வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

1    இறப்பு ஒரு முடிவல்ல, வாழ்வின் உச்சம், வாழ்வின் மிக ஆழமான அனுபவம்.

2.    பயம் ஒரு பிடிப்பு.

3.    பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக்கொள்ளும் மக்கள், அதிகம் உளறுகிறார்கள் – எந்தப் பயனுமற்ற இரைச்சல் இது.

4.    சமூகம்,  வாழ்வின் மூன்று முக்கிய விஷயங்களை அமுக்கப் பார்க்கிறது – அவை செக்ஸ், மரணம், வாழ்வின் பயனற்ற தன்மை.

4.    சுதந்திரத்தின் ரகசியம், பின் தொடராதிருத்தலே.

5.    தயக்கம், குற்றவுணர்ச்சி ஆகிய இரண்டுமே ஆணவத்தின் வெளிப்பாடுகளே. ஒன்று தோல்வி பயம், மற்றொன்று தோல்வியுற்ற ஆணவம்.

6.    அன்பிற்குத் தடையாய் இருப்பது போலித்தனமாய் நாம் கடைபிடிக்கும் அன்பே.

7.    குழந்தைகள் உங்களுடையவர்களல்ல, உங்கள் மூலம் வந்துள்ளவர்கள் அவ்வளவே.

8.    பாதுகாப்பற்ற நிலையும், ஆபத்தும் உன்னை வாழ்க்கைக்குள் கொண்டுவருகின்றன.

9.    வாழ்க்கை ஒரு இடையறாத ஓட்டம்.

10.   பேராசையும் பயமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல ஒன்றிணைந்தவை.