வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

கிருஷ்ணராதா என்ற தந்த்ரா குழு சிகிச்சையாளர்
இத்தாலியன் ஓஷோ டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த
பேட்டியிலிருந்து………………….

உங்களுடைய வாழ்வைப் பற்றி கூறுங்கள் ராதா……

நான் நேபாளில் மதநம்பிக்கையுள்ள குடும்பத்தில்
பிறந்து பெண் துறவிகளால் நடத்தப்பட்ட ஒரு பள்ளியில் படித்தேன். நான் மிகவும்
துடிப்பான பெண், ஆகவே இயல்பாகவே எனக்கு வாழும் வகை பற்றிய ஏகப்பட்ட கேள்விகள்
இருந்தது. நான் மிகவும் உயிர்துடிப்பாக இருந்ததால் உடல் உணர்ச்சிகளும் எனக்கு
அதிகமாக இருந்தது. அது என்னுடைய மதத்தில் மிகவும் தவறான செயலாக கருதப்பட்டது. ஆகவே
நான் பாவம் என்ற கருத்திற்க்கும் வாழ்வுக்கும் இடையே பிளவுபட்டு தவித்தேன்.

ஆகவே நான் 1960 காலகட்டங்களில் நாடோடியாக திரிய
ஆரம்பித்தேன். யூரோப் முழுவதும் தனியாகவே சுற்றி வந்தேன். எல்லாவிதமான
அனுபவங்களும் கிடைத்தபோதிலும் நான் வேறுபட்ட ஒரு உலகத்தை தேடிக்கொண்டிருந்தேன்.

எனக்கு 19 வயதாகும்போது, நான் ஓஷோவை சந்தித்த பலரும்
சொல்வதை கேட்ட பிறகு, அவரை போய் பார்க்க முடிவு செய்தேன். தியானம் செய்வது, குரு
என்பவராக ஏற்றுக் கொள்வது என்பதெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் நான் அவரை
பார்த்தபோது என்னை அதிகமாக தாக்கியது அவர், “உடல்உணர்ச்சி என்பது புனிதமானது, உடல்உணர்ச்சி என்பது
எல்லோருக்கும் பொதுவானது, அது இயற்கை நமக்கு கொடுத்த வரம்” என்று சொல்லியதுதான்.

நான் என்னை அதிர்ஷ்டசாலியாக எண்ணிக்கொன்டேன்.
ஏனெனில் இந்த அமுக்கிவைத்தல் மற்றும் கட்டுப்பாடு செய்வதையெல்லாம் தாண்டி இன்னும்
என்னிடம் இளமையும் புத்துணர்வும் இருந்தது. அந்த கட்டத்தில் என்னிடம் இழக்க
ஏதுமில்லை.

என்னுடைய இளம்வயது காரணமாக, ஓஷோ என்னை அவரது
சிறகுக்குள் வைத்துக்கொண்டார். நான் எனது சீரியஸான பிரச்னைகளுடன் அவரை
அணுகும்போதெல்லாம் அவர் சிரிப்பார். அந்த காலகட்டத்தில் அவரை தனிப்பட்ட முறையில்
சந்திப்பது மிகவும் எளிதானதாக இருந்தது. 30 இந்தியர்களும் 20 வெளிநாட்டவர்களும் என
ஒரு 50 பேர் மட்டுமே இருந்தனர். அவரை முதன்முதலில் பார்த்த கணத்திலிருந்து அவரை
நேசிப்பது திரும்ப திரும்ப நிகழும் ஒரு நிகழ்வாக இருந்தது. அதை சொல்ல முடியாது.
அதை ஒரு கிறுக்குத்தனமான அன்பாக உணரத்தான் முடியும்.

நான் ஒரு ஜெர்மனியனுடன் கோவா போக இருந்தேன்.
ஆனால் ஓஷோ நான் தான் உன்னுடைய கடல் என்று கூறி என்ன தடுத்துவிட்டார். பின்னர் நான்
அவருடன் அவர் அமெரிக்கா போகும்வரை இருந்தேன், மீண்டும் ஒரு வருடம் கழித்து நானும் “ஒரகன்” சென்றுவிட்டேன். பின்பு அவர் அங்கிருந்து
திரும்பி வந்த போது நானும் திரும்பி வந்து 1992 வரை பூனா ஆசிரமத்தில் இருந்தேன்.
பின்னும் அகநலக் குழுக்கள், பயிற்சிகள் ஆகியவற்றுக்காக ஒவ்வொரு வருடமும் வந்து
கொண்டுதான் இருந்தேன்.  இப்போதும் அவ்வப்போது
வந்து கொண்டுதான் இருக்கிறேன்.

எப்படி நீங்கள் தந்த்ரா பயிற்சி அளிக்க துவங்கினீர்கள்

இரண்டாவது வருடம் நான் பூனாவில் இருந்தபோது ஓஷோ
என்னை ப்ரைமால் மற்றும் என்கவுணடர் குழுக்கள் நடத்துவதற்கான பயிற்சி எடுத்துக்
கொள்ள சொன்னார். அது நடக்கும் இடத்தில் போய் எட்டிப் பார்த்தேன். அங்கே மக்கள்
தங்களது முழுமையான பைத்தியகாரத்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்ததை பார்த்தவுடன்
ஓடியே வந்து விட்டேன். நான் தரையை சுத்தம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி
விட்டேன். நான் கம்யூனில் தியானம் செய்யவும் சிறிது வம்பு பேசவும்தான்
விரும்பினேன். குழுசிகிச்சை உலகில் நுழைய நான் விரும்பவில்லை. ஆகவே நான் கம்யூனில்
இருந்தவரை தரையை சுத்தம் செய்யவும் பேக்கரியில் வேலை செய்யவும் கிச்சனில் வேலை செய்யவும்
லாண்டரியில் துவைக்கவும் என்றே இருந்தேன்.

ஆகவே ஓஷோ தனது உடலை விட்ட மூன்று வருடங்களுக்கு
பிறகே நான் தந்த்ரா டீச்சராக பணியாற்ற துவங்கினேன். மேலும் என்னுடைய அணுகுமுறை அகநல
குழு முறையில் அன்றி தியானமுறையில்தான் இருக்கும்.

தந்த்ரா என்பது மிகப் பெரியது.. அது பல
விஷயங்களை குறிக்கும். ஒவ்வொருவரும் வேறுபட்ட விதத்தில் வாழ்கிறார்கள். ஆகவே
தந்த்ரா என்பது ராதாவைப் பொறுத்து என்ன என்று சொல்ல முடியுமா
? 

ஓஷோவின் தந்த்ரா பற்றிய பேச்சுகள் என்மேல்
மிகுந்த விளைவை ஏற்படுத்தியுள்ளன. எனர்ஜி தரிசனத்தின் போது ஓஷோ என்னை அவரது
மீடியமாக பயன்படுத்தினார். நான் எனது கண்களை மூடி அந்த உணர்வை உணரும்போது நான்
என்னுள் பரவசத்தை உணர்ந்தேன்.

யாருடனாவது நான் உறவு கொள்ளும்போது அது
முழுமையையும் உள்ளிருந்து அனுபவிப்பேன். உள்ளே அது எப்படி வேலை செய்கிறது என்று
பார்ப்பேன். இது என்னுள் ஒரு நிறைவை தந்ததை உணர்ந்தேன்.

இதைப் பற்றி பேசுவது மிகவும் கடினம், ஏனெனில்
இது தனிப்பட்ட விஷயம் மட்டுமல்ல, விவரிப்பதும் கஷ்டம். ஆனால் நான் எப்போதுமே ஓஷோ ஒரு
தந்தரா குரு என்றே நினைக்கிறேன். அவர் தனது சீடர்கள் அனைவருக்கும் இந்த விதமான
தாக்கத்தை ஏற்படுத்தினார்.

என்னுடைய கதைக்கு திரும்ப வந்தால் ஓஷோ தனது உடலை
விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு நான் இந்த உலகத்திற்கு திரும்ப போய் வாழ முடிவு
செய்தேன். அப்போது எனக்கான வேலை எது, எனக்கு என்ன தெரியும்? என்னால் என்ன செய்ய முடியும்? எனக்கு ஏற்ற வேலை எது? என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். நான்
எப்போதும் மக்களுடன் இருக்க விரும்புவேன். அவர்களது அனுபவங்கள், அவர்களது பாதைகள்
என அவர்களுடன் உரையாட விரும்புவேன். எனவே எனக்கு கிடைத்த பதில் மக்களிடம்
சக்தியின் மூலம் என்ன செய்யலாம் என்பதை கொண்டு செல்வதே.

முதலில் நான் தியானம் மற்றும் சக்தியை
கொண்டுதான் பயிற்சிகள் நடத்த முயன்றேன். ஆனால் எப்போதெல்லாம் உடல்உணர்வு அமுக்கி
வைக்கப்பட்டிருக்கிறதோ, அடக்கி வைக்கப்பட்டிருக்கிறதோ அப்போதெல்லாம் பயிற்சி வெல்ல
முடிவதில்லை என்பதை உணர்ந்தேன். பின் என்னை நானே திரும்பி பார்த்தேன், எது என்னை
ஓஷோவிடம் கொண்டு வந்து சேர்த்தது, எது எனக்கு அங்கே மிகவும் கவர்ந்தது, பதில்
மிகவும் தெளிவாக உடல்உணர்ச்சி என வந்தது. பின் நான் என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தை
அடிப்படையாக கொண்டு ஒரு பாதையை உருவாக்கினேன். அது இப்போது மெதுமெதுவாக வளர்ந்து
ஐந்து வாரங்கள் பயிற்சியாக உருவாகியுள்ளது. அது பல நிலைகளாக உள்ளது. காமவுணர்வை
எழுப்புதல், உடலை எழுப்புதல், புலன்களை நோக்கி நகர்தல், காமத்தின் பல்வேறு நிலை
சக்திகள் மற்றும் அவைகளை உணர்ந்தறிதல், இறுதியாக நுட்பமான பகுதியான தியானம்
மற்றும் சக்திநிலையை உணர்தல் என்ற ஆன்மீக விஷயத்தில் முடியும்.

தந்த்ரா என்பது வெறும் உடல்உணர்வு சம்பந்தபட்டது
மட்டுமல்ல, அது வாழ்வை முழுமையாக ஏற்றுக் கொள்ளுதல் என்று ஓஷோ கூறுகிறார். ஆனால்
பலரும் தந்த்ரா என்ற பெயரில் பல்வேறு விதமான பட்டறைகள் நடத்துகிறார்கள்.
இதைப்பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்
?.

ஓஷோ எல்லாமும் தந்த்ராதான் என்று கூறியுள்ளது
ஒரு வகையில் சரிதான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இப்போது எல்லாமும் தந்த்ரா என்ற
பெயரில் அழைக்கப்படுகிறது. சிலநேரங்களில் மிகவும் கேள்விகுறியான விதத்தில் விளம்பரம்
தரக்கூடிய வகையில் எல்லா விதமான விஷயங்களுக்கும் இந்த வார்த்தை உபயோகப்படுத்தப்படுகிறது.
உதாரணமாக மஸாஜ், டி-சர்ட் வாசகம், குளிர்பானங்கள் இப்படி சம்பந்தமற்ற விதங்களில். இப்போது
தந்த்ரா பயிற்சிகள் நடத்துபவர்களில் சிலர்தான் அதன் ஆன்மீக பகுதியை மையமாக
கொண்டுள்ளனர், இன்னும் பலர் ஆரோக்கியமான உடலுறவுக்கான பயிற்சியாக இதைக்
கொண்டுள்ளனர், ஆனால் இது தியானத்திற்கு எந்த வகையிலும் தொடர்புடையதல்ல.

தந்த்ரா என்பது உண்மையில் முழுமையாக உன்னை நீ
எப்படி இருக்கிறாயோ அப்படியே ஏற்றுக் கொள்வதும் உனக்கு சரி என்று தோன்றாத எதையும்
செய்யாமல் இருப்பதும் ஆகும்.   – 
ஓஷோ

என்னைப் பொறுத்தவரை முதலில் அந்த விஷயத்தை நன்கு
புரிந்து கொண்டு பின்பு சில சுத்தம் செய்தலும் வெளிக்கொட்டுதலும் செய்ய வேண்டும்.
இல்லாவிடில் சரியான முறையில் கற்றுக் கொடுக்க முடியாது. அடுத்த நிலையாக நமது
கட்டுப்பாட்டையும் அதன் விளைவாக நாம் அடையும் குற்ற உணர்வையும் புரிந்துகொள்ள
வேண்டும். எங்காவது நாம் தடை பட்டுவிட்டால் நமது வளர்ச்சி நின்று விடும். மேலும்
இந்த பயிற்சியில் நமது வாழ்க்கை துணையுடன் எப்படி சக்திபரிமாற்றம் கொள்வது
என்பதையும் கற்றுக் கொள்கிறோம்.

நீங்கள் சிறுவயதில் பாதிக்கப்பட்ட மக்களிடம்தான்
அதிகமாக அக்கறை செலுத்துகிறீர்கள் போல…..

மிகச் சரியாக சொல்லப்போனால் ஆமாம். சிறுவயதில்
வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான் என நினைத்துக் கொண்டிருக்கிறோம்
ஆனால் இந்த இருபது வருட பயிற்சியில் ஆண்கள் தான் அவர்களது சிறுவயதில்
வன்புணர்ச்சியால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் இது அவர்களது
வாழ்வில் மிகப் பெரிய தடைக்கல்லாக உள்ளது என்று தெரிந்து கொண்டிருக்கிறேன். ஆகவே
பெண் ஆண் என இருபாலருக்கும் நான் இணைப்புணர்வு கொண்டு இடம் விட்டு அவர்களது
வழியிலேயே சென்று வெளிப்படையாக இருக்க கற்றுத் தருகிறேன். இந்த பாதுகாப்பான இடம்
தரும் உணர்வால் வன்புணர்வு அனுபவம் கொண்டவர்கள் கூட அதிலிருந்து மீண்டு வந்து
இயல்பாக வாழ முடிகிறது. தெளிவான எல்லைகள் கொண்ட சூழலை உருவாக்கித் தருவது மிக
முக்கியம் என நான் கருதுகிறேன்.

நீங்கள் தனிப்பட்டவர்களிடம் மட்டுமே அக்கறை
செலுத்துகிறீர்களா, அல்லது தம்பதிகளிடமா அல்லது இருவரிடமும் மட்டுமா,

தந்த்ரா தனிப்பட்டு தன்னை உணர்வது. அதைசமயம் இதை
தனியாய் இருப்பவர்களுக்கானது என்று சொல்லக்கூடாது. நாம் முதலில்
நம்மிடமிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும், பின்பு பயிற்சியின் போது தம்பதிகளுக்கான கோர்ஸ்
ஒன்றையும் நடத்துகிறேன். நீங்கள் தம்பதிகளாக வரும்போது ஒருவரது பொறாமை அல்லது அது
போன்ற ஏதாவது ஒரு உணர்வு மற்றவர்களது சக்தியையும் முடக்கி விடுகிறது. நான்
தம்பதிகள் தங்கள் மீது தனிப்பட்ட விதத்தில் ஒரே நேரத்தில் ஆராய்ந்து பார்ப்பதை
செய்வதுதான் எளிதான வழி என்று சொல்கிறேன். அவர்கள் பின் புதிய வழிவகைகளில் சந்திக்கலாம்,
அது ஒருவரையொருவர் நேசிக்க மாபெரும் அளவில் உதவுவதோடு அவர்கள் சுதந்திரமடையவும்
வழி செய்யும்.

நீங்கள் எல்லா வகையினருக்கும் இந்த பயிற்சி  அளிக்கிறீர்களா, ஓரினச் சேர்க்கை கொண்ட ஆண்,
பெண்கள் உட்பட
……

எல்லோருடைய வாழ்விலும் அதே இனத்தின்பால் ஈர்ப்பு
ஏற்படும் ஒரு கால கட்டம் முதலில் இருக்கும். அதை நன்கு ஆழ்ந்து உணர்ந்து
பார்க்கையில், பின்பு எதிர்பாலின் மேல் வரும் ஈர்ப்பு ஆழமாகும். இதற்காக யாரும்
குற்றஉணர்வு கொள்ள வேண்டியதில்லை. இதை பற்றி மேலும் பல புரிதல்கள் இனி இந்த உலகத்தில்
ஏற்படும் என ஓஷோ கூறுவது சரிதான்.

என்னுடைய பட்டறையில் பங்கேற்ற வரும் அனைவரிடமும்
நான் என்னுடைய நோக்கம் தனிப்பட்ட வளர்ச்சி மட்டும்தான். நீங்கள் இங்கு
வந்திருப்பதே நீங்கள் ஏதாவது ஒரு வகையில் வளர வேண்டும் என்பதற்காகத்தான் என்றால்
நான் மகிழ்வேன். நீங்கள் உங்களை ஓரினச்சேர்க்கையாளன் என்று அழைத்துக் கொள்வது என்னைப்
பொறுத்தவரை நீங்கள் எப்படி உங்களை நான் ஒரு இங்கிலீஷ்காரன் என்றோ நான் இந்த
கால்பந்தாட்ட அணியின் ரசிகன் என்றோ கூறிக் கொள்வதைப் போன்றதுதான். இது தந்த்ராவில்
எந்த வகையிலும் நிச்சயமாக உதவப் போவதில்லை. நீங்கள் இங்கே வெளிப்படையாக திறந்த
மனதுடன் இருப்பது மட்டுமே உதவும்.

இந்த கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளில் உருவாகும்
சூழலை எந்தவிதமான தடுப்பும் வைத்துக் கொள்ளாமல் முழுமையாக சந்தியுங்கள், புரிந்து
கொள்ள முயலுங்கள். நீங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், எதுவாக
வேண்டுமானாலும் இருக்க ஆசைப்படலாம். ஆனால் தந்த்ரா என்பது நீ எப்படியோ அப்படியே
உன்னை முழுமையாக நீ ஏற்றுக் கொள்வதும், உனக்கு சரியென்று தோன்றாததை செய்யாததும்
ஆகும். உங்களுடைய தனித்துவத்தை திரும்ப பெறுங்கள், அது உங்களுக்கு என்னவாக
தோன்றினாலும் சரி. என்று முதலிலேயே சொல்லி விடுவேன்.