வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

நண்பர்களே,

நமது ஓஷோ சாஸ்வதம் கம்யூனைச் சேர்ந்த சுவாமி ஆனந்த் நிரூப், 10.5.2014 அன்று காலை 5.45 மணிக்கு தனது உடலை வெகு யதார்த்தமாக ஓஷோ கூறும் விதத்தில் விட்டுச் சென்றார்.

அன்று மிக அருமையான இறப்புக் கொண்டாட்டத்துடன் அவர் வழியனுப்பப்பட்டார். ஆனாலும் அவரது சுதந்திர இருப்பை அனைவரும் உணர வாய்ப்பளிக்கும் விதமாக வரும் 25.5.2014 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அவரது கடந்த நிலையை கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அனைவரும் வந்துணர்க, இது அறிய வாய்ப்பு, கடந்த நிலை அனுபவத்தை தொட்டுப் பார்க்க.

அன்பு, சித்.

ஓஷோ சாஸ்வதம் இம்மாத நிகழ்வுகள்

1. தியானப்பட்டறை

ஓஷோ சாஸ்வதத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை
5 மணி முதல் ஞாயிறு மாலை 5 மணிவரை தியானப்பட்டறை நடைபெறுகிறது.

கலந்துகொள்ள அன்பர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

முன்பதிவு அவசியம். கட்டணம் ரூ.750/- (உணவு உறைவிடம் உட்பட) .

கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம் – சேமிப்புக்கணக்கு, ஆர். ஆனந்தராகுல்,  பாரத ஸ்டேட் வங்கி,  ஊத்துக்குளி ரோடு, திருப்பூர் -எண்- 30883166172. IFSC No.: SBIN0000935. 

விவரங்களுக்கும், முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ளவும் 9789482630 / 9894982630

2.  அகநலப்பட்டறை

“ மனம் கடந்திருக்கும் சுவை “  எனும் தியான அகநலப் பட்டறை வரும் மே மாதம் 4 ம் தேதி முதல் 10 ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது.

3 ம் தேதி மாலையே வந்துவிட வேண்டும்.

உணவு உறைவிடம் உட்பட கட்டணம் ரூ.3500/-

ஏற்கனவே தியானப் பட்டறையில் கலந்து கொண்டவர்களே இதில் பங்குபெறலாம்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் – 9789482630, 9894982630

 

புத்தக வெளியீடு

நமது தலையங்கங்களின் தொகுப்பு – 48 தலையங்கங்கள் – ஏன் இந்தப் புத்தகத்தைப் படிக்க
வேண்டும் (ஓஷோ எனும் புதிய மனிதனைப் பற்றி) – என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. பெற விரும்புவோர் ரூ.230 மணியார்டர் செய்யவும். கொரியரில் அனுப்பிவைக்கிறோம்.