வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

ஆத்மோ தன்னுடைய உள் பயணத்தை துவக்கினார்,
பூனாவில் உள்ள ஓஷோ ஆசிரமத்தில் ‘ ப்ளாப் ‘ என்று குதித்துவிட்டார்.  அவர் தன்னைப் பற்றி…………………..

என்னுடைய 40 வயது வரை அதைப் பற்றி குறிப்பாக
சொல்ல ஏதுமில்லாமல் சொந்த வியாபாரம் செய்து கொண்டு சாதாரணமாக சென்றது. என்னுடைய இரண்டு மகள்களையும் வளர்த்துக் கொண்டு இதனிடையே சில பல தொடர்புகளையும் கொண்டவாறு காலம் சென்று கொண்டிருந்தது.

இந்த காலத்தில் நான் விரும்பாமலேயே ஒரு தத்துவ
பள்ளியில் இரவு வகுப்பில் சேர்ந்தது மூலமாக என்னுடைய உள்முகப் பயணம் ஆரம்பித்தது.
அதன் பின் மனோதத்துவ குரூப், பின் பட்டறை, பின் யோகா பயிற்சி என அது தொடர்ந்தது.
நான் இந்தியாவில் உள்ள மைசூருக்கு யோகா ஸ்டுடியோவில் சேருவதற்காக வந்தேன். அது
மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. அங்கே நான் மிகவும் அனுபவித்து செய்தேன்.
இந்த செயல்கள் அனைத்திலும் ஒரு கட்டத்தில் நான் இதை தொடர்ந்து செய்ய முடியாது என
உணர்ந்து நான் அதை விட்டு விடுவேன். பின் ஒரு சமயத்தில் நான் எனது வியாபாரத்தை கூட
விட்டுவிட்டு ஜாலிக்காக பயணம் செய்ய ஆரம்பித்தேன்.

எனது வியாபாரம் என்னுடைய வாழ்வைப் போன்றே ஒன்
மேன் ஷோ தான். எனவே அதை யாராவது வாங்க தயாராக இருப்பார்களா என்பது என்பது எனக்கு சந்தேகமாகவே இருந்தது. எனினும் நான் 6 பேர்களுக்கு தபால் அனுப்பினேன்.
ஆச்சரியகரமாக ஒரு பதில் வந்து அவரும் குறிப்பிட்ட அளவு பணம் தரத் தயாராக
இருந்தார். என்னால் இதை நம்பவே முடியவில்லை.

அதே சமயத்தில் காஷ்மீர் பகுதியில் இருந்து
இமயமலையில் நடை பயணம் ஆரம்பித்தேன். இரவு டெண்டில் சமநிலை சரியில்லாத இடத்தில்
படுப்பதால் மிகவும் சிரமப்படுவதும், எனது உடலுக்கு பொருந்தாத உணவும் என
கஷ்டப்பட்டப் பின் இது எனக்கானது அல்ல என்பதை உணர்ந்து அதை விட்டுவிட்டேன்.
அப்போதுதான் நான் என்னுடைய சுகத்தை எந்த அளவு அனுபவித்தேன் என்று உணர்ந்தேன். பின்
முதலில் டெல்லி சென்று பின் அங்கிருந்து கோவா போய் சிறிது நாள் அனுபவித்து விட்டு
பின் என்னுடைய நாடான அயர்லாந்து செல்வதாக திட்டம் போட்டு எல்லாவற்றிக்கும் பிளைட்
புக் செய்து விட்டேன்.

LONELY PLANET GUIDE TO INDIA  என்ற இந்தியாவைப் பற்றிய புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும் போது பூனாவைப் பற்றிய விவரத்தில் ஆசிரமம் பற்றியும் செக்ஸ் குரு பற்றியும் படித்தேன். எனக்கு ஒரு ஆவல் பிறந்தது. எனவே ஒரு நாள் பயணமாக அங்கு சென்று பார்த்து விட்டுப் போகலாம் என்று முடிவெடுத்து அங்கு சென்று ரயில் நிலையத்தில் இறங்கி ஆட்டோகாரரிடம் ஓஷோ ஆசிரமம் தெரியுமா என்று கேட்டேன். சிறிது நேரத்திலேயே நான் ஓஷோ இன்டர்நேஷனல் ரிசார்ட் வாசலில் நின்றேன். அங்கு நான் உள்ளே போக முடியுமா என்று கேட்டபோது அவர்கள் நீங்கள் நாளை காலை வாருங்கள் அல்லது ஓஷோ கெஸ்ட்ஹவுஸ் ஓட்டல் இருக்கிறது. அதில் தங்குவதானால் இப்போது உள்ளே போகலாம் என்றார்கள். சிறிது தயக்கத்துடனேயே நான் ஒத்துக் கொண்டேன். செக்கின் நேரத்திலேயே அவர்கள் ஒரு வெள்ளை அங்கியும் மெரூன் அங்கியும் தந்தார்கள். அந்த நேரத்தில் ஆசிரமத்தில் அதை இலவசமாக தந்தார்கள். மாலை நேர சங்கமிப்பு தியானம் சிறிது நேரத்தில் துவங்க இருப்பதாக கூறினார்கள். அது என்ன என்று கூட எனக்கு புரியவில்லை. உண்மையில் ஓஷோவுடன் சம்பந்தப்பட்ட எதைப் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது.

முதன்முதலாக பேண்டின் மீது அங்கி அணிவது என்பது
மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஆனால் எப்போதும் இது போன்ற ஒன்றை நான் முயற்சி
செய்து பார்ப்பேன். நான் மிகச் சரியாக ஒரு பெரிய பிரமிடு போன்ற இடத்தை
சென்றடைந்தேன். அங்கே சென்று நான் உட்கார்ந்த பின் இசை வந்ததும் எல்லோரும் எழுந்து
நடனமாடத் தொடங்கினர். நானும் எழுந்து ஜாகிங் செய்ய ஆரம்பித்தேன். இந்த முழு
சுற்றுசூழலும் எனக்கு புதுமையானதாக வித்தியாசமானதாக இருந்தது. திடீரென எல்லோரும்
அமைதியாக இருந்த சமயம் மூன்று டிரம் சப்தம் இருதயத்தை அதிர வைக்கக் கூடியதாக எழுந்த
பின் நான் முன்பின் பார்த்திராத ஒருவர் திரையில் வந்து பேச ஆரம்பித்தார். அவர் பேச
பேச எனக்கு ஆமாம், சரிதான், என்ற உணர்வு வந்து கொண்டே இருந்தது. ஏதோ ஒன்று உள்ளே
அடி ஆழத்தில் என்னை தொட்டது. எனக்கு முதலிலேயே தெரிந்த ஒரு விஷயம் ஆனால் நான் இப்போது மறந்துவிட்ட ஒன்று நினைவுக்கு வந்தது. எனக்கு இவரை ஏற்கனவே தெரியும் என்பது போல தோன்றியது. அந்த கணத்தில் நான் முழுமையாக இருந்து என்னை நிகழ்வுக்கு தந்தேன்.

அந்த சந்திப்பு முடிந்தபின் எனக்கு ஒருவிதமாகவே
இருந்தது. நான் கூட இருந்த ஒருவரை கேட்டேன், யார் இவர் என்று. அவர் ஓஷோ என்று
கூறினார். அது நிகழ்ந்தது அக்டோபர் 2006. ஆறு மாதங்கள் கழிந்த பின்னும் நான்
அங்கேயேதான் இருந்தேன். சன்னியாஸ் எடுத்துக் கொண்டேன், பல்வேறு குரூப்புகளில்
பங்கெடுத்துக் கொண்டேன், வேலைதியானத்தில் என்னை இணைத்துக் கொண்டேன், அந்த நிகழ்வு என்னைப் பொறுத்தவரை மிகவும் அரிதான ஒரு பரிசாகும். சிஷ்யன் தயாராகும்போது அங்கே குரு தோன்றுகிறார் என்று அவர் கூறுவது உண்மைதான்.

நான் இதை எழுதும்போது நான் ஓஷோவை சந்தித்து
ஒன்பது வருடங்கள் கடந்துவிட்டன. நான் என்னுடைய வீட்டை, காரை விற்று விட்டேன் 

மற்றும் அயர்லாந்தில் உள்ள மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட்டேன்.

தொடர்ந்து பயணம் அறியாதவற்றினுள்…………………………………………