வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

எனதன்பே,

எப்போதும் அன்புடன் இருக்கும் என் மனைவியே,

கடந்த வருடத்தில் 365 முறைகள் நான் உன்னுடன் கூட
விழைந்தேன்,

அது கிட்டத்தட்ட தினம் ஒரு முறை என்பது போல
வந்தாலும் நீ என்னை தவிர்ப்பதற்கு கூறிய காரணங்களின் பட்டியலின் எண்ணிக்கை இதோ –

தவறான வாரம் 11 முறை

இது குழந்தைகளை எழுப்பி விடும்  7 முறை

இன்று மிகவும் சூடாக இருக்கிறது  15 முறை

இன்று மிகவும் குளிராக இருக்கிறது  3 முறை

நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்  19 முறை

மிகவும் நேரமாகி விட்டது  16 முறை

இப்போதேவா 9 முறை

தூங்குவது போல நடிப்பது  33 முறை

ஜன்னல் திறந்திருக்கிறது, அக்கம் பக்கத்தார்
காதில் விழுந்து விடும் 3 முறை

முதுகு வலிக்கிறது 16 முறை

பல்வலி 2 முறை

தலைவலி 6 முறை

எனக்கு மனம் சரியில்லை 31 முறை

குழந்தைக்கு உடல்நலமில்லை, அதனால் அவன்
அழக்கூடும் 18 முறை

கண் விழித்து படம் பார்த்துக் கொண்டிருந்தது 15 முறை

கிரீஸ் முகத்தில்  4 முறை

நிறைய குடித்திருக்கிறீர்கள் 7 முறை

மருந்துகடைக்கு போய் வாங்க மறந்துவிட்டேன் 10 முறை

விருந்தினர்கள் ஹாலில் தூங்குகிறார்கள் 7 முறை

இப்போதுதான் முடிநீக்கம் செய்தேன்  28 முறை

எப்போதும் இதைத்தான் நினைத்துக் கொண்டிருப்பீர்களா 62 முறை

அன்பே இனி வரும் அடுத்த வருடம் இந்த பட்டியலை
இன்னும் கொஞ்சம் விரிவாக்கம் செய்வோமா

எப்போதும் உன்னை நேசிக்கும் உன் கணவன்

முல்லாநசுரூதீன்

இப்படி சாக்குப்போக்கு சொல்வதும், போலித்தனமாய் இருப்பதும், பணிய வைக்க பயன்படுத்துவதும் என்று உன் வாழ்க்கை முழுதாய் வியாபாரத்தனம் ஆகிவிட்டது.