வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

1. முகத்தை மாற்றுவது

எப்போது – இரவில் தூங்கப் போவதற்கு முன்

காலம் – 5 -10 நிமிடங்கள்

முதல் படி – படுக்கையில் உட்கார்ந்து முகத்தை மாற்றி மாற்றிப் பார். சிறிய குழந்தைகள் செய்வது போல. அழகான, அசிங்கமான, மோசமான, பயங்கரமான என்பது போல செய்து பார். அப்போது உனது முகதசைகள் இறுக்கம் தளர்ந்து முகம் முழுவதும் தளரும். அதே சமயம் பல் வேறு விதமான சத்தங்கள் செய்து அசைந்தாடு.

இரண்டாவது படி – தூங்கப் போ.

மூன்றாவது படி – காலையில் குளிக்கப் போவதற்கு முன் கண்ணாடி முன் நின்று பத்து நிமிடங்கள் முகத்தை மாற்றி மாற்றிப் பார். கண்ணாடி முன் நின்று செய்வது மிகவும் உதவி செய்யும். உன்னால் பார்க்க முடியும், உன்னால் பதில் சொல்வது போல செய்ய முடியும்.

2. HALLELUJAH!  தொண்டை மற்றும் வயிறு இறுக்கத்தை விடுவித்தல்

எப்போது – எப்போதெல்லாம் தொண்டையில் கரகரப்பை உணர்கிறாயோ!

காலம் – 3 – 4 வாரம்

முதல் படி – தொண்டைக்கு

இரண்டு விஷயங்களை செய்ய ஆரம்பி. முதலில் எப்போதெல்லாம் தொண்டையில் கரகரப்பை உணர்கிறாயோ அப்போது சத்தமாக உளற ஆரம்பி. எந்த விதமான சத்தமாக இருந்தாலும் சரி, நீ எதை விரும்புகிறாயோ அந்த ஜிபரிஷ்ஷை செய். பாட விரும்பினால் பாடு. ஆனால் இந்த கணத்தில் நீ உனது தொண்டையை உபயோகிக்க வேண்டும். அர்த்தமற்ற சத்தங்களை செய்வது மிகவும் நல்லது, அது உனக்கு உதவும். ஏனெனில் அர்த்தத்தோடு இருக்கும் சொற்கள் மிகவும் குறைவு. ஆகவே லாலாலாலா அல்லது எது அந்த சமயத்தில் வருகிறதோ அது போல செய், மேலும் உனது உடலை நன்கு உணர்ந்து அதை லேசாக அசைந்தாட அனுமதி.

இரண்டாவது படி – வயிற்றுக்கு

உனது கண்களை மூடி எந்த இடத்தில் இறுக்கத்தை உணர்கிறாயோ இந்த இடத்தில் கைகளை வைத்து கொண்டு கைகளை மெதுவாக மேல் நோக்கி தொண்டையை நோக்கி கொண்டுவா. அந்த இறுக்கம் தொண்டைக்கு வந்தவுடன் அர்த்தமற்ற சத்தம் எதையாவது செய். அது தொண்டையில் இருந்தால் மிகவும் நல்லது, சத்தம் போடு. இல்லாவிடில் முதலில் அதை தொண்டைக்கு கொண்டு வா. அது வரும். அதை வழி நடத்து, அதனிடம் மேலே வா என்று கூறு. இதை மேல் நோக்கி கொண்டு வந்து தொண்டைக்கு கொண்டு வா. அதை அங்கே சேகரித்து பின் பாடலாக வெளிப்படுத்து.

இது சரியாவதற்கு இரண்டு மூன்று வாரங்களாகும், ஆனால் அது போகும். அது போய் விட்டால் பின் நீ மிகவும் விடுதலையாக உணர்வாய்.

FAR BEYOND THE STARS