வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

ஒரு நாள் ஒரு பள்ளிக்கு ஒரு புகழ் பெற்ற எழுத்தாளன் ஒருவர் வந்தார். அவர்
ஆங்கில வகுப்புக்கு வந்து எப்படி மிகவும் திறமையாக படைப்பாற்றலோடு எழுதுவது என்று
சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். எப்படி ஒரு நல்ல கதை சுருக்கமாக எழுதுவது
என்று விளக்கிய பின் அவர், ஒரு சுருக்கமான நல்ல கதை எழுத தேவையானவை நான்கு
விஷயங்கள். மதம், செக்ஸ், அரசியல், மர்மம் இவை நான்கும் சேர்ந்து இருந்தால் போதும்
என்றார்.

ஒன்றும் எந்த பிரச்னையும் இல்லை என்றான் பின்பக்க பெஞ்சில் இருந்த டோனி. அவன்
தனது கையில் இருந்த பேப்பரில் நான்கு வரிகள் கிறுக்கினான். இந்தாருங்கள் என்று
கொடுத்துவிட்டான்.

ஒரு சிறிய கதை

ஏசுபிரானே, என்று கதறிய நான்சி ரீகன், நான் திரும்பவும் கர்ப்பமாக
இருக்கிறேன். இதற்கு இந்த முறை யார் காரணம் என்று தெரியவில்லையே என்றாள்.

உலகம் இப்படித்தான் இருக்கிறது. சிறார்களுக்குக்கூட இது புரிகிறது, அவர்களுக்கு ஈகோ இன்னும் பிறக்காதலால். ஆனால் வளர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு புரிவதில்லை. ஈகோவே தடை என்பதை புரிந்து கொள்.

The Lion’s Roar  che 7  & 8