வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

1.    நேசிக்க முதலில் உன்னிடம் ஒருமையில் இருக்கும் திறன் வர வேண்டும். நேசத்திற்கு பக்குவம்
தேவை, அது இல்லாவிட்டால், அது உன்னை முடக்கி அழித்து விடும்.

2.    “நான்” என்பது அறியாமையின் மொத்த உருவம்.

3.    விழிப்புணர்வு உனது காயங்களை திறக்கிறது, அதனால்தான் எல்லோரும் புகைத்தல், குடித்தல், டிவி
பார்த்தல் போன்றவற்றில் விழிப்புணர்வை இழக்க விரும்புகின்றனர்.

4.    சுலபமானதே சரியானது, சரியானதென்பது சுலபமானதே.

5.    சுலபமாவதற்கு பதில் சோம்பேறியாகிவிட்டது கிழக்கு. விளையாட்டுத்தன்மைக்கு பதில்
வெறிகொண்டுவிட்டது மேற்கு.

6.    பக்குவம் என்பது யாரையும் சாராதிருப்பது.

7.    சமாதி – எந்த அறிவுமற்ற நிலை

8.    கடவுள் இதுவுமல்ல, இதுவுமல்ல.

9.    நுணுக்கத்தைப் பழகு, பிறகு மறந்து விடு, கலையுள் ஆழு – இதுவே வழி.

10.   மதத்தன்மை கொண்ட சமூகம் – இனிதான் பிறக்க வேண்டும்.