வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

தளர்வு மற்றும் விடுவிப்பதன் மூலமாக பதட்டத்தை வெளியே விடுவது

செய்வதறியாமல் நகம் கடிப்பவர்கள்

நிறைய சக்தி இருக்கும்போது, அதைவைத்து என்னசெய்வது என்று உங்களுக்குத் தெரியாது.  அதனால் உங்கள் நகத்தை கடிக்கிறீர்கள், அல்லது புகைபிடிக்கிறீர்கள்,
நகத்தைகடிப்பது, புகைபிடிப்பது இரண்டும் ஒன்றுதான். ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக ஒருவர் எதையாவது ஆரம்பிக்கிறார்; அல்லது அந்தசக்தி
அப்படியேயிருக்கிறது, அதைதாங்க முடியவில்லை. அந்த செயல் மோசமானது, பதட்டத்திற்கான அறிகுறி என்று கண்டிக்கும்போது – பிறகு அங்கு அதிக அடக்குமுறை நடக்கிறது. உங்கள் நகத்தை கடிக்ககூட உங்களுக்கு சுதந்திரமில்லை. நகம் உங்களுடையது, ஆனால் அதை உங்களால் கடிக்க முடியாது. பிறகு
மக்கள் வேறு சூட்சமமான வழியை தேடுகிறார்கள், சூயிங்கம். இதெல்லாம் மெல்லிய வழிகள், யாரும் அதிகம் கண்டிக்க மாட்டார்கள். நீங்கள் சிகரெட் பிடித்தால் யாரும் எதிர்க்கமாட்டார்கள்.
ஆனால் நகத்தை கடிப்பது லேசான கெடுதல்தான் – உண்மையில் அது கெடுதலே அல்ல.
அது கெடுதல் இல்லாத சந்தோஷம். அது கொஞ்சம் அசிங்கமாக, குழந்தைதனமாக இருக்கும். அவ்வளவுதான், ஆனால் அதைச்செய்யாமல் இருக்கத் தான் முயற்சி செய்கிறீர்கள்.

அதிக சக்தியோடு வாழப்பழக வேண்டும். அவ்வளவுதான், பிறகு இவையெல்லாமே காணாமல் போகும்.  அதிகமாக நடனமாடுங்கள், நிறைய பாடுங்கள், அதிகமாக நீந்துங்கள், நீண்ட நடைபோடுங்கள். உங்கள் சக்தியை ஆக்கபூர்வமான வழிகளில் செலவிடுங்கள். குறைவிலிருந்து அதிகமானதற்கு நகருங்கள்.
வாழ்க்கையை முனைப்போடு வாழுங்கள்.  புணர்கிறீர்கள் என்றால், அதைக் கட்டுப்பாடற்றுச் செய்யுங்கள், பெண்ணைப்போல மிருதுவாக அல்லாமல் – அதாவது ஏனோதானோ என்றில்லாமல் முழுமூச்சாக செய்யுங்கள். ஒரு `பெண்’ என்றால் குறைந்தஅளவு வாழ்க்கை. அல்லது உண்மையில் வாழாமல் வாழ்வதைப் போல பாசாங்கு செய்வது என்றே இருக்கிறீர்கள். அதனால் கட்டுபாடற்று இருங்கள் ! இனிமேலும் நீங்கள் குழந்தையில்லை, ஆகவே உங்கள் சொந்த இடத்தில் நீங்கள் எப்படியும், ஒரு தொந்தரவாகவும் இருக்க நீங்கள் அனுமதிக்கபட வேண்டும், குதியுங்கள்,
பாடுங்கள், ஓடுங்கள்.

இதை ஒரு வாரத்திற்கு முயன்று பாருங்கள், உங்களுக்கே திகைப்பாக இருக்கும். நகம் கடிப்பது தன்னாலேயே மறைந்து போகும். இப்போது சுவாரஸ்யமான பலவிஷயங்கள் செயலாற்றக் காத்திருக்கும். நகத்தை பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள். ஆகவே எப்போதுமே இருப்பைப் பாருங்கள், அறிகுறிகளைப் பற்றி கவலைப்படாதீர்கள்.