வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

ஓஷோ சாஸ்வதம் நிகழ்வுகள்

புதிய செய்தி– வரும் அக்டோபர் மாதம் 4,5 தேதிகளில் 2 நாள் தியானப்பட்டறை நடைபெறும். 3ம் தேதி மாலையே வந்துவிட வேண்டும். கட்டணம் ரூ.1250.

கலந்துகொள்ள அன்பர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

முன்பதிவு அவசியம். கட்டணம் ரூ.1250/- (உணவு உறைவிடம் உட்பட)

கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம் – நடப்புக்கணக்கு, ஓஷோ சாஸ்வதம்,  யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கணக்கு எண் – 722701010050011.
IFSC No. UBIN0572276(UBINக்கு பிறகு பூஜ்யம், ஓ அல்ல)

1. ஆகஸ்ட்டில் நிகழ்ந்தவை

டைனமிக் தியானப்பட்டறை / நிரூப் தியானகம் திறப்பு

டைனமிக் தியானப் பட்டறை 15.8.2014 முதல் 17.8.2014 வரை மிக அற்புதமாக
நிகழ்ந்தது. குறிப்பாக இதில் கலந்து கொண்ட 20 அன்பர்களுமே முழுதாக முழ்கி ஓஷோ
கூறும் “உணர்வோடு பயித்தியமாகிப் பார்” என்ற நிலை வரை சென்றது
மிகப் பெரிய சக்தி மண்டலத்தை உருவாக்கியது. இதைவிட நாம் ஓஷோவிற்கு செய்யக் கூடியது
எதுவும் இல்லை. அவரை மீண்டும் மீண்டும் பிறக்கச் செய்வதாகும் இது. இதற்காக நாம்
ஓருவருக்கொருவர் நன்றிவுணர்வு கொள்வோமாக.

நிரூப் தியானகம் 17.8.2014 காலை 10 மணிக்கு எளிய, இனிய, ஆழமான
உணர்வுடன் திறக்கப் பட்டது. சோகத்தில் எல்லோரும் நிறைந்திருந்த கணத்தில், ஒரு
ஆழமான வெளி மூச்சில் அந்த சோகம் முழுவதையும் தள்ளிவிட்டு, சந்தோஷத்தை உள் மூச்சில்
இழுத்தபோது, நாம் சந்தோஷத்தாலும் நிறைவதை உணர முடிந்தது.

2. செப். நிகழ்வுகள்

தியானப்பட்டறை

ஓஷோ சாஸ்வதம்
ஆன்மீகப் பள்ளியில் வரும் செப்.6,7 தேதிகளில் இரண்டுநாள் அறிமுக தியானப்பட்டறை நடைபெறுகிறது. 5 ம் தேதி மாலையே வரவும்.

கலந்துகொள்ள அன்பர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

முன்பதிவு அவசியம். கட்டணம் ரூ.1250/- (உணவு உறைவிடம் உட்பட)

கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம் – நடப்புக்கணக்கு, ஓஷோ சாஸ்வதம்,  யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கணக்கு எண் – 722701010050011.
IFSC No. UBIN0572276(UBINக்கு பிறகு பூஜ்யம், ஓ அல்ல)

விவரங்களுக்கும், முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ளவும் :  9789482630 / 9894982630

ஏற்கனவே அறிமுக தியானப்பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு, அதன்பின் கட்டணம் ரூ.350/-(நாள் ஒன்றுக்கு) என்பது பலருக்குத் தெரியாமல்
இருப்பதால் தெரிவிக்கப் படுகிறது.

3. புத்தக வெளியீடு

நமது தலையங்கங்களின் தொகுப்பு – 48 தலையங்கங்கள் – ஏன் இந்தப்
புத்தகத்தைப் படிக்க வேண்டும் (ஓஷோ எனும் புதிய
மனிதனைப் பற்றி) – என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. பெற விரும்புவோர் ரூ.230 மணியார்டர் செய்யவும். கொரியரில் அனுப்பிவைக்கிறோம்.