வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

தளர்வு மற்றும் விடுவிப்பதன்
மூலமாக பதட்டத்தை வெளியே விடுவது
 

முதலில் இறுக்கம், பிறகு தளர்வாக தூங்குதல்

ஒவ்வொரு இரவும் நீங்கள் படுக்கப் போகுமுன், அறையின்
மையத்தில் நில்லுங்கள் – சரியான மையத்தில் –  கூடுமான
வரையில் இறுக்கமாக, ஏதோ நீங்கள் வெடித்துவிடுவதைப் போல, உங்கள் உடலை விரைப்பாக்குங்கள். இதை இரண்டு நிமிடங்கள் செய்யுங்கள், பிறகு இரண்டு நிமிடங்கள் தளர்வாக நில்லுங்கள்.  இந்த இறுக்கத்தையும், தளர்தலையும் இரண்டு அல்லது மூன்று நிமிடத்திற்கு செய்யுங்கள், பிறகு தூங்கச் செல்லுங்கள்.

ஆகவே முழுஉடலையும் கூடுமானவரையில்
இறுக்கமடைய செய்யுங்கள். பிறகு, வேறு எதுவும் செய்யாதீர்கள்,. அந்த இரவு முழுவதும், அந்த தளர்வு என்பது உங்களுக்குள் ஆழமாக போய்க்கொண்டேயிருக்கும்.

சத்தமற்ற மெளனம்.

நீங்கள் முழமையான கட்டுபாடற்ற நிலையிலிருக்கும் போதுதான், ஒருமெளனம் உங்களுக்குள் இறங்கும். அதனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
– உங்கள் கட்டுப்பாடு என்பது உங்கள் பலத்தை திசை திருப்புகிறது. 
மனம் ஒரு பெரிய சர்வாதிகாரி;
அது எல்லாவற்றையும் கட்டுபடுத்த முயற்சிக்கிறது. அதனால் கட்டுபடுத்த முடியாததை
அதுமறுக்கிறது. அப்படி ஒன்றில்லை என்கிறது.

தினமும் படுப்பதற்கு முன்
இந்த தியானத்தை செய்யுங்கள். படுக்கையில் உட்காருங்கள், விளக்கை அணையுங்கள் – நீங்கள் செய்ய வேண்டியது அனைத்தையும் முடித்துவிடுங்கள்,
காரணம் இந்த தியானத்திற்கு பிறகு உடனே நீங்கள் தூங்கப் போகவேண்டும்.  பிறகு எதையும்
செய்யாதீர்கள். அந்த `செய்பவர்; தியானத்திற்கு பிறகு அனுமதிக்கப்படக் கூடாது.
லேசாகி, தூக்கத்திற்கு செல்லுங்கள், காரணம் உடனே தூக்கம் வரும், உ ங்களால் கட்டுபடுத்த முடியாது.

தியானத்தின் ஒரு குணம் தூக்கத்திற்கும் உண்டு – அது மெளனம். அது தனாக
வரும்.  அதனால்தான் பலர் தூக்கமில்லாமல் தவிக்கிறார்கள். .அவர்கள் அந்த மெளனத்தையும் கட்டுபடுத்த நினைக்கிறார்கள்.
அதுதான் பிரச்னை. நீங்கள் அதற்கும் ஒன்றும் செய்யமுடியாது.
நீங்கள் காத்திருங்கள், வாங்கிக்கொள்ளும் மனநிலையோடு இறுக்கத்தை தளர்த்தி இருங்கள்.

அதனால் இந்த தியானத்திற்கு
பிறகு லேசாகி நீங்கள் தூங்கப் போகும்போது அங்கே ஒரு தொடர்ச்சி இருக்கும்.  அந்த தியானம் உங்களுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். அந்த இரவு முழுவதும் அதன் அதிர்வுகள் இருக்கும்.
காலையில் எழுந்து நீங்கள் கண்களை திறந்தால் நீங்கள் மிகவும்
வித்தியாசமான முறையில் தூங்கியதைப்போல உணர்வீர்கள். அங்கே தூக்கத்தின் தன்மையில் ஒரு மாறுதல் இருக்கும். அது தூக்கமில்லை. வேறு எதுவோ, தூக்கத்தைவிட ஆழமானது, அங்கே இருந்திருக்கிறது. உங்கள் மீது ஏதோ பொழிந்திருக்கிறது. அது என்ன என்று உங்களுக்கு தெரியாது, அதை உங்களால் தரம் பிரித்து பார்க்கமுடியாது.

இந்த தியானம் மிகவும் எளிமையானது.
படுக்கையில் உட்காருங்கள், உடலை தளர்த்திக் கொள்ளுங்கள், கண்களை மூடுங்கள். நீங்கள் ஒரு மலைப்பகுதியில் தொலைந்துவிட்டதாக
நினைத்துக் கொள்ளுங்கள். அது கருமையான நள்ளிரவு, வானத்தில் நிலவில்லை; மேகமூட்டத்துடனான வானம். ஒரு நட்சத்திரத்தைக்கூட உங்களால் பார்க்க முடியவில்லை.
முழுஇருள். உங்கள் கைகளைக்கூட உங்களால் பார்க்க முடியவில்லை.
நீங்கள் மலைப்பகுதியில் தொலைந்து விட்டீர்கள். வழி தெரியாமல் கஷ்டப்படுகிறீர்கள்.
அங்கே ஒரு ஆபத்திருக்கிறது, எந்த நிமிடமும் நீங்கள் ஏதோ ஒரு பள்ளத்தாக்கில் விழலாம். எங்கோ படுபாதாளத்தில் வீழ்ந்துவிடலாம். நீங்கள் காணாமலேயே போய்விடலாம். நீங்கள் எச்சரிக்கையாக அடியெடுத்து வைக்கிறீர்கள். பெரும் ஆபத்திருப்பதால் நீங்கள் மிகுந்த உஷாராக இருக்கிறீர்கள். ஆபத்து அதிகமாக இருக்கும்போது ஒருவர் எச்சரிக்கையாகதானே இருப்பார்.

மிகவும் இருளானஇரவு,
மலைப்பகுதி என்று கற்பனை செய்து கொள்வது ஒரு ஆபத்தான சூழலை உருவாக்கிக்
கொள்ளத்தான்.  நீங்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கிறீர்கள்.
ஒரு ஊசி கீழே விழுந்தால்கூட உங்களால் கேட்க முடியும். பிறகு திடீரென்று செங்குத்தான
ஒரு பகுதிக்கு வருகிறீர்கள். அதற்குமேல் போகமுடியாது என்று தெரிகிறது மேலும் அந்த பள்ளத்தாக்கு எத்தனை ஆழமானது என்பதும் தெரியாது. அதனால் நீங்கள் ஒரு கல்லை எடுத்து அந்த பள்ளம் எத்தனை ஆழமானது என்பதை தெரிந்துகொள்ள எறிகிறீர்கள்.

இப்போது அந்த கல் எந்த கல்மீது
மோதி சத்தம் ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்ள காத்திருங்கள்.
அந்தசத்தம் வருகிறதா என்று கவனியுங்கள், கவனியுங்கள் கவனித்துக் கொண்டேயிருங்கள்.
ஆனால் எந்த தகவலும் இல்லை, ஏதோ அந்தபள்ளத்தாக்கிற்கு கீழ்ப்பகுதியே
இல்லாததைப்போல. நீங்கள் கவனித்துக் கொண்டே இருக்கையில் ஒரு பெரும்பீதி உங்களுக்குள் பரவுகிறது. அந்தபீதி இப்போது உங்களுக்கு ஒரு தீப்பந்தத்தைப்போல ஒரு விழிப்பை ஏற்படுத்துகிறது.

அது உண்மையில் உங்கள் கற்பனையாகவே
இருக்கட்டும். நீங்கள் கல்லை எறிந்துவிட்டு காத்திருங்கள்.  நீங்கள் பொறுமையாக காத்திருந்து கவனியுங்கள். மார்பு துடிக்க நீங்கள் காத்திருங்கள், ஆனால் சத்தமில்லை. அங்கே ஒரு ஆழ்ந்தமெளனம். அந்த மௌனத்தில் நீங்கள் தூங்க ஆரம்பியுங்கள். அந்த சத்தமில்லாத மெளனத்தில் நீங்கள் ஆழ்ந்ததூக்கத்திற்கு போகிறீர்கள்.