலாம்,

ஆனால் புதிது எனும்போது அவர் தடுமாறுவார்.

பழமை எனும் போது எனில் நீ என்ன செய்ய வேண்டும் என உனக்குத் தெரியும்,

புதிது எனும் போது நீ அடிப்படையிலிருந்தே கற்க வேண்டும்.

புதுது எனும் போது நீ அறியாமையை உணர்வாய்,

பழமை எனும் போது உனக்கு எல்லாமும் தெரிந்திருக்கும்.

புதிது எனும்போது நீ மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருந்தாக
வேண்டும், இல்லாவிடில் ஏதாவது தவறாகிவிடக் கூடும்.

 

ஒரு தியானம் செய்யும் மனம் எப்போதும் புதிதாக, புத்துணர்வில், நிகழ்காலத்தில்
இருக்கும்.

 

விழிப்புணர்விற்கு எல்லாமும் புதிதுதான், எதுவுமே பழமையானதல்ல.

 

புதிதோடு தான், புதிதோடு மட்டும் தான் வாழ்க்கை இருக்கிறது.

 

தன்னுணர்வு என்பது எப்போதும் புதிதுதான், தொடர்ந்து புதிதுதான், அது எப்போதும்
பிறக்கிறது.

 

இருளெனும் துன்பத்திற்கு பிறகுதான் புதிய காலை பிறக்கிறது, புதிய சூரியன்
எழுகிறது.

 

நீ இளமையில் இருக்கும்போது நினைவு சுமை இல்லாத போது எல்லாமும் புதிதாக
இருக்கிறது.

 

வண்ணங்கள்
 

ஒரு ஒளிக்கற்றை முப்பட்டை கண்ணாடி வழியாக செல்லும்போது உடனடியாக அது ஏழு
நிறங்களாக பிரிகிறது, வானவில் உருவாகிறது. முப்பட்டை கண்ணாடி வழியாக செல்லும் முன்
அது ஒன்றாக இருக்கிறது. முப்பட்டை கண்ணாடி அதை பிரிக்கிறது. வெள்ளை ஏழு
வண்ணங்களில் கரைந்து விடுகிறது. இந்த உலகம் ஒரு வானவில், மனம் என்பது முப்பட்டை
கண்ணாடி போல, இருப்பு தான் வெள்ளை ஒளிக்கற்றை.

 

உனது மனம் நீ செய்வது, நீ நினைப்பது ஆகிய எல்லாவற்றிலும் புகுந்து அவற்றிற்கு
வண்ணம் பூசி விடும்.

 

உனது வாழ்க்கை ஒரு வானவில் போன்றது என்பதை பார். அது எல்லா வண்ணங்களையும்
உருவாக்குகிறது.

 

சில மலர்கள் மணத்தின் மூலம் பிரார்த்தனை செய்யும் போது சில மலர்கள் வண்ணத்தின்
மூலம் பிரார்த்தனை செய்கின்றன.

 

மற்றவர்கள் ஒருபோதும் பார்த்திராத சில வண்ணங்களை ஒரு சிலர் மட்டும்
பார்க்கின்றனர்.

 

வண்ணங்களை இறைமை தன்மையுடையதாக பார்க்கின்றவன் மட்டுமே ஓவியன் ஆகிறான்.