வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

தளர்வு மற்றும் விடுவிப்பதன் மூலமாக பதட்டத்தை வெளியே விடுவது 

ஆமாம், சரி என்று சொல்லுங்கள்!

`இல்லை’
என்பது நமது அடிப்படை அணுகுமுறை. ஏன்? காரணம் என்னவென்றால்` இல்லை’ என்று சொல்லும்போது நீங்கள் யாராகவோ உணர்கிறீர்கள்.
ஒருதாய் `இல்லை’ என்று சொல்லும்போதுதான் தான்இருப்பதைப்போல உணர்கிறார்.-
அவர் இல்லை எனக் கூற முடியும். குழந்தைக்கு மறுக்கப்படுகிறது.
குழந்தையின் உணர்வு காயப்படுகிறது. தாயின் அகம்பாவம் பூர்த்தியடைகிறது. `இல்லை’ என்பதே அகம்பாவத்தின் பூரணத்துவம்தான்.
அது அகம்பாவத்தின் உணவு. அதனால்தான் நாம் `இல்லை’ ‘முடியாது’ என்று சொல்ல பழகிக் கொள்கிறோம்.

வாழ்க்கையில் எங்கே வேண்டுமானாலும் செல்லுங்கள், இல்லை என்று
சொல்பவர்கள் எங்குமிருப்பார்கள். காரணம் ` இல்லை’ என்று சொல்லும் போது உங்கள் அதிகாரத்தை உணர்கிறீர்கள். – நீங்கள் இருப்பதை உணர்கிறீர்கள்,
ஆகவேதான் நீங்கள் `இல்லை’ என்று சொல்கிறீர்கள்.
`ஆமாம் ஐயா ‘ என்று சொல்லும் போது நீங்கள் தாழ்வுற்றதாக உணர்கிறீர்கள்.  நீங்கள்
யாருக்கோ கீழ்படிந்தவர் என்கிற உணர்வு ஏற்படுகிறது. அப்போதுதான் உங்களால்
` ஆமாம், ஐயா’ என்றுசொல்லமுடியும்.

`ஆமாம்’ என்பது ஆதரவானது. `இல்லை’ என்பது எதிரானது.

இதை நினைவில் வையுங்கள்: `இல்லை’ என்பது அகம்பாவத்தின் பூர்த்தி.`ஆமாம்’ என்பது தன்னை அறிந்துகொள்ளும் முறை. `இல்லை’ என்பது அகம்பாவத்தை பலப்படுத்துவது.  `ஆமாம்’ என்பது அதை அழிக்கிறது.

முதலில் உங்களால் `ஆமாம்’ என்று சொல்லமுடியுமா
என்று கண்டறியுங்கள். உங்களால் ஆமாம் என்று சொல்லமுடியாது என்றால், ஆமாம் என்று சொல்வது சாத்தியமற்றது என்றால் பிறகு மட்டுமே `இல்லை’ என்று சொல்லவேண்டும்.

ஆனால் நமது பழக்கமே முதலில் `இல்லை’ என்று சொல்வதுதான். `இல்லை’ என்று சொல்வது சாத்தியமில்லாதபோதுதான் ஒரு  தோல்வி மனப்பான்மையோடுதான் நாம்
`ஆமாம்’ என்று சொல்கிறோம்.

என்றாவது ஒருநாள் முயற்சி செய்யுங்கள். ஒரு இருபத்தி
நாலுமணிநேரம் எந்த சந்தர்ப்பத்திலும் `ஆமாம்’ என்று சொல்லுவேன் என்று ஒரு உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். அது எத்தனை ஆழமான தளர்வை தருகிறது என்பதை பாருங்கள். சாதாரண விஷயங்கள் ! உங்கள் குழந்தை சினிமாவுக்கு போகவேண்டும்
என்கிறது. அவன் போவான். உங்கள் `இல்லை’க்கு எந்த அர்த்தமுமில்லை.  அதற்குமாறாக,
உங்கள் `இல்லை’ ஒரு அழைப்பாகிறது.  உங்கள் `இல்லை’ ஒரு ஈர்ப்பாகிறது.  காரணம் நீங்கள்
உங்கள் அகம்பாவத்தை பலப்படுத்துகிறீர்கள்.. குழந்தை தன்னுடையதை பலப்படுத்த முயல்கிறது. உங்கள்  `இல்லை’க்கு எதிராக போக முயற்சிக்கிறது. உங்கள் ` இல்லை’ என்பதை `ஆமாம்’ என்றாக்கும் வழி அவனுக்கு தெரிந்திருக்கிறது.
அதை எப்படி மாற்றுவது என்று தெரிந்திருக்கிறது.  அதற்கு கொஞ்சம்
முயற்சி, அழுத்தம், தேவைப்படுகிறது, பிறகு உங்கள் இல்லை என்பது ஆமாம் ஆகிறது.

ஒரு இருபத்திநாலுமணிநேரம் எல்லாவழிகளிலும் `ஆமாம்’ என்பதோடு
துவங்குங்கள். ரொம்பவும் கஷ்டமாக இருக்கும்,
காரணம் உங்களுக்கு இல்லை என்பதுதான் முதலில் வருகிறது என்பதை
அறிந்து கொள்வீர்கள். எதிலும் இல்லை என்பதுதான் முதலில் வருகிறது.  அது ஒரு
பழக்கமாகவே ஆகிவிட்டது. அதை பயன்படுத்தாதீர்கள்.  ஆமாம் என்பதை
பயன்படுத்துங்கள். பிறகு அந்த ஆமாம் எத்தனை தளர்வை தருகிறது என்று பாருங்கள்.

சரியான சிந்தனைக்கு அர்த்தமே ஆமாம் என்று சொல்லத் துவங்குவதுதான்.
நீங்கள் இல்லை என்று சொல்லவே கூடாது என்று அர்த்தமில்லை.  ஆமாம் என்று
சொல்லத் துவங்குங்கள் என்றுதான் அர்த்தம். ஆமாம் சொல்லும் மனதோடு பாருங்கள். பிறகு, அது சாத்தியமில்லாவிட்டால், இல்லை என்று சொல்லுங்கள். நீங்கள் ஆமாம் என்று சொல்லத் துவங்கிவிட்டால், இல்லை என்று சொல்வதற்கு காரணமே இருக்காது. இல்லை என்று நினைக்க ஆரம்பித்தால் ஆமாம் சொல்ல காரணமே கிடைக்காது. துவக்கநிலை என்பது
90 சதவீதம் முடிந்துவிட்டது. உங்கள் துவக்கம் எல்லாவற்றிற்கும் வண்ணம்  கொடுத்துவிடும், முடிவுக்கும் கூட அது வண்ணம் கொடுத்துவிடும். சரியான சிந்தனை என்பது சிந்திப்பது, ஆனால் ஒரு இரக்கமனதோடு சிந்தியுங்கள்.  ஆமாம் –சொல்லும் மனதோடு யோசியுங்கள்.