வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

தளர்வு மற்றும் விடுவிப்பதன் மூலமாக பதட்டத்தை வெளியே விடுவது

வயிற்றைதளர்த்துங்கள்

காலையில் கழிவறைக்கு போய்
உங்கள் குடலை சுத்தப்படுத்தி காலி செய்கிறீர்கள். அதற்கு பிறகு ஒரு உலர்ந்த டவலை எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் வயிற்றை துடையுங்கள். வயிற்றை உள்ளே இழுத்து, அழுத்தி துடையுங்கள்.

வலதுபக்க மூலையிலிருந்து துவங்கி
சுற்றிலும் மிகவும் அழுத்தமாகவே துடையுங்கள். வலதுபக்க மூலையில் ஆரம்பியுங்கள், பிறகு சுற்றிலும் அழுத்தமாக துடையுங்கள், தொப்புளைச்சுற்றி. ஆனால்,
தொப்புளைதொடாதீர்கள் – அப்போதுதான் அது நல்ல மஸாஜாக இருக்கும்.
வயிற்றுக்கு மேல்பகுதியை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளுங்கள்.
அதனால் உள்ளே இருக்கும் குடலுக்கு நல்லமஸாஜ் கிடைக்கும். மலக்குடலை நீங்கள் சுத்தம் செய்யப் போகும்போதெல்லாம்
– ஒருநாளைக்கு இரண்டு மூன்றுமுறை செய்யுங்கள்.

இரண்டாவது விஷயம்:
பகல்வேளைகளில், சூர்யோதயத்திற்கும், அஸ்தமனத்திற்கும் இடையே – ஒருபோதும் இரவில்அல்ல – உங்களால் முடிந்தவரையில் ஆழமாக சுவாசியுங்கள்,
எத்தனை முறை முடியுமோ அத்தனைமுறை. எவ்வளவு அதிகமாக சுவாசிக்கிறீர்களோ, அத்தனை நல்லது. ஆழமாக சுவாசிப்பது இன்னும் நல்லது.  ஆனால் ஒன்றை
நினைவில் கொள்ளுங்கள். அந்த சுவாசம் வயிற்றின் மேல்புறத்திலிருந்து இருக்கவேண்டும், மார்பிலிருந்து அல்ல,
அப்படி சுவாசத்தை உள்ளிழுக்கும்போது,
உங்கள் வயிறு மேலேபோகும் –மார்பு அல்ல. நீங்கள் சுவாசத்தை உள்ளிழுக்கும்போது,
வயிறு மேலே எழுகிறது – நீங்கள் சுவாசத்தை வெளியே விடும்போது,
வயிறு உள்ளேபோகிறது.  மார்போடு
வேலையில்லை என்பதால் அதை அப்படியே விட்டுவிடுங்கள். வயிற்றின் மேல்பகுதியிலிருந்து சுவாசியுங்கள்,
அதனால் நாள்முழுவதும் ஒரு மெல்லிய மஸாஜ் செய்துகொண்ட உணர்வு
ஏற்படும்.

ஒரு சிறுகுழந்தை சுவாசிப்பதை
கவனியுங்கள். .. அதுதான் சரியான, இயற்கையாக சுவாசிக்கும் வழிமுறை.  அதன் மேல்பகுதிவயிறு
மேலும், கீழும் போகும்,
சுவாசக்காற்றின் வழி மார்பை பாதிக்காது.
குழந்தையின் முழுகவனமும் தொப்புளிலேயே இருக்கும்.

பொதுவாக நமக்கு தொப்புளின்
தொடர்பு இல்லாமல் போகிறது. நாம் தலையிலேயே கவனமாகி, நமதுசுவாசம் மேலோட்டமாக, ஆழமற்றுப் போகிறது.  பகலில் உங்களுக்கு
நினைவுவரும் போதெல்லாம், முடிந்தவரையில் ஆழமாக சுவாசியுங்கள்.
– ஆனால் வயிற்றின் மேல்பகுதி பயன்படட்டும்.

எல்லோருமே தூக்கத்தில் சரியாக
சுவாசிக்கிறார்கள், காரணம் அப்போது மனத்தின் தலையீடு இருக்காது. மேல்பகுதிவயிறு மேலும், கீழமாகபோய், சுவாசம் தன்னாலேயே ஆழமாகிறது; நீங்கள் வலிந்து ஆழமாக சுவாசிக்க வேண்டியதில்லை.
இயல்பாக இருங்கள், அது ஆழமாகும். ஆழமாக சுவாசிப்பது என்பது இயல்பின் விளைவு.