வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

அன்பின் சிறப்பு

உரிமை தாய்மையின் சிறப்பு,

கண்டிப்பு தந்தையின் சிறப்பு.

ஊடல் காதலின் சிறப்பு,

பகிர்தல் நண்பனின் சிறப்பு.

தியாகம் உணர்வின் சிறப்பு,

படைப்பு உழைப்பின் சிறப்பு.

நன்றியுணர்வு பக்தனின் சிறப்பு,

கருணை குருவின் சிறப்பு.

கலை அழகின் சிறப்பு,

நடனம் நளினத்தின் சிறப்பு,

இசை துய்த்தலின் சிறப்பு.

கணத்தில் வாழ்தல் குழந்தையின் சிறப்பு,

நேயம் நனிதனின் சிறப்பு.

இப்படி…..

எதன் சிறப்பும்

எப்போது பிறக்கிறது

அதனதன் நிலையில்

அன்பும் நேசமும்

பொங்கிப் பெருகுகையில்…..

ஆம்…

அப்போதுதான்

அந்த சிறப்பு பிறக்கிறது.

ஆகவே நண்பா

எந்த நிலையிலும் அன்பு கொள்,

சிறப்பு உன்னிடம் பிறக்கட்டும்.