வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

தெளிவு பெறுவதற்கு இந்த விஷயங்கள் உதவலாம் :

பெண்கள் புரிந்து கொள்வதற்கல்ல, காதலிப்பதற்குத்தான்,

எல்லோரும் உன்னுடன் ஒத்துப்போனால், நீ தவறு செய்கிறாய் என்று பொருள்.

பெண்களின் மனம் ஆணைவிட குழப்பமில்லாமல் இருக்கும், ஏனெனில் அவர்கள் அதை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

35க் கு பிறகு பெண்களை பற்றி அதிகம் யோசிப்பாய், இந்த வயதிற்கு முன் உனக்கு உணர்வு இருக்கும்,

இப்படித்தான் என்று முடிவு செய்வதே எல்லா குழப்பங்களுக்கும் காரணம்,

நீ எவ்வளவு சரியான விஷயங்களை ஒருநாளில் செய்தாலும், மற்றவர்கள் நீ செய்த ஒரு தவறையே நினைவில் வைத்திருப்பார்கள்,

நீ தேடாததை நீ எப்போதும் பார்க்கலாம்,

எல்லா நிறுவனங்களிலும் உண்மையாக நடப்பதைப் பார்ப்பவன் ஒருவன் இருப்பான், அவன் வெளியேற்றப் படுவான்,

இப்படி நடக்கும் என்று எப்போதும் சொல்லாதே, ஏனெனில் அது தவறானால் அதை மறக்கவே மாட்டார்கள், அது சரியானால் அதை ஒருவரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

இக்காலத்தில் இறப்பைத் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் ஒருவன் தப்பித்துக் கொள்ள முடியும்,

வாழ்வை மறுப்பதைத்தவிர வேறு தீங்கு கிடையாது,

வாழ்வுக்கு எதிரானவனின் கல்லறையில் இருக்கும் வாசகம் – “இப்படி ஒருநாள் நடக்கும் என்று எனக்குத் தெரியும்.”

The Invitation #30