வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

தளர்வு மற்றும் விடுவிப்பதன் மூலமாக பதட்டத்தை வெளியே விடுவது 

கழன்று விழட்டும்

ஒவ்வொரு இரவும் நாற்காலியில்
அமருங்கள் உங்கள் தலைலேசாக, ஓய்வாக பின்னால் சாயட்டும். ஓய்வெடுக்கிற பாணியில் ஒரு தலையணையை பயன்படுத்துங்கள்,
கழுத்தில் எந்த இறுக்கமும் இருக்க கூடாது.  பிறகு உங்கள்
தாடையை தளர்த்துங்கள் – அதனால் உங்கள் வாய் மெதுவாக திறக்கட்டும்
– பிறகு வாய் வழியாக மூச்சுவிடுங்கள்.
மூக்கின் வழியாக அல்ல. ஆனால் மூச்சுவிடுவது மாறக்கூடாது., அது சாதாரணமாக இயல்பானதாக இருக்கட்டும். முதல் சில மூச்சுகள்
கடினமாக இருக்கும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மூச்சுவிடுதல்
சுலபமாகும். அது ஆழமற்றதாக மாறும். உள்ளேயும்
வெளியேயும் மெதுவாகப்போகும்; அப்படித்தான் அது இருக்க வேண்டும். வாயை திறந்து வையுங்கள், கண்கள் மூடட்டடும், ஓய்வெடுங்கள்.

பிறகு உங்கள் கால்கள் தளர்வதைபோல
உணருங்கள், உங்களிடமிருந்து
அதை எடுத்துக்கொண்டு போவதைப்போல, மூட்டுகளின் பிணைப்பு லேசாவதைப்போல. அதை உங்களிடமிருந்து பிரித்து எடுப்பதைப்போல,
அது உங்களிடமிருந்து எடுக்கப்படுவதைப்போல உணருங்கள்.
பிறகு நீங்கள் உங்கள் உடலின் மேல்பகுதி மட்டும்தான் என்பது
போல பற்றி யோசியுங்கள். கால்கள் போய்விட்டது.

பிறகு உங்கள் கைகள்;
இரண்டு கைகளும் லேசானதாக உங்களிடமிருந்து எடுத்துக்கொண்டு போவதைப்போல
நினையுங்கள்.  உங்களுக்கு க்ளிக் என்று ஒரு சத்தம் கூட கேட்கலாம்.
உள்ளே பிரியும்போது கேட்பதைப்போல. இனி உங்களுக்கு கைகள்
இல்லை, அவை இனி இல்லாமல் போய்விட்டன. எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

பிறகு உங்கள் தலையைப் பற்றி யோசியுங்கள். அதுவும்
உங்களிடமிருந்து எடுத்து போகப்படுகிறது. உங்கள் தலையை கொய்தாகி விட்டது, பிறகு அதை லேசாக்குங்கள்; அது எங்கு திரும்பினாலும் – வலது அல்லது இடது – உங்களால் எதுவுமே செய்ய முடியாது. அதை அப்படி லேசாக்குங்கள், அதை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

இப்போது உங்கள் முண்டம் மட்டும்தான் இருக்கிறது .மார்பு,
வயிறு இவை மட்டுமே – அவ்வளவுதான். உங்களிடம் இவ்வளவுதான் இருப்பதாக நினையுங்கள்.

இதை ஒரு இருபது நிமிடங்களுக்கு செய்யுங்கள், பிறகு தூங்கச்
செல்லுங்கள். இது நீங்கள் தூங்கப் போவதற்கு முன்பு செய்யவேண்டும். இதை குறைந்தது மூன்று வாரங்களுக்காவது செய்யுங்கள்.

மனஉளைச்சல் அடங்கும். இந்த பகுதிகளை தனியாக
பிரித்தவுடன் அவசியமானவை மட்டுமே இருக்கும். உங்கள் முழுபலமும் அந்த அவசியமான பாகத்திற்கு செல்லும்.  அவசியமான பாகம் ஓய்வெடுக்கும்.
சக்தி மறுபடியும் உங்கள் கால்கள், கைகள், பிறகு உங்கள் தலைக்கு என பாயும். இந்த தடவை ஒரேசீரான வகையில் பாயும்.