வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

1.

ஏழு வயது பையன் ஒருவன் ஸ்கூல் போக துவங்கினான். அவனது தாய் அவனிடம்,
மென்மையாக, மகனே, முகத்தில் எப்போதும் புன்னகையோடு இரு. சந்தோஷமாக இரு என்று
சொல்லி அனுப்பினாள்.

ஆனால் மாலையில் அவன் திரும்பி வந்தபோது அவனது முகம் மிகவும் வருத்தமாக
இருந்தது. அவனது தாய், என்னவாயிற்று மகனே என்று கேட்டாள். நீ சிரித்த முகத்தோடு
இருந்திருப்பாய். ஸ்கூலில் மகிழ்ச்சியாக இருந்திருப்பாய் என்று நான் நினைத்தேனே
என்று கேட்டாள்.

அப்படி இருப்பது சரிப்பட்டு வரவில்லை அம்மா என்றான் அவன். நான்
சிரித்தமுகத்தோடு இருக்க முயற்சி செய்ததை பார்த்துவிட்டு நான் எதற்கோ அடி
போடுகிறேன் என்று எனது டீச்சர் தவறாக நினைத்துக் கொண்டு என்னை முறைத்துப்
பார்க்கிறார்கள். என்றான்.

நீ மகிழ்வாக இருப்பதை யாரும் விரும்பவில்லை. நீ மகிழ்ச்சியாக இருந்தால்
எல்லோரும் சந்தேகப்படுகிறார்கள். நீ ஏன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாய். இதன்
பின் ஏதோ காரணம் இருக்கிறது என்ற சந்தேகம் கொள்கிறார்கள். நீ வருத்தத்தோடு
இருந்தால் சரி. நீயும் இந்த கூட்டத்தின் ஒரு பாகமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறாய்.

2.

ஒரு பெண் காரோட்டிக் கொண்டு வந்தபோது சிவப்பு விளக்கை எரிவதை கவனிக்காமல்
வந்ததால் மற்றொரு காரின் மீது மோதி விட்டாள். அவள் மிகவும் கோபத்துடன் தன்னுடைய
காரிலிருந்து இறங்கி வந்து அந்த காரின் டிரைவரை கன்னத்தில் அறைந்தாள். நீ எங்கே
போய்க் கொண்டிருக்கிறாய் என்பதை நீ கவனிக்க மாட்டாயா கவனமாக காரோட்ட மாட்டாயா
இன்று காலையிலிருந்து நான் மோதும் மூன்றாவது கார் இது என்றாள்.

இப்படித்தான் இருக்கிறாய் நீ                                                                                                    -ஓஷோ