வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

தளர்வு மற்றும் விடுவிப்பதன் மூலமாக பதட்டத்தை வெளியே விடுவது

மரத்தைப்போலஆடுங்கள்

முடிந்தால் வெளியே செல்லுங்கள்,  மரங்களுக்கு
நடுவே நில்லுங்கள், நீங்களே ஒரு மரமாகுங்கள், காற்று உங்கள் வழியாக போகட்டும்.

ஒரு மரத்தோடு உங்களை அடையாளப்
படுத்திக்கொள்வது ஆழமான வலிமையும், போஷாக்கும் கொண்டது.  இதன்மூலம் ஒருவர் ஆழ்மன உணர்வுகளுக்குள் எளிதாக நுழைகிறார், மரங்கள் அங்கேயே இருக்கிறது. மரங்களோடு பேசி அதை அணைத்துக் கொள்ளுங்கள்,

உங்களால் வெளியே போகமுடியா விட்டால், அறையின் மையத்தில் நில்லுங்கள்,
உங்களை ஒருமரமாகவே நினைத்துக் கொள்ளுங்கள்
– மழையும், பலத்த காற்றுமாக இருக்கிறது. அவைகள் நடனமாடுகிறது.
நீங்கள் மரத்தைப்போல ஆடுங்கள். உங்களுக்கு அந்த சக்திஓட்டம் தன்னால்
வரும்.

சக்தியை சீராக ஓடவைக்கும் கலையை கற்பது எப்படி என்ற கேள்விதான் இது. இதுதான் உங்களுக்கான திறவுகோல்; அது பூட்டிக்கொள்ளும் போதெல்லாம் நீங்கள் திறக்கலாம்.