வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

தளர்வு மற்றும் விடுவிப்பதன்
மூலமாக பதட்டத்தை வெளியே விடுவது

சிக்கலை சிரித்தனுப்புங்கள்.!

மெளனமாக உட்காருங்கள்,
உங்கள் இருத்தலின் துணிவின்மீது ஒரு அசட்டுச்சிரிப்பை வரவழைத்துக்கொள்ளுங்கள்.
ஏதோ உங்கள் முழுஉடலுமே அசட்டுச்சிரிப்பில் இருப்பதைப்போல உணர்ந்து கொள்ளுங்கள். அந்த சிரிப்போடு அசையுங்கள். அது வயிற்றின் மேல்புறத்திலிருந்து முழுஉடலுக்கும் பரவட்டும். – கைகள் சிரிக்கட்டும், அதை ஒரு கிறுக்கத்தனமாக செய்யுங்கள்.  ஒரு இருபதுநிமிடங்கள்
சிரியுங்கள்.  அது உரத்த சிரிப்பாக இருந்தாலும்கூட அதைஅனுமதியுங்கள்..
அது சத்தமில்லாமல் வந்தால், சிலசமயங்களில் அமைதியாக, சிலசமயம் சத்தமாக, எப்படியும் அதை அனுமதியுங்கள்.
ஆனால் ஒரு இருபதுநிமிட சிரிப்பை அனுமதியுங்கள்.

பிறகு மண்ணிலோ அல்லது தரையிலோ
படுத்துக்கொள்ளுங்கள். தரையை பார்த்தபடி, தரையில் படுத்துக்கொள்ளுங்கள்.
சூழல் வெதுவெதுப்பானதாக இருந்தால், உங்கள் தோட்டத்தின் தரையில் செய்யலாம்.. அது நல்லது.  நிர்வாணமாக செய்யமுடிந்தால், அது இன்னும் நல்லது. பூமியோடு தொடர்புகொள்ளுங்கள். அந்தபூமி உங்கள் தாய், நீங்கள்
அதன் குழந்தை என்று நினைத்துக்கொள்ளுங்கள். அந்த நினைப்பிலேயே கரைந்து
செல்லுங்கள்.

இருபதுநிமிடம் சிரிப்பு, இருபதுநிமிடம் பூமிபடர்வு, பூமியோடு ஒரு ஆழ்ந்ததொடர்பு.  பூமியோடு சுவாசம், பூமியாகவே
உணருங்கள்.  நாம் மண்ணிலிருந்துதான் வந்தோம். ஒருநாள் அங்கேதான் போகப்போகிறோம்.
இப்படி ஒரு இருபதுநிமிட போஷாக்கேற்றலுக்குப்பிறகு – காரணம் பூமி உங்களுக்கு நிறையசக்தியைக் கொடுக்கும், – நீங்கள்
இப்போது ஆடும்போது அதற்கு ஒரு பெரியசுவை இருக்கும். இப்படி இருபதுநிமிடங்கள் நடனமாடுங்கள்…
எந்த ஆட்டமானாலும் சரி. இசையை போட்டு நடனமாடுங்கள்.

வெட்பநிலை மோசமாக இருந்தால்,
அறையிலேயே இதைச்செய்யலாம். ஆனால் நல்ல வெளிச்சமாக இருந்தால், வெளியே செய்யுங்கள், அங்கே சில்லென்று இருந்தால் ஒரு போர்வையை போர்த்திக்கொள்ளுங்கள்.
இதைச் செய்ய ஏற்ற வழிகளையும், முறைகளையும் கண்டறியுங்கள், ஆனால் தொடர்ந்து செய்யுங்கள். ஆறு அல்லது எட்டுமாதத்திற்குள் நீங்கள் பெரியமாற்றங்கள் தன்னால் ஏற்படுவதை காண்பீர்கள்.