வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

ஜாபரஸ்கீ ஒரு வியாபார விஷயமாக போலந்து போக
வேண்டி வந்தது. அவன் தன்னுடைய நண்பன் கோவலஸ்கீ யிடம் புலம்பிக் கொண்டிருந்தான்.
நான் என்னுடைய மனைவியை நம்புவதில்லை. எனக்கு எப்போதும் இந்த சந்தேகம் இருந்து
கொண்டேதான் இருக்கிறது. என்னால் ஒருபோதும் அவளை நம்பவே முடியவில்லை. இப்போதும் அவளை விட்டுவிட்டு போவது என்பதுதான் பிரச்னையாக இருக்கிறது என்று புலம்பிக் கொண்டிருந்தான்.

கோவலஸ்கீ, சரி, நான் பார்த்துக் கொள்கிறேன். நீ
தாராளமாக ஊருக்குப் போய்விட்டு வா என்றான்.

ஜாபரஸ்கீ, நீ உண்மையாகத்தான் சொல்கிறாயா நீ பார்த்துக் கொள்கிறாயா நான் உன்னை நம்பி அவளை விட்டு விட்டு போகலாமா என்று கேட்டான்.

கோவலஸ்கீ, நிச்சயமாக என்று உறுதியளித்தான்.

ஜாபரஸ்கீ திரும்பி வந்தவுடன் சென்று கோவலஸ்கீயை
சந்தித்தான். என்ன நடந்தது என்று கேட்டான். கோவலஸ்கீ, நீ சந்தேகப்படுவது சரிதான்.
நீ ஊருக்கு சென்ற அன்று இரவு உன் வீட்டிற்கு சிம்ஸன் வந்தான். உன் மனைவி வெறும்
ஜட்டியுடன் அவனை வரவேற்றாள். அவன் அவளை பார்த்தவுடன் முத்தமிட்டான். என்றான்.

பின்பு, என்று கேட்டான் ஜாபரஸ்கீ

பின்பு அவர்கள் இருவரும் வீட்டிற்க்குள்
சென்றனர். சோபாவில் படுத்துக்கொண்டு அவர்கள் இருவருடைய உடைகளையும் கழற்றி வீசினர். என்றான் கோவலஸ்கீ

பின்பு என்ன நடந்தது என்று கேட்டான் ஜாபரஸ்கீ

தெரியவில்லை. அவர்கள் லைட்டை அணைத்துவிட்டனர்
அதனால் என்னால் மேற்கொண்டு எதையும் பார்க்க முடியவில்லை என்றான் கோவலஸ்கீ.

பார்த்தாயா நான் இதைத்தான் சொன்னேன். அவர்கள்
எப்போதும் லைட்டை அணைத்து விடுகின்றனர். அதனால் எதையும் பார்க்க முடிவதில்லை.
ஆகவேதான் எனக்கு சந்தேகம் போவதேயில்லை என்றான் ஜாபரஸ்கீ.