வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

1.

ஒரு அணை கட்டும் வேலைக்காக ஆள் எடுப்பதற்க்கான
எழுத்து பூர்வமான பரீட்சை நடந்த்து. அதில் முதல் கேள்வி,

ஹைட்ரோடைனமிக் என்றால் என்ன என்று
கேட்டிருந்தது.

அந்த வேலைக்கு சேருவதற்காக வந்திருந்த முல்லா
நசுரூதீன் அதை படித்து பார்த்து விட்டு, எனக்கு இந்த வேலை கிடைக்காது என்று
அர்த்தம், என்று எழுதினான்.

 

2.

ஒரே ஒரு வாரம் ஒரு இடத்தில் வேலை செய்தான் முல்லா. அவர்கள் அவனை வேலைநீக்கம் செய்து விட்டனர். ஆனால் இன்னொரு இடத்தில் வேலை
செய்வதற்காக இந்த முதலாளியிடம் நன்னடத்தை சான்று கேட்டான் முல்லா. அவர் அவனை புண்படுத்த விரும்பவில்லை, ஆனால் அதே சமயம் பொய் சொல்லவும் விரும்பவில்லை. எனவே யாராயிருந்தாலும் சரி, அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது முல்லா எங்களிடம் ஒரு வாரம் வேலை செய்தான். அதிலேயே நாங்கள் திருப்தியடைந்து விட்டோம் என்று எழுதி கொடுத்தார்.

நமக்கு எல்லாமே தெரிந்துதான் இருக்கிறது. நாம் சமூகத்தில் நடித்துக் கொண்டே இருக்கிறோம். ஆகவே முதலில் உண்மையான, நேர்மையான ஒரு
வாழ்வை வாழ ஆரம்பித்தால்தான் தன்னுணர்வு சாத்தியம்.