வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

1.

ஒரு ஆங்கிலேயன், ஒரு இத்தாலியன் ஒரு ஜெர்மானியன் ஆகியோர் பிரேசில்
காட்டிற்க்குள் சென்ற இடத்தில் நரமாமிசம் சாப்பிடும் கும்பலிடம் மாட்டிக்
கொண்டார்கள். அவர்களை மூங்கில் கழியில் கட்டி அந்த கிராமத்தின் சமையல்காரனிடம்
கொண்டு சென்றனர்.

அவன் இவர்களில் உடலில் குத்தி பார்த்துவிட்டு, நாம் இவர்கள் அனைவரையும் ஒருசேர
சமைத்து சாப்பிட முடியாதென்று நினைக்கிறேன். ஆனால் என்று கூறிய அவன் இத்தாலியனை
சுட்டிக்காட்டி, இவனை நாம் இன்றிரவு இரவு சாப்பாட்டிற்க்கு வைத்துக் கொள்ளலாம்.
இவனது உடலில் உடனடியாக பொரித்து சாப்பிடும் அளவு ஈரப்பதம் உள்ளது. என்றான்.

ஆங்கிலேயனை சுட்டிக்காட்டி, இவனை கொதிக்க வைத்து நாம் உடல்நிலை
சரியில்லாதவர்களுக்கு கொடுக்கலாம். இவனது உடலில் உப்பும் இல்லை, எந்த சுவையும்
இல்லை. அவன் டோபூ – சோயா பன்னீர் – போல இருக்கிறான். என்றான்.

அடுத்து இவன் என்று ஜெர்மானியனை சுட்டிக்காட்டிய சமையல்காரன், இவனை நாம் ஒரு
வாரம் தண்ணீரில் ஊறப் போட வேண்டும். அப்போதுதான் இவனது கடினத்தன்மை குறைந்து
ஜீரணமாகும் அளவு பதமாவான் என்றான்.

நமது சமூக முகம் நம்மில் மிக ஆழமாக ஊடுருவி விட்டது. நமது உண்மை இயல்பை நாம் முற்றிலும் இழந்து விட்டோம்.

 

2.

சிட்னி சிலிகன் ஒருநாள் அதிகாலையில் உலாவ சென்றான். அவன் உலாவ சென்ற இடத்தில்
மலைமுகடு இருந்தது. அவன் பனியில் தனது வழியை தவற விட்டுவிட்டான்.  எனவே வழியை தேடிக் கொண்டே சென்றதில் மலைமுகடின் ஓரமாக வந்து அதிலிருந்து கால் வழுக்கி விழுந்துவிட்டான். அவன் அப்போது அங்கே இருந்த ஒரு சிறிய செடியின் வேரை பிடித்துக் கொண்டு தொங்கினான்.

உதவி, உதவி, அங்கே யாராவது இருக்கிறீர்களா என்று கேட்டான்.

மிக நீண்ட அமைதிக்குப் பின் மேலிருந்து ஒரு குரல் வந்தது. மகனே, நான் தான்
கடவுள் பேசுகிறேன். அந்த கிளையை விட்டுவிடு. தேவதைகள் உன்னை என்னிடம் கொண்டு வந்து
சேர்ப்பார்கள். நான் உனக்கு சொர்க்கத்தில் இடம் தருகிறேன். என்றது.

சில கணங்கள் கழித்து திரும்பவும் சிட்னி, மேலே யாராவது இருக்கிறீர்களா என்று
குரல் கொடுத்தான்.

மகனே, நான்தான் சொல்கிறேனே, நான்தான் கடவுள். உனக்கு நல்லதைதான் செய்வேன்.
என்னை நம்பு. என்றது.

அதற்கு சிட்னி, எனக்குத் தெரியும் நீ இருக்கிறாய் என்று., உன்னைத்
தவிர என்னை கை தூக்கிவிட வேறு யாராவது இருக்கிறார்களா என்றுதான் கேட்டான். என்றான்.

நீ எந்தப் புதிய வாழ்க்கைக்கும் தயாராக இல்லை. துன்பமும், சோர்வும், சலிப்பும் கொடுப்பதாக இருந்தாலும் உனக்கு பழைய வாழ்க்கை, பழகிய வாழ்க்கைதான் வேண்டும் என்கிறாய். நீ உற்சாகமும், சுதந்திரமும், படைப்பாற்றலும் கொண்டவனாகும் போதுதான் புதிய வாழ்க்கைக்கான தாகம் உன்னிடம் எழும்.