வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

முல்லா ஓட்டி வந்த கார் மற்றொரு காரின் மேல்
மோதி விபத்து நடந்து விட்டது.

அந்த காரை ஓட்டி வந்த பெண் தனது காரை விட்டிறங்கி
வந்து “ “ நான் கையை காட்டி விட்டு தானே காரை திருப்பினேன். நீங்கள்
ஏன் நிறுத்தாமல் அப்படியே வந்தீர்கள்?” என்று சத்தமிட்டாள்.

“ கையை காட்டிய பக்கமே காரை திருப்பிய உங்களது
அந்த செயல்தான் என்னை குழப்பி விட்டது. என்னை முட்டாளாக்கி விட்டது “

என்றான் முல்லா.

நீ சொல்வதைச் செய்வது கிடையாது. அதுவும் பெண்கள் வேண்டாம் என்றால் வேண்டும். இதுவே உன் வாழ்க்கையை மனம் ஆளும் விதமாக இருக்கிறது. போலித்தனம் உன்னுள் நிறைந்து கிடக்கிறது.