தனிமை
அன்புக்கு ஏற்ற இடம்,
இதமான இடம்,
தோதான நிலை,
தூண்டிவிடும் சூழல்,
அது தனிமைதான்.
ஆச்சரியமாயிருக்கிறதா
அப்படியானால்… இன்னும் நீ
அன்பை அறிந்தவனில்லை.
அன்பில் கரைந்திருந்தால்….
நீ தனிமை தேடுவாய்.
ஆம்…
பேராசை, பொறாமை, காமம், அதிகாரம்,
சுயநலம், பெருமை, போலித்தனம்
சூழ்ந்த
சமுதாயத்திலிருந்து நீ தனிமை தேடுவாய்,
இது மனிதர்களை வெறுப்பதல்ல,
மனிதர்களின்
மதம்பிடித்த தன்மையை வெறுப்பது.
ஆகவே உன் தனிமையும்
தனிமையல்ல……..
அது ஒருமை
ஆறாய், மலையாய், அருவியாய்,
பருவமாய், அழகாய், மரமாய், செடியாய்…..
இப்படி
இயற்கைநிலை தவறாதவற்றோடு
இயைந்தநிலை
இது ஒருமைநிலை.
தனிமைநிலையல்ல.