வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

சிறுவன் எர்னி தனது தந்தையுடன் பார்க்கில் உலாவ சென்றிருந்தான். அப்போது ஒரு
பூச்சி பறந்துவந்து அவர்கள் முன்னால் இருந்த பாறையில் அமர்ந்தது. உடனே எர்னி ஒரு
குச்சியை எடுத்து அந்த பூச்சியை அடித்து கொன்று விட்டான். இதைப் பார்த்த அவன்
தந்தை இது மிகவும் குரூரமானது எர்னி ஏன் அந்த பூச்சியை அனாவசியமாக கொன்றாய்.
இதனால் இன்னும் ஒரு வருடத்திற்கு உனக்கு தேன் கிடையாது என்றார்.

பின் சிறிது தூரத்தில் வேண்டுமென்றே எர்னி ஒரு பட்டாம்பூச்சியை காலால் அழுத்தி
கொன்றான். அவன் தந்தை கோபத்துடன் உனக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு வெண்ணை கிடையாது என்றார்.

அவர்கள் வீடு திரும்பிய பின் அவன் தாய் டின்னர் தயார் செய்தாள். அவர்கள்
டின்னர் சாப்பிட உள்ளே நுழைந்தவுடன் அங்கே ஒரு கரப்பான்பூச்சியை பார்த்த அவன் தாய்
அதை அடித்துக் கொன்றாள். எர்னி தன் தந்தையை மிகவும் குறும்புடன் பார்த்தவாறே,
நீங்கள் சொல்கிறீர்களா அல்லது நான் சொல்லட்டுமா என்று கேட்டான்.