வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

அன்பர்களே!

இன்று நாம் சமூகத்தில் அதிக காம இச்சை சார்ந்த பெண்ணை கொடுமைப்படுத்தும் குற்றங்களை கேள்விப்படுகிறோம்.

வேளாண் புரட்சிக்கு முன்பு பெரும்பாலான சாதாரண குற்றங்கள் உணவு சார்ந்தவையாக இருந்தன.. தொழில் புரட்சிக்கு முன்பு பெரும்பாலான சாதாரண குற்றங்கள் பணம் சார்ந்தவையாக இருந்தன. இவை இரண்டும் வெளித்தேவைகள்.

இன்று நாம் காணும் பெரும்பாலான குற்றங்கள் வன்முறை மற்றும் காமம் சார்ந்தவையாக உள்ளன. இது உளத்தேவை சார்ந்தது. இக்குற்றங்கள் அதிகபட்சம் கவனிப்பு அல்லது அங்கீகாரம் தேடியே நடத்தப்படுகின்றன.

இவைகளை களைய மனோவியல் மருத்துவத்தையும் தியானத்தையும் யோகாசனத்தையும் கொண்டு மன இறுக்கத்தையும் தாழ்வு மனப்பான்மை போன்ற மன சிக்கல்களையும் களையும் வழிமுறைகளை புதிதாக கண்டறிந்து இவைகளை தீர்க்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நடக்கும் குற்றங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

எனவே இக்குற்றங்களுக்குரிய தண்டனைகளை நாம் மனோவியல் சிகிச்சைக்களாக மாற்றியாகவேண்டும்.

நம் மன இறுக்கங்களை களைய ஓஷோவின் தியான‌முறைகள் சிறந்த வழி.

நேசத்துடன்,

நிர்தோஷ்.