கண்ணீர்
இதயம் கரைகையில் எழுவது கண்ணீர்
அதுவே மனிதனைக் கழுவி,
அவன் ஆன்மாவை காப்பாற்றி வருகிறது.
இடர்களை இறக்கிவைத்து,
வாழ்வைத் தொடர வழி செய்கிறது.
இன்பம் முட்டும்போதெல்லாம்,
நன்றியை பொங்கிப் பெருக வைக்கிறது.
உடல் உபாதையில் உழலும்போது,
வலியைக் கரைத்து வழிகிறது கண்ணீர்.
இப்படி மனிதனை இயற்கையோடு…….
இணைத்து வைத்திருப்பது கண்ணீர்.
அவன் இதயம் திறக்கும்போதெல்லாம்…….
அதில் பூத்து மலர்வது கண்ணீர்.
ஆம்…….
உடலின்பால் அன்பு,
உறவின்பால் அன்பு,
உள்ளத்தின்பால் அன்பு,
உயிரின்பால் அன்பு,
என்று…….
அன்பு எழும்போதெல்லாம் முகிழ்வது கண்ணீர்.
கண்ணீர் அன்பின் வெளிப்பாடு,
ஆகவே கண்ணீர் விடுங்கள்,
உங்களை அன்பால் கழுவுங்கள்.
2,
அன்பு இல்லையே
உன்னை பார்க்கப் பிடிக்கவில்லை
ஏனெனில் நான் உன்மீது அன்பு கொண்டிருக்கிறேன்.
உன் பேச்சைக் கேட்கப் பிடிக்கவில்லை
ஏனெனில் அன்பு……
உன்னை நினைக்கப் பிடிக்கவில்லை
ஏனெனில் அன்பு…….
உன்னை தனியாகப் பிடிக்கவில்லை
ஏனெனில் அன்பு……
நீ நான், நான் நீ
ஆம் இதுதான் பிடித்திருக்கிறது