வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

ஒரு ஓஷோ சன்யாசி பகிர்ந்து கொள்ளும் விஷயம் இது.

அதிகம் உன்னைக் குத்தாத பத்து உண்மைகள்

1.    மனித வாழ்க்கை காலக் கணக்கீட்டில் மிகவும் சிறியது.

2.    உனக்காக நீ உருவாக்கிக் கொள்ளும் வாழ்வு மட்டுமே நீ வாழக் கிடைக்கும். அதற்கு அதிகமாக ஆசைப்படுவது வீண்.

3.    சுறுசுறுப்பாக இருப்பது மட்டுமே போதாது, புத்திசாலித்தனமாக இருப்பதே முக்கியம்.

4.    வெற்றி என்பது தோல்வி கலந்ததாகவே இருக்கும்.

5.    மனக்கோட்டை கட்டுவதும், செயல்படுவதும் முற்றிலும் வேறுபட்ட இரு விஷயங்கள்.

6.    ஒருவர் மன்னிப்பு கேட்கும்வரை நீ அவரை மன்னிக்க காத்திருக்க வேண்டியதில்லை.

7.    யாரும் உனக்கு முற்றிலும் பொருந்தியவர்களாய் இல்லாமல் போவதே உண்மை. அதை ஏற்றுக்கொள்ள உனக்கு காலம் பிடிக்கும் அவ்வளவுதான்.

8.    உன்னை நேசிப்பது அடுத்தவர்களின் வேலையல்ல, அது உன் வேலை.

9.    நீ யார் என்பது வேறு, நீ எதற்கெல்லாம் சொந்தக்காரனாய் நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்பது வேறு.

10.   ஒவ்வொரு கணமும் அனைத்தும் அனைத்தும் மாறிக்கொண்டிருக்கிறது.