புது வேதம்
வேதம் கடவுளின் பாஷையாம்,
புதிரான சொற்களாம்,
பொருள்
கடந்த மந்திரமாம்,
உன்னை
உய்விக்குமாம்.
எனக்குத் தெரியாது.
எனக்குத் தெரிந்து யாரும்
இதனால் உய்யவில்லை.
ஆனால்……என் வேதம்…….
வேறுபாடுகள் களையும்,
வினாடியில் ஆளை மாற்றும்,
வெறுப்பும் எதிர்ப்பும்
ஓடிப் போகும்,
கொண்டாட்டம் கொண்டு வரும்,
குதூகலத்தில் ஆழ்வீர்கள்!
தேடுவதை விட்டுவிட்டு
ஓடிச் சென்று
கொடுப்பீர்கள்!!
வாழ்வில் பற்றாக்குறை நீங்க-
வாழ்வு வந்து பற்றிக்
கொள்ளும்!!!
அது அன்பு……
அன்பை
உணருங்கள்,
அன்பைக் கொள்ளுங்கள்,
அதன்வழி ஆனந்தமாய்
வாழுங்கள்.