வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

ஏழு பள்ளத்தாக்குகள் – தொடர்ச்சி…. 4 வது பள்ளத்தாக்கு ஜூலையில்
வெளியிடப்பட்டது. 3 மாதங்களுக்குப் பிறகு இப்போது 5 வது வெளிவருகிறது. 6 மற்றும் 7
வது பள்ளத்தாக்குகள் தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் வெளிவரும்.

ஐந்தாவது பள்ளத்தாக்கு-இடி முழங்கும் பள்ளத்தாக்கு.

ஐந்தாவது பள்ளத்தாக்கில் நீ இறப்பினுள் நுழைகிறாய்.
நான்காவது பள்ளத்தாக்கில் நீ தூக்கத்தில், இருளில் நுழைகிறாய். ஐந்தாவது
பள்ளத்தாக்கில் நீ இறப்பினுள் நுழைகிறாய். அல்லது நீ இதற்கு இப்போதைய வார்த்தைகளை
உபயோகிக்கலாம். நான்காவதில் நீ தனிப்பட்ட தன்னுணர்வற்ற மனதினுள் நுழைகிறாய்.
ஐந்தாவதில் நீ சேர்த்து வைக்கப்பட்டுள்ள தன்னுணர்வற்ற மனதிற்க்குள் நுழைகிறாய்.

நீ உனது தனித்தன்மையை இழப்பதால் மிகப்பெரிய பயம்
எழுகிறது. நான்காவதில் நீ வெளிச்சத்தை, பகலை இழக்கிறாய். ஆனால் நீ இருக்கிறாய்.
ஐந்தாவதில் நீ உன்னையே இழக்கிறாய் – நீ இருப்பதுபோல நீ உணர்வதில்லை, நீ
மறைந்துபோகிறாய், நீ கரைந்துபோகிறாய். நான் ஒரு மையம் என்ற உனது உணர்வு மெலிதாகி
மேகம் மறைவது போல மறைய தொடங்குகிறது. இறப்பினுள் நுழைவதால், சேகரிக்கபட்ட
தன்னுணர்வற்ற மனதினுள் நுழைவதால், மிகப்பெரிய பயம் எழுகிறது, வேதனையை உணருகிறாய் –
இதுவரை உணர்ந்திராத அளவு கடந்த வேதனை – ஏனெனில் இருக்கிறோமா இல்லையா என்ற கேள்வி
வருகிறது.

நீ மறைந்துவிடுகிறாய். உனது முழு இருப்பும்
உஞ்சலாடுகிறது. நீ நான்காவதிற்குள் திரும்பி போக விரும்புகிறாய். அது இருட்டுதான்,
ஆனால் குறைந்தபட்சம் அதில் நீ இருக்கிறாய். எனவே அந்த அளவில் அது நல்லது. இப்போது
அந்த இருட்டு மேலும் அடர்த்தியானதாகிறது. அது மட்டுமல்ல நீ அதற்குள்
மறைந்துவிடுகிறாய், கூடிய விரைவில் உன்னைப் பற்றிய தடயம் எதுவும் இருக்கப்
போவதில்லை. தன்னைப் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது எதிர்மறையான விஷயம்.
அதனால்தான் புத்தர், ஜலாலுதீன் ரூமி போன்ற ஞானிகள் தொடர்ந்து நினைவில் கொள், நீ
என்று எதுவும் இல்லை, எல்லாமே போய்விடும் என்பதை வலியுறுத்தி வந்தனர். சூபிகள் இதை
பனர் என்றழைத்தனர் – ஒருவர் மறைந்துவிடுவது.

மேலும் ஒருவர் இதுபோல மறைந்து போவதற்கு தயார் செய்துகொள்ளவேண்டும்,
இதற்கு தயாராக இருக்க வேண்டும். தயாராக இருப்பது மட்டுமல்ல, மிக ஆழமான வரவேற்புடன்
இருக்க வேண்டும். இது மிகப்பெரிய மகிழ்ச்சியை கொண்டுவரும், ஏனெனில் உன்னுடைய
அத்தனை துயரங்களும் உன்னுடைய ஆணவத்தினுடையவை.

நான் என்ற எண்ணமே உனது அறியாமையாகும். நான் என்ற இந்த
எண்ணமே எல்லாவித துன்பங்களையும் பிரச்சனைகளையும் கொண்டு வருகிறது. ஆணவமே நரகம்.
ஜான் பால் சாத்ரே மற்றவர் தான் நரகம் என்று கூறியிருக்கிறார். அது சரியல்ல. நரகம்
நீதான், ஆணவம்தான் நரகம். அடுத்தவர்கள் நரகத்தை உணர்ந்தால் அது அவர்களது ஆணவத்தால்
அவர்கள் நரகத்தை உணர்கின்றனர் ஏனெனில் அவர்கள் தொடர்ந்து அதை
துன்புறுத்துகின்றனர். அவர்கள் உனது ஆணவத்தை சீண்டிக்கொண்டே இருக்கின்றனர். மேலும்
இந்த ஆணவத்தில் ஏற்படும் காயம் ஒவ்வொருவரும் உன்னை காயப்படுத்துவதால் ஏற்படுகிறது.

நான் முக்கியமானவன் சிறப்பானவன் என்ற உனது கருத்தை
மற்றவர் ஏற்றுக் கொள்ளாத போது அது உனக்கு வலியை தருகிறது. உனக்கு சிறப்பானவனாக
இருக்கும் எண்ணம் இல்லாத போது – ஜென் மக்கள் சாதாரணமானவனாக இருத்தல் என்று கூறும் –
சாதாரணமானவனாக இருக்கும்போது, இந்த பள்ளத்தாக்கை கடந்து விடமுடியும். நீ
யாருமற்றவனாக இருந்தால் அப்போது இந்த பள்ளத்தாக்கை எளிதில் கடந்துவிடலாம். அதனால்
எதிர்மறையான விஷயம் தன்னை பிடித்து வைத்துக்கொள்வது, நேர்மறையான விஷயம்
தானற்றதில், ஏதுமற்றதில் தளர்வு கொள்வது – இறப்பை சந்திக்க விருப்பத்துடன்,
சந்தோஷமாக, தானே செல்ல தயாராக இருப்பது.