வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

காதலி

 

அன்பைக் கற்றுக் கொள்ள அன்னையிடம் தவறவிட்டவர்கள்,

காதலியிடம் கற்றுக்கொள்ளுங்கள்……

 

ஆம் நண்பா

காதலி முக்கியமல்ல,

காதலிப்பது முக்கியம்,

கல்யாணம் முக்கியமல்ல,

காதல் சுவை முக்கியம்.

இன்னும் சொல்லப்போனால்……

காதலின் சுவை பிரிவில்தான்

நிலைத்து நிற்கும்.

கல்யாணம் செய்து காப்பாற்றிக் கொள்வது

மிகவும் சிரமம்.

எனவே நண்பா

காதல் கொள்  அன்பின் அரவணைப்பைப் பார்

உன்னுள் ஊறும் அன்பை உணர்

அதன்பின்…..

அனைவரையும் அனைத்தையும் அன்பு செய்

அப்போது உன் வாழ்வுக்குப் பிறக்கும்……ஓர் அர்த்தம்

ஓர் ஆனந்தம்  ஓர் சுவை  ஓர் இருப்பு.

 

 

அன்பு உலகம் 

பூட்டு இல்லாத பீரோ,

தாழ்ப்பாள் அற்ற கதவு,

விளக்குப் போடாத வீதி,

போலீஸ் இல்லாத சமூகம்,

சட்டம் இயற்றாத ஆட்சிக் குழு,

ராணுவம் அற்ற நாடு,

அணுகுண்டு இல்லாத உலகம்,

பிரிவினை கொள்ளாத பக்தன்,

போட்டியிடாத வியாபாரிகள்,

பொறாமைப்படாத பெண்கள்,

காமம் களைந்த ஆண்கள்,

பாசவலை பின்னாத குடும்பம்,

அகந்தை அற்ற மனிதன்,

அடடா…….இந்த அன்பு உலகம்……

அனைவரும் பகிர்ந்துகொள்ளத் துடிக்கும் இந்த ஆனந்தப்பூங்கா,

அன்பில் விளைந்த அமிர்த யுகம்.

 

நண்பர்களே!

இது இன்றும் சாத்தியம்!

இங்கு இப்போதே சாத்தியம்!

இதற்கு தேவையெல்லாம் இதுதான்,

இதயத்தை மலர விடுங்கள்!