வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

அடிப்படைத்தேவை

 

தாய்……..

குழந்தையைக் கொஞ்சினாள்,

அது
குதூகலித்தது!

குழந்தையை அணைத்தாள்,

அது நிறைவாய் உணர்ந்தது!

குழந்தையைத் திட்டினாள்,

அது முறைத்தது!

குழந்தைக்கு மருந்து கொடுத்தாள்,

அது அடம் பிடித்தது!

குழந்தையை அடித்தாள்,

அது அழுதது!

அனைத்திலும்……..

சக்தி இருந்தது,

உயிர் இருந்தது,

துடிப்பு இருந்தது,!

தாய் ஒருநாள்………

அலட்சிய நாடகம் ஆடினாள்……..

வேலையாள் உணவு கொடுத்தான்,

உடை கொடுத்தான்,

ஆனால்……

குழந்தை வாடியது,!

சக்தி இழந்தது,

துடிப்பை மறந்தது!!

ஏன்

அன்பு…..அன்பு……அன்பு

ஆம், மனித ஆன்மாவின்

அடிப்படைத் தேவையது!!!