வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

ஒரு மனிதன் பாரில் நின்று கொண்டிருந்தான்.

அவனை நோக்கி வந்த மற்றொருவன் அவனைப் பார்த்து, “நீதான் ஜோ ஸ்மித்தா?” என்று கேட்டான்.

அதற்கு இவன், “ஆமாம்” என்று பதில் சொன்னான்.

அவன், “நீ சில வாரங்களுக்கு முன் சிகாகோவில் இருந்தாயா?” என்று கேட்டான்.

ஜோ, “ஒரு நிமிடம்” என்று கூறிவிட்டு தனது நோட்புக்கைப்
பார்த்துவிட்டு, “ஆமாம்” என்றான்.

அவன், “நீ அங்கே 213 நம்பர் ரூமில் இருந்தாயா?” என்று கேட்டான்.

அதற்கு ஜோ தனது நோட்டைப் பார்த்துவிட்டு, “ஆம்” என்றான்.

அவன், “அங்கே 214ல் இருந்த திருமதி.வெண்ட்வெர்த்தை சந்தித்தாயா?” என்று கேட்டான்.

ஜோ தனது நோட்டைப் பார்த்துவிட்டு, “ஆம்” என்றான்.

அவன், உண்மையாக பதில்
சொல், “நீ திருமதி.வெண்ட்வெர்த்துடன் உடலுறவு கொண்டாயா?” என்று கேட்டான்.

ஜோ தனது நோட்டைப் பார்த்துவிட்டு, “ஆம்” என்று பதில் சொன்னான்.

அவன், நான்தான்
வெண்ட்வெர்த், அவளது கணவன். “அது எனக்கு பிடிக்கவில்லை” என்றான்.

திரும்பவும் ஜோ தனது நோட்டைப் பார்த்துவிட்டு, “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? எனக்கும் அது பிடிக்கவில்லை” என்றான்.

இப்படித்தான் நீங்கள் எல்லாவற்றையும் கேட்கிறீர்கள்.

அவன் முழுமையாக ஒத்துக் கொள்கிறான், ஆனால் அவன் எதை கேட்க நினைக்கிறானோ அதை
மட்டுமே கேட்கிறான். அவன் எதை புரிந்துகொள்ள விரும்புகிறானோ அதை மட்டுமே
புரிந்துகொள்கிறான்.