வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

வேலை என்பது ஓய்வு – ஓய்வு என்பது வேலை

இது எவ்வாறு என்பதை குல் பூஷன் நம்மோடு பகிர்ந்து கொல்கிறார்

வேலை என்பது ஓய்வு – ஓய்வு என்பது வேலை. எப்படி இது?

வேலையும், ஓய்வும் ஒன்றக்கொன்று எதிரானவை, ஆகவே
அவை இரண்டும் ஒன்றுதான் என்பது சரியானதல்ல. ஆனால் அவை அப்படித்தான்! உதாரணமாக ஓய்வு இடத் தொழில், உலகின் மிகப் பெரிய
தொழிலாகவும், பல லட்சம் நபர்களுக்கு வேலை கொடுப்பதாகவும் இருப்பதை நினைத்துப் பாருங்கள். ஓய்வுக்காக மக்கள் விடுமுறைப் பயணம் மேற்கொள்வது, இன்று உலகின் மிகப்பெரிய சேவைத் தொழிலாக வளர்ந்துள்ளது.

இப்போது வேறு விதமாகப் பாருங்கள். வேலையை
சீரியஸ் இல்லாமல் செய்யும்போது, அது ஓய்வைப் போலவே ஆகிவிடுகிறது. ஓய்வு என்பது தளர்வாக வாழ்வதுதான். நீங்கள் ஓய்வாக இருக்கும்போதும், நீங்கள் ஏதாவது செய்து கொண்டிருக்கிறீர்கள் – தூங்குவது, படிப்பது, கேட்பது இப்படி.

மேலும் சிலர் வேலையோடு மிகவும் தொடர்பு கொண்டவர்களாக
இருப்பார்கள், இவர்கள் வேலை இல்லாவிட்டால் மிகவும் தவிப்பு கொண்டவர்களாக,
ஓய்விழந்தவர்களாக ஆகிவிடுவர். இங்கு வேலை இல்லாதது ஓய்வில்லாததாகி விடுகிறது.

சும்மா உட்கார்ந்திருந்தால் பதட்டம் அடைந்துவிடும் சிலரையாவது உங்களுக்குத்
தெரிந்திருக்கும். இந்த வேலைக்கும் ஓய்வுக்கும் ஆன மாற்றத்தை ஒட்டி “ஜார்ஜ் ஆர்வெல்” 1984-ல் எழுதிய தனது நாவலில் பல கோஷங்களை
கொடுத்திருந்தார். இவற்றில் சில, போர்தான் அமைதி, சுதந்திரம்தான்
அடிமைத்தனம்
, அறியாமையே வலிமை இப்படி, இவற்றில் மிகவும்

அதிர்ச்சியூட்டக் கூடியது, அரசாங்கத்தைப் புகழ்ந்து பொய்ச் செய்திகளையே தரும்
அரசின் தகவல் தொடர்புத் துறையை, உண்மைக்கான துறை என்று கூறியிருந்ததுதான்!

நாம் எல்லோரும் அதிகம் வேலை செய்வதாக புகார்
கூறுகிறோம். ஆனால் நாகரீக மனிதன் அதிக வேலை செய்வதாக நினைப்பது தவறு. இவனது வேலைச் சுமை குறைவு. ஆதிகால மனிதனின் சுமையே அதிகம். ஓஷோ கூறுகிறார் :

” எந்தக் காலத்தை விடவும் உனக்கு அதிகம் நேரமிருக்கிறது. மேலும் நீ வேலையால் களைப்படைந்து சோர்ந்து போவதில்லை. நீ சோர்வாயிருப்பதன் காரணம், நீ உன் உள் தொடர்பை இழந்து விட்டதுதான். மேலும் உனக்குள் எப்படி ஆழ்ந்து சென்று புதிய சக்தியைப் பெறுவது என்பதை நீ அறியாமல் இருக்கிறாய். ”                                                     Source: The Ultimate Alchemy Vol.2, Ch 8, Q 2

ஆகவே உள் தொடர்பே ஓய்வைக் கொண்டுவரும். மேலும்
இந்த விதத்தில் நமக்கு ஓய்வென்பதே தெரியாது. பரபரப்பான விடுமுறை ஓய்வுக்குப் பிறகு வழக்கமாக நாம் சொல்வது, ”நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன்! இந்தக் களைப்பிலிருந்து விடுபட எனக்கு மற்றொரு விடுமுறை வேண்டும்.” என்பதுதான்.

விடுமுறை நாளிலும் நாம் ஏதாவது வேலை செய்யத்தான்
வேண்டியுள்ளது. நேசத்தில் திளைக்கும் மனிதனே ஓய்வோடிருக்க முடியும். இந்த ஓய்வில் ஒரு நிறைவு இருக்கிறது. ஆனால் பணத்தின் பின்னால் ஓடும் மனிதனுக்கு ஓய்வென்பது கிடைக்கவே கிடைக்காது. ஏனெனில் அதற்கு முடிவே கிடையாது.

ஆகவே வேலைக்கும், ஓய்வுக்கும் என்னதான் முடிவு? இரண்டும் பல சூழ்நிலைகளில் தங்களுக்குள் மாற்றம் கொள்பவைதான். ஆனால் உண்மையான ஓய்வு என்பது நீ எதுவும் செய்யாமல் இருக்கும் போது மட்டுமே சாத்தியம். ஆனால் இதுதான் மிகவும் கடினமான செயல் – முடியவே முடியாதது – இது முடிய வேண்டும் என்றால் உனக்கு தியானம் நிகழ்ந்திருக்க வேண்டும்.