வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

இறப்பின் மர்மங்களும் அதைப்பற்றிய நிஜங்களும்

வீட்மேன் வாழ்வின் இறுதி நிலையில், உடல் மரணம்
என்று சொல்லப்படுகின்ற நிலைக்குள் செல்கின்ற போது என்ன நிகழ்கிறது என்று
விவரித்துக் கூறுகிறார்.

நோய்வாய்ப்பட்டு அல்லது வயது முதிர்ந்த காரணத்தால் இறக்கப்போகின்ற ஒருவரின் அருகில் – அது நண்பராகவோ, உறவினராகவோ, அல்லது நோயாளியாகவோ இருக்கலாம் – இறப்பு நேரத்தில் கூட இருந்து
இறக்கும்போது ஏற்படும் அறிகுறிகளையும் அந்த நேரத்து செயல்பாடுகளையும் தெரிந்து கொள்வது மிகவும் உதவிகரமாக இருக்கும். எங்களது பயிற்சியின் போது, இறக்கும்போது ஏற்படும் செயல்பாடுகளை பற்றியும் இறக்கும்போது அவர் இருப்பின் தளத்திற்கு திரும்புவது பற்றியுமே ஏகப்பட்ட கேள்விகள் எழுகின்றன.

ஒரு இறப்பை சந்திக்கும் நபர் கேட்கும் கேள்விகளில் மிக முக்கியமாக இடம் பெறுவது, என்னுடைய மரணம் எப்படிப்பட்டதாக இருக்கும் அல்லது நான் இறக்கும்போது எப்படி இருக்கும் என்பதாகத்தான் இருக்கிறது.
அந்தக் கவலையில் இருந்து விடுபடவும், இந்த வேதனையை பெருமளவில் குறைக்கவும், மருந்து பற்றிய விளக்கங்கள் கரிசனமான கவனிப்பு நண்பர்கள் எப்போதும் கூட இருத்தல் போன்றவை உதவுகின்றன.  

கிட்டத்தட்ட கோமா நிலையில்தான் பெரும்பாலும் மரணம்
நிகழ்வதால் அத்தருணத்தில் நடப்பவை யாவும் நமது சுயஉணர்வை இழந்த நிலையிலேயே நிகழ்கின்றன. அந்த நேரத்தில் ஒரு ஆன்மீக வழிகாட்டுதலையும் ஒரு பார்வையையும் அதற்கான அறிவையும் கொண்டு வருதல் மிகவும் சவாலான ஒரு செயலாக இருக்கிறது. அந்த நேரத்தில்
சரணாகதி மூலம் அடையும் அமைதி பற்றியும் அதற்கான வழிவகையை பற்றியும் பேசி அந்த இடத்தை தொடுதல் என்பது ஒருவருக்கொருவர் உதவி கொள்வதாக இருக்கும்.

இறந்து போதல்

நமது வாழ்க்கை முடிந்து போகும் தருணத்தில் நாம்
இறப்பு என்னும் காலகட்டத்தில் நுழைகிறோம், அது சில நாட்களோ அல்லது சில மணி நேரங்களோ பிடிக்கலாம். நோய் முற்றிப்போய் நாம் தளர்ச்சியடைந்து நமது உடல் அதன் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும்போது அதன் செயல்பாடுகள் விரைவாக சரிந்து முடிவுக்கு வரும். அதுதான் இறக்கும் சமயத்தில் மிக முக்கியமான தருணம். ஏனெனில் அந்த கணம்தான் இறைமைக்கான நேரம். அது எப்போதும் ஓஷோ சொல்வது போல ஞானம் கூடி வருவதற்கான தருணம்.

இந்த இறுதி நேரத்தில் நிகழும் சில முக்கியமான விஷயங்களை நாங்கள் கவனித்து குறித்து வைத்துள்ளோம். அவர்கள் இறக்கப் போகிறார்கள்
என்பதற்கான அறிகுறிகள் அவர்களது உடலின் செயல்பாடுகளில் தெரியும். ஆனால் அந்த அறிகுறிகள் ஒரே மாதிரியாக ஒரே வரிசையில் எல்லோருக்கும் இருக்காது. பொதுவாக பெரும்பாலான மக்களுக்கு அவர்களது உடல் மருத்துவத்தை மறுதலிக்க ஆரம்பித்து விடுகிறது. உச்சகட்ட மருத்துவ உதவி எதுவும் தேவைப்படுவதில்லை.

எது வாழும்போது சாதாரணமானதாக இல்லையோ அது சாகும்
போது சாதாரணமானதாக மாறி விடுகிறது.

உடல் தானே இறக்க தயாராகி விடும்போது இந்த உடல்ரீதியான மாறுதல் மிகவும் இயல்பான விஷயமாகும். அப்படி மாறும்போது கூட இருப்பவர்கள் கருணையுடன் புருவங்களை தடவிக் கொடுத்து, உதடுகளை ஈரப்படுத்திக்
கொடுத்து, உடலை திருப்பிப் போட்டு, அதை சுத்தமாக வைத்திருக்க உதவி, மென்மையாகவும் உண்மையாகவும் பிரியமாகவும் பேசுவதுதான் அவர்களுக்கு தேவைப்படுகிறது.

தன்னுணர்விலும், இருப்பிலும், அடையாளப்படுத்திக் கொள்வதிலும் குறிப்பிடத்தக்க நிலைமாற்றம் உடன்நிகழ்வாக நடைபெறுகிறது. மனோரீதியாக
ஒரு வேறுபட்ட தளத்தில் தன்னுணர்வு நுழைகிறது என்று நாங்கள் யூகிக்கிறோம். மேற்கத்திய விஞ்ஞானத்திற்க்கு மிகவும் தெரிந்த உடல்ரீதியாக வேறுபாடு மட்டுமின்றி, இந்த மாறும் தன்மை கொண்ட ஒரு வாகனம், இந்த உடல்மனம், இந்த உடலை சூழ்ந்துகொண்டு உடலினுள்ளும் ஊடுருவியிருக்கும் சக்தியானது நிலைமாற்றம் கொள்கிறது. இது புலன்கள், உணர்வுகள், கிரகிக்கும்
மற்றும் நினைவு கொள்ளும் சக்தி, தன்னுணர்வற்ற மனதின் பழக்கம், மற்றும் தன்னுணர்வு ஆகியவை அடங்கிய அனைத்துமாய் உள்ள மூலதாரம் ஆகும். இவை அனைத்தும் சேர்ந்தே தான் என்ற அடையாளம் உருவாகி உயிர் வாழவும் செயல்படவும் தேவையான அமைப்பாக இருக்கிறது.

திபெத்திய புத்த மதத்தவர்கள் சொல்வது என்னவென்றால்….

நாம் இறக்கும்போது எல்லா கூறுகளும் சிதைந்து போய்விடும்.

நாம் இறக்கும் செயல்பாடு மிகவும் சிக்கலானது,

நமது உடலோடும் மனதோடும் தொடர்பு கொண்டுள்ள

தொகுப்புகள் அனைத்தும் கரைந்து போய்விடும்……

அப்படி கரையும் ஒவ்வொரு நிலையிலும் அதன் தாக்கம்

மனதிலும், உடலிலும் ஏற்படும், அதன் வெளிப்பாடுகள் வெளி

அசைவுகளிலும், உள்முக அனுபவங்களிலும் பிரதிபலிக்கும்.

வாழ்வின் இறுதிகட்டத்திற்க்கு இந்த உடல்
தன்னைத்தானே எப்படி தயார் செய்து கொள்கிறது

உடல் வைட்டமின்களையோ சத்துக்களையோ உள்ளிழுக்க
முடியாமல் போவதுதான் உடல் இறக்கப் போகிறது என்பதன் முதல் அறிகுறி. உடலால் இனி இது போன்ற பொருள்களை ஜீரணம் செய்ய இயலாது. உண்மையில் இப்போதுள்ள கண்டுபிடிப்பின் படி இது போன்ற சமயத்தில் செயற்கையான சத்துக்களை உடலில் செலுத்துவது உடல் இறப்பை மேலும்
அசௌகரியமானதாக ஆக்குகிறது. உடல் சார்ந்த அறிகுறிகளில் உடலிலுள்ள செல்கள் கூட இறுதி நிலையை அடைகிறது. மருத்துவ சொற்களில் சொல்லப்போனால் ‘ வாழ்விலிருந்து வீழ்வது.’ உடலின் செல்கள் வளர்ந்து, முதிர்ந்து, இறந்து போவதில் ஒருவிதமான ஒழுங்குமுறையை கடைபிடிக்கின்றன. நாம் இறப்பின் அருகே வரும்போது
சக்திநிலை பெருகி உடல்ரீதியான செயல்பாடு குறைகிறது. செல்கள் இயற்கையின் இயல்பான தொடர்விளைவில் மாறுபாட்டை உணரும்போது தாங்கள் இனிமேலும் உடலின் வளர்ச்சியில் பங்கு கொள்ள வேண்டியதில்லை என்பதை உணர்ந்து தங்களது செயல்பாட்டை நிறுத்திக் கொள்ள ஆரம்பிக்கின்றன.

இறப்பின் விளிம்பில் உணவை எடுத்து அதை ஜீரணம் செய்து உடம்பிற்கு தேவையான சத்துக்களாக மாற்றுவது நின்று போகிறது. பதிலாக ஆன்ம
உணவை ஏற்று அடுத்த நிலை மாற்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய தன்னுணர்வு மற்றும் ஆன்ம அடையாளங்களை தயாரிப்பதில் சுயம் ஈடுபடுகிறது.

களைப்பு மற்றும் சோர்வு அதிகரிப்பதை உணரலாம். அவரால் தானாகவே நகரக்கூட முடியாது போகும். தனது படுக்கையில் தன்னை சரி செய்து
கொள்வதுகூட இயலாமல் போகும். கண்கள் திறந்து ஏதாவது ஒரு இடத்தில்
நிலைகொண்டிருக்கும். பலமணிநேரங்கள் சுயஉணர்வின்றி அமர்ந்திருப்பது நிகழும், ஏனெனில் அவர் இயற்கையின் வேறு ஒரு தளத்திற்கு சென்று விடுகிறார். சில நேரங்களில் இதுதான் அது போலிருக்கிறது என்று முணுமுணுப்பதை கேட்கலாம்.

தூங்குவதில் செலவிடும் நேரம் மெதுவாக அதிகமாகும். இறப்பு செயல்பாட்டின் போது தூங்கி விழிக்கும் செயல்பாடு சிறு குழந்தையினுடையது போல மாறிவிடும்.

உடலால் ஆக்ஸிஜன் குறைவாகவே உள்ளிழுக்கமுடிவதாலும் உடல் செல்கள் செயல்பாடு குறைவதிலும் இதுபோன்ற மாறுபாடுகள் சகஜம்.

உடலின் செயல்பாடுகள் குறையகுறைய சிறுநீர் வெளியேறும் அளவு குறையும், நாம் செய்வதன்றி தானாகவே உடலில் நிகழும் உடலின் வேலைகளிலும் குறைபாடுகள் தோன்ற ஆரம்பிக்கும். உடலின் கழிவுகள் அதிகம் தேங்கும். இந்த
அனைத்து பாதிப்புகளும் மூளையின் மையத்துடன் தொடர்புள்ளவையே – தூக்கத்தின் முறை மாறுவது உட்பட.

கேள்விகளுக்கு பதில் சொல்லாததும் சுயஉணர்வின்றி இருப்பதும் அடிக்கடி நிகழும் செயல்களாக மாறும். அவரால் தானாகவே எழுந்து அமர்வதுகூட
முடியாமல் போகும். இந்த கட்டத்தில் தங்களது அடிஆழத்தில் நிகழும் மாறுதல்களால் தங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பதை என்னுடன் சொற்களால் அல்லது உணர்வுகளால் பகிர்ந்து கொள்பவர்கள் எல்லோரும் வெளிப்புறத்தில் அது மனச்சோர்வு போல அல்லது தூக்கம் போல தோற்றமளித்தாலும், இது உண்மையில் சொல்லப்போனால் இறப்பு நெருங்கி வருவதால் ஏற்படும் உள்முகமான திருப்புதல் மற்றும் உள் தளத்தில் ஏற்படும் மிக ஆழமான
மாற்றங்களின் விளைவே என்று கூறுகிறார்கள்.

உடலின் இறுதிமுடிவு நெருங்கி விட்டதை குறிப்பிடும் மற்ற அறிகுறிகள்     

இந்த நிலையில் ஒருவருக்கு உடல் இயக்க கொந்தளிப்பு எனப்படும் நிகழ்வினால் பதட்டமாக இருப்பது நேரும். அவர் அடிக்கடி படுக்கைவிரிப்பை இழுப்பதும் அல்லது விரல்கள் அப்படியே நின்று போவதும் என இருப்பதை
கூட இருப்பவர் காணலாம். இது அடிக்கடி நிகழும் ஒரு செயலாக இருக்கக் காரணம் ரத்தம் மூளைக்கு செல்வது குறைவு படுவதாலும் மற்றும் அமிலத்தன்மை அதிகரிப்பது மற்றும் ஏற்படும் அதிரடி மாற்றங்களாலும் எனலாம்.

இறப்பவர் கூட இருப்பவர் அவரை உணர்வோடு தொடுவதும்
அவருக்கு ரெய்க்கி சிகிச்சை தருவதும் என்ற வகையில் அவரது சக்தி மண்டல பதட்டத்தை தணித்து அவருக்கு உதவலாம். அவரது தன்னுணர்வு தனது ஆழமான பரிமாணங்களில் செல்ல உதவும் இசையை இசைப்பதன் மூலம் அவரை அமைதிப்படுத்தி அவருக்கு உதவி செய்யலாம். இறக்கப்போகும் மனிதரின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு உள்ள ஆன்மீக தியான முறைகள், அல்லது
அவருடன் கூட மௌனமாக அமர்ந்து மூச்சை கவனித்தல் ஆகியவை அவரை அமைதிப்படுத்துவதை நான் எனது அனுபவத்தில் கண்டிருக்கிறேன். அன்பிற்குரியவரின் அன்பான அழைப்பு மற்றும் அவரது கைகளை எடுத்து நமது கைகளுக்குள் வைத்துக் கொள்வது ஆகியவையும் அந்த பதட்டத்தை
தணிக்கும்.

இறப்பு நெருங்கும் சமயம் அவருக்கு அறியும் திறன் குறைந்து போகும். நேரம், காலம், இடம், ஆள் ஆகிய யாவும் அவருக்கு மறந்து போகும்.
நான் பார்த்த விதத்தில் அவர் வேறுபட்ட கால நேர ஆள் அடையாள சூழலுக்கு, தன்னுணர்வின் ஆழமான தளத்திற்க்கு சென்றுவிடுகிறார். இந்த மனத்தின் தான் என்ற நினைப்புக்கும் நாம் கற்பனை செய்து வைத்திருக்கும் பிரிவினைக்கும் அப்பாற்பட்டு அவர் வேறுபட்ட ஆழமான தன்னுணர்வுக்குள் சென்று விடுகிறார். இறப்பின் இந்த நேரத்தில் நிகழ்பவைகளை வார்த்தைகளிலோ வடிப்பதோ அல்லது சொற்களில் விவரிப்பதோ மிகவும் கடினம்.  

பார்க்கப்போனால் இந்த வேறுபாடுகள் மிகவும் நுட்பமானவை. அவை மிக அழகான அசைவுகள், பார்வைகள், உடலில் பரவும் ஒளி, இருப்பின்
வெளிப்பாடு ஆகியவை அவர் அதனுடன் தொடர்பு கொண்டுள்ளதை காண்பிக்கும். அது போல அவர் ஆன்மீக நிலைமாற்றம் அடையும்போது அதை வெளிப்படுத்தும் வார்த்தைகள் கிடைத்துவிட்டால்கூட அவர் அந்த அருள்நிலையில் அதை சொல்ல முடிவதில்லை என்பதே எனது தெளிவு. பல சமயங்களில் அவர்களது கண்கள் நான் காணாத ஏதோ ஒன்றின் மீது நிலைத்து நிற்பதுடன் அவர்களது முகங்களில் வெளிப்படும் புன்னகை எந்த பயமும் எந்த பீதியும்
இல்லாமல் மிகவும் அழகானதாக, மிகவும் அற்புதமானதாக அமையும்.

சிறுநீர் கழிப்பதிலும் மலம் கழிப்பதிலும் அவர்களுக்கு கட்டுப்பாடு இல்லாமல் போகும், ஏனெனில் அந்த தசைநார்கள் தளர்வு கொள்ள ஆரம்பிக்கின்றன. அந்த செயல்பாடு நின்று போகிறது. ரத்தஓட்டம் குறைவதாலும், ஆக்ஸிஜன்
உள்ளிழுப்பு குறைவதாலும் பல்வேறு ஹார்மோன்களின் அமைப்புகளும் தங்களது செயல்பாட்டை நிறுத்துகின்றன. உடலிலுள்ள அனைத்து சக்திகளும் ஒரே மூச்சில் தேவையான ஒரே அமைப்பான நுரையீரலுக்கும் இதயத்துக்கும் மட்டுமே செல்கின்றன. கிட்னி, லிவர், கணையம் ஆகியவை நின்று போகின்றன. இவைகளின் செயல்பாடு குறைவதால் அது மேலும் மேலும் உடலின் மீது
அழுத்தமாக மாறி குறைவுபட்ட ரத்த ஓட்டத்தை நிறுத்துவதால் உடல் முழுமையாக தனது செயல்பாட்டை இழந்து முற்றிலுமாக நின்றுபோக வழிவகை செய்கிறது.

நாங்கள் கவனித்ததில் ரத்த ஓட்டம் குறைவு படுவதால் உடலின் நிறம் மாறுகிறது. அவரின் கால்களும் கைகளும் நிறமிழக்கின்றன. படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் மனிதரின் முதுகில் கறுப்பு திட்டுகள் உருவாகின்றன. அவை ரத்தம் அங்காங்கே புவிஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு நின்று
போவதால் ஏற்படும் விளைவுகள். விரல்களும் நகங்களும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நீலம் பாரிக்கின்றன. காய்ச்சலால் பொதுவாக இருப்பதில்லை என்றாலும், கால்களும் உள்ளங்கைகளும் குளிர்ந்து போவது சகஜம். அப்படி மாறினால், ரத்தஓட்டம் மிகவும் தேவைப்படும் உறுப்புக்களுக்கு மட்டுமே செல்கிறது, மற்ற இடங்களில் நின்றுவிட்டது என்பதற்கான அறிகுறியே இது.

……………………………..மீதமுள்ள 2 வது பகுதி அடுத்த மாதம்.