வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

மகிழ்வாக இருப்பது என்பது சென்றடைய வேண்டிய
குறிக்கோள் அல்ல. அது உன்னுடைய இயல்பு.

 

அடுத்தவர் கூட இருப்பது நரகம் அல்ல.
அடுத்தவர்கள் தான் உன்னுடைய கண்ணாடி. அவர்கள் உன்னுடைய மனதை, உன்னுடைய உண்மையான முகத்தை பிரதிபலிக்கிறார்கள்.

 

எண்ணங்களுக்கு உயிர் கிடையாது. நாம் அவைகளுக்கு
கவனம் கொடுக்கும் அளவு அவை உயிருள்ளதாக மாறும்.

 

கட்டுப்படுத்துதல் ஆன்மீகம் அல்ல. எல்லா
கட்டுத்தளைகளிலிருந்தும் விடுபட்ட தன்னுணர்வு மட்டுமே ஆன்மீகத்திற்க்குள் நுழைய முடியும்.

 

புத்திசாலித்தனம் உங்களுடைய ஆன்மாவின் இயல்பு.
நினைவு மூளையின் செயல்பாடு மட்டுமே.

 

புதிய பாதைக்குள், அறியாதவற்றினுள் நீ நகர
ஆரம்பிக்கும் போதுதான் மனிதத்தன்மை எழுகிறது.

 

கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையிலிருந்து
ஆன்மீகம் ஆரம்பிப்பதில்லை. வாழ்க்கை என்பது ஒரு வரம் என்ற விழிப்புணர்விலிருந்து அது துவங்குகிறது.

 

உன்னுடைய வாழ்வை ஒரு தொடர் கொண்டாட்டமாக,
முடிவற்ற கொண்டாட்டமாக நிலைமாற்றம் செய்வது எப்படி என்பதுதான் ஆன்மீக கலை முழுமையும்.

 

பயம் பேராசையை கொண்டு வரும், பேராசை பயத்தை
கொண்டு வரும். இது ஒரு விஷ வளையம், இது போய்க்கொண்டே இருக்கும். இதிலிருந்து வெளியே வர வேண்டுமெனில் எட்டிக்குதித்துத்தான் வர வேண்டும்.

 

ஆணவத்தை கை விட வேண்டுமெனில் மிகுந்த துணிச்சல்
தேவைப்படும். ஆனால் அதை உன்னால் செய்ய முடிந்து விட்டால் பின் உன்னுடைய வாழ்வில் ஆச்சரியங்கள் நிகழ ஆரம்பிக்கும்.